பாட்டில்! – ஒரு பக்க கதை

 

தூங்கி எழும்போதே காலில் இடித்தது. எல்லாமே காலி பாட்டில்கள். பொதுவாக மாதம் 25 அல்லது 30 பாட்டில்கள்தான் சேரும்.

இந்த மாதன் எங்கள் பேச்சுலர் ரூமில் புதிதாய் ஒரு விருந்தினன் வந்தான்…தங்கினான்…செலவுகள் ஏற்றினான்…பாட்டில் எண்ணிக்கையைக் கூட்டினான், சென்று விட்டான்.

இப்போது மாதக் கடைசியில் பர்ஸ் பல்லைக் காட்டுகிறது.பர்ஸில் மூன்று ஐந்து ரூபாய் காயின்கள் தான் இருந்தன. ஒரு வேளை டீ, தம்முக்குத்தான் சரியாய் இருக்கும். மதியத்துக்கு?

மூணு தம் வாங்குவோம்…ஆபிஸ் கேன்டீன்லேயே டீயைக் குடிப்போம்( உவ்வே). முடிவெடுத்து பேண்டை மாட்டினேன்

‘தம்பி’ என்ற குரல் மேன்ஷனுக்குக் கீழே கேட்டது. பாட்டில் வியாபாரி. இப்போதைக்கு கடவுள்!

அவருக்கு நானும், எனக்கு அவரும் ரெகுலர் கஸ்டமர்ஸ். வழக்கம் போல பாட்டில்களை வாரி சாக்குப் பையில் போட்டார். பத்து ரூபாயை நீட்டினார்.

இன்னொரு பத்து ரூபாய் கொடுங்க, அதிகமா இருக்கு என்றேன். சிரித்துகொண்டே இருபது ரூபாய் தாளை நீட்டினார்.

ஏன் சிரிக்கிறீங்க?

ஒண்ணுமில்லை தம்பி…உங்க வயசுல நான் கூட அதிக பாட்டில் விலைக்கு போட்டிருக்கேன். அதான் இந்த நிலை..!

- டேனியல் வி.ராஜா (ஜூன் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்... அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் ...
மேலும் கதையை படிக்க...
***ஆணின் நட்புக்குள் உறவு வார்த்தைகள் ஆட்கொள்ளும். ஆனால் பெண்ணின் நட்புக்குள் ஆழமான அன்பு ஆட்கொள்ளும்*** இருபது ஆண்டுக்குபின் தான் படித்த கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் தேவி. உள்ளே நூழைந்தவுடன் மகள் அருணாவின் சேர்க்கைகாக வந்ததை மறந்து தன் கல்லூரிநாட்கள் நினைவுகளோடு நடந்தாள். அப்போதிருந்த ...
மேலும் கதையை படிக்க...
ஜெகன் ஆகப்பட்ட இந்த இளைஞனுடைய இயற்கையை நெருங்கிப் பார்த்தால் ஒரு சமகாலச் சராசரி இளைஞனின்றும் வேறுபட்ட ஒரு ஆதர்ஸன், இலட்சியன் என்ற வகைக்குள் வரமாட்டான். புதுசுகளில் ஆர்வம், வர்ணங்களால் ஈர்க்கப்படுதல், சினிமாமேல் விமர்சனங்களற்ற கவர்ச்சி, நடிகைகள் ஆராதனை, அவர்களின் அணுக்கத்தில் ஆனந்தபரவசமடைதல், ...
மேலும் கதையை படிக்க...
கரூர், பழையபஸ் ஸ்டாண்ட், லைட்ஹவுஸ் தியேட்டர், திருமாநிலையூர், சுங்ககேட், மில்கேட், தாந்தோனிமலை, அரசுக்கலைக் கல்லூரி, காளியப்பனூர் கலெக்டர் ஆபீஸ், RTO ஆபீஸ் எல்லாம் தாண்டிய பின் வெங்கக்கல்பட்டியைக் கடந்து செல்லும் அத்தனை வாகனங்களும் வேகத்தைக் கூட்டி விடும். அதற்கு அப்பால் செல்லாண்டிபட்டி ...
மேலும் கதையை படிக்க...
அடிக்காதீங்க… அவன் என் மகன்!
விருதுகள் வழங்கும் அமைப்பாளரின் அந்த வார்த்தைகளை ஆசிரிய் பொன்னம்பலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவரைத் திக்குமுக்காட வைத்திருந்தன. தில்லியிலிருந்து சென்னை வரும் ஒரு புகைவண்டியின் அன்ரிசர்வ்ட் பெட்டியின் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த அவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. மனமோ அன்று காலையில் நடந்தவற்றைக் கசப்புடன் ...
மேலும் கதையை படிக்க...
காலம் காலம்
தோழி
ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்
2C –பஸ் ரூட்
அடிக்காதீங்க… அவன் என் மகன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)