பாட்டு – ஒரு பக்க கதை

 

கோவை எக்ஸ்பிரஸ் காற்றைக் கிழித்தபடி சீறிக் கொண்டிருந்தது. அதையும் மீறி காற்றில் மிதந்து வந்த பாட்டை எல்லோரும் ரசிக்காமலில்லை.

இளைஞன் ஒருவன் மிக அழகாகப் பாடியபடியே பிச்சை கேட்டு வந்து கொண்டிருந்தான்.

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாட்டு சரனைத் தாளம் போட வைத்தது.

“நல்லாத்தானே இருக்கான்.. ஒழைச்சு பொழைச்சா என்ன?’ என்று சிலர் முணுமுணுக்க, சிலர் நாணயங்களைப் போட்டுவிட்டு ஒதுங்க, அவன் சரனை நெருங்கினான்.

எதுவுமே பேசாமல் தன் பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை இளைஞன் கைகளில் திணிக்க, அவன் இவனை ஆச்சரியமாகப் பார்த்தான். மற்றவர்களோ இவனை ஏதோ பயித்தியக்காரனைப் போல் பார்த்தார்கள்.

சரன் மனசுக்குள் நினைத்துக் கொண்டான்.

“பிரபலமாகாததால் எல்லாரும் என்னைப் பயித்தியக்காரனைப் போல் பார்க்கிறார்கள். ஒரு மாதம் முன்பு நானும் இப்படித்தான் வேறு ரயிலில் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன்.

என் குரலை ரசித்த அந்த இசையமைப்பாளர், எனக்கு பின்னணி பாட வாய்ப்புக் கொடுத்தார். இன்று வயிறார சாப்பிடுகிறேன். இவனுக்கு என்னால் வாய்ப்புக்
கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு நாள் சாப்பாட்டுக்கு வழி பண்ண முடிந்ததே என்ற திருப்தி போதும்!’ என்று நினைத்துக் கொண்டான்.

- வளர்கவி (26-10-2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
நான் மருதானைச் சந்தி வழியாக வந்து பஞ்சிகாவத்தை ரோட்டில் திரும்பிக்கொண்டிருந்தேன். பகல் முழுவதும் ஓயாது ஓடும் ‘ட்ராலி’ பஸ்கள் இப்போது ஓய்ந்துவிட்டன. தெருவில் ‘கார்’களோ ‘பஸ்’ களோ ஒன்றையும் காணோம்.‘லாபாய் லாபாய்’ என்று கத்திக் கொண்டிருக்கும் வியாபார தந்திரிகள் தங்கள் கடைகளை ...
மேலும் கதையை படிக்க...
செம்பட்டை முடியுடன் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர், இரண்டு கைகளால் நாகஸ்வரத்தை ஏந்தி, தனது வெற்றிலைக் கறை படிந்த உதடுகளில் சீவாளியை வைத்து வாசிக்கத் தொடங்கினார். இவர்களையே ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த ராவின் உடல், மின்சாரம் பாய்ந்ததுபோல ஒரு கணம் குலுக்கிப்போட்டது. கண்களை மூடினார். எட்டு வயதில் ...
மேலும் கதையை படிக்க...
மேடும், பள்ளமுமாக, வளைந்து நெளிந்து சரிவாய் காட்சியளிக்கும், தேயிலை தோட்டத்தை ஒட்டியதாகக் காணப்படும், கோத்தகிரியில் உள்ள பல்கீஸ் பாத்திமாவுடைய பங்களா வீடு. சூரிய வெளிச்சம் நன்கு பளிச்சிடுகிறது, ஆனாலும் குளிர் உடலை குத்தித் துளையிடும் நவம்பர் மாதம் அது. பங்களா வீட்டின் முன்பிருந்து ...
மேலும் கதையை படிக்க...
நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் எட்டு மணியாகவில்லை. தொழிற் சாலையின் பெரும் வாயிற்கதவுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மனோகரன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்திலிருந்து ஒலி எழுப்பினான். உடனே இரும்புக் கதவுகள் வேகமாகத் திறந்தன. அவற்றினருகில் நின்று கன்னங்கள்வரை கத்தையாக மீசை வளர்த்திருந்த காவலாளி விறைப்புடன் சல்யூட் அடித்தார். ...
மேலும் கதையை படிக்க...
பிழைப்பு
ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே…
வாழ்விழந்தும் விருந்து
வசனம்
ஓடாமல்போன இயந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)