பரிசோதனை – ஒரு பக்க கதை

 

”ஹலோ! இது ராஜா ராமனா?”

மறுமுனையில் ராஜாராமன். ”ஆமாம், நீங்க?’

”நான் ராகம் ஆஸ்பத்திரியிருந்து டாக்டர் சம்பத், நீங்கள் வயிற்றுல ஒரு வித்தியாசமான வலின்னு வந்து மருந்து மாத்திரை வாங்கிட்டுப் போனீங்களே, சரியாயிட்டுதா?”

”நூறு சதவீதம் சரியாயிட்டுது. நினைவு வெச்சு கேட்டது ரொம்ப சந்தோஷமா இருக்குது டாக்டர்” என்று சம்பாஷனையை முடித்தார்
ராஜாராமன்.

நர்ஸ் வில்லி, டாக்டரைக் கேட்டாள். ”ஏன் டாக்டர் அந்த பேஷண்ட் மேல் என்ன அவ்வளவு அக்கறை…போன் போட்டெல்லாம் விசாரிக்கிறீங்க?’

‘அக்கறையெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கும் அதே வலி இருக்குது. புதுசா ஒரு சில மருந்து மாத்திரையை அவருக்கு கொடுத்து டெஸ்ட்
பண்ணினேன். அவருக்கு குணம் கிடைச்சா அதை நானும் எடுத்துக்கலாமுன்னு இருந்தேன். அதுக்காகத்தான் இந்த விசாரிப்பு..!

- வி.சகிதா முருகள் (10-10-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க ஆரம்பித்தனர். ‘அரை மைல் தூரத்தில் புதியதாக மால் திறந்திருக்கிறார்கள் கூட்டிக் கொண்டு போய் வா’ என்றாள் பாட்டி கோமதி. மும்பையிலிருந்து கோடை விடுமுறைக்காக வந்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
தமிழகத்தில் போன வருஷமும் சரியான மழை பொழிவு இல்லாததினால் ஏரிகளும், கண்மாய்களும், குளங்களும் வறட்சியில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. எங்கும் வெக்கையின் தீட்சணம் கொளுத்துகிறது. நாட்டின் சராசரி வெப்பம் 110°F. சென்னை குடிநீருக்கு ஆதாரமான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம், ...
மேலும் கதையை படிக்க...
குவைத் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ‘குப்’பென்று உஷ்ணம் பரவுவதை உணர்ந்தார் சிவானந்தம். அவர் அரபு நாடுகளுக்கு வருவது முதல் தடவை. அவர் சென்றதெல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான். விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது முதலில் அங்கெல்லாம் தெரிவது குளிர்ச்சிதான். இவை பாலைவனங்களாக ...
மேலும் கதையை படிக்க...
ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான். பாதிக்கு மேல் பண்டம் பாடிகள் மேய்க்கிற வறண்ட பூமியானாலும், மிச்சமிருந்த பூமியில் நல்ல விளைச்சல் காணும். கன்னியாத்தா கோயிலை ஒட்டியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
இரட்டைக்கிளவி
தமிழாசிரியர் தங்கத்தமிழன் காலையில் இருந்தே கடு கடுவென இருந்தார். அவர் ஒரு வாரமாக படிச்சு படிச்சு சொல்லிக் கொடுத்த இரட்டைக்கிளவி வகுப்பில் யாருக்குமே புரியவில்லை என்பதுதான் அவர் கோபமே. வீட்டில் உட்கார்ந்து, காற்றில் பட படவென்று அடித்துக் கொண்டிருந்த மாதாந்திரத் தேர்வுத் தாள்களை ...
மேலும் கதையை படிக்க...
ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்
தூர்
எதிரி
நரிகள்
இரட்டைக்கிளவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)