பம்பு ரூம் – ஒரு பக்க கதை

 

பிரலப நடிகர் சாம்புவின் வீட்டிற்கு வருமான அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். பூஜை அறை, பீரோ, கப்போர்டு, சீக்ரெட் அறை என்று எல்லா இடங்களையும் சோதனை இட்டனர்.

”…ம்…ஹூம்..”என்றும் ”ஒன்றுமே இல்லை’ என்றும் ஒவ்வொரு அதிகாரியும் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வந்தனர்.

‘சரி’ என்று சாம்புவிடம் சொல்லிவிட்டு ஐந்து அதிகாரிகளும் வெளியே வந்தனர். கட்டியிருந்த அவர்கள் வீட்டு நாய் கயிற்றை இழுத்துக் அழிச்சாட்டியம் செய்தது. ”ஏன் நாய் திமுறுது! ரெஸ்ட்லஸ்ஸா இருக்கு” என்று அதிகாரி வினவினார்

‘எப்பவும் அதோட கெட்டிலிலதான் கட்டுவோம். இன்னைக்கு அய்யா பம்பு ரூம்ல கட்டச் சொன்னார். புது இடமில்ல.. அதான் அதுக்குப் புடிக்கலே’ என்றான் வேலையாள்.

‘புது இடமா’ என்று யோசித்த அதிகாரி பம்பு ரூமை சோதனையிடச் சொன்னார்.

அங்கே குவியலாய் கள்ளப் பணமும் நகைகளும் கொட்டிக் கிடந்தன..!

- மு.சிவகாமசுந்தரி (ஏப்ரல் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
வராந்தாவில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் அம்பலவாணன். அன்று முதியோர் இல்லத்தில் பார்வையாளர்கள் நாள் என்பதால் அவரவர் பெற்றோரை பார்க்க தங்கள் மகன், மகள் பேரப்பிள்ளைகள் என எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் அம்பலவாணன் மட்டும் தனியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் அவருக்கு ...
மேலும் கதையை படிக்க...
அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும் இல்லை. சட்டென உருண்டு போய் ...
மேலும் கதையை படிக்க...
தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ? பாவாடைக்கு மிகவும் கவலையாக இருந்தது. அதுக்காக பூமாதேவி என்ன கருணையா பொழியப்போகிறாள்? கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை ஒரு பெரிய கரண்டியால் கலக்கிவிட்டு, ஒருசொட்டு உள்ளங்கையிலும் விட்டு நக்கிப்பார்த்தான் பாவாடை. உப்பு ...
மேலும் கதையை படிக்க...
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் க்ரிகோரி ரபாஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்: முரளிதரன் செனட்டர் ஓனெசிமோ சான்செஸ் இறப்பதற்குச் சரியாக ஆறு மாதம் பதினோரு நாட்கள் மிச்சமிருந்தபோது வாழ்க் கையிலேயே தான் மிகவும் விரும்பிய பெண்ணைச் சந்தித்தார். ரோஸல் டெல் வெர்ரி கிராமத்தில் அவளைச் சந்தித்தார். ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். பேராசிரியரை அழைத்துவரக் குமார் கிளம்பியபோது என்னையும் அழைத்தார். ‘வாங்க, சும்மா ஒருநடை போய்ட்டு வந்திருவோம்… இங்க இருந்தென்ன செய்ய போறிய? ’. நான், ’அருணா வர்ரதா சொல்லியிருக்கா. வர்ரப்ப இங்க இருக்கலாமேன்னு…’ என இழுத்தேன். ‘ஆமா நீங்க இருந்து ...
மேலும் கதையை படிக்க...
தப்புக்கு தண்டனை!
நினைவிலாடும் சுடர்
விரல்
காதலை மீறி நிலைத்திருக்கும் மரணம்
மத்துறு தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)