பணம் வந்தால்

 

“என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான்.

“பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ என்னடா என்றால் தம்படி இல்லாமல் ஓசிக்கேஸ்களுக்காக உயிரைக் கொடுக்கிறே. இதுகளும் ஓசின்னதும் கரெக்டா ஐந்து மணிக்கே வந்துடறதுகள். ஆதாயம் இல்லாமல் எதுக்கு இதுகளைக் கட்டிட்டு மாரடிக்கிறே?”

அண்டை அயல் வீடுகளில் உள்ள நாலைந்து சிறுவர்கள் அவனிடம் பாடம் படிக்க வருவார்கள். அவனும் சொல்லிக்கொடுப்பான். அதுதான் அவன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

அம்மா சொல்வதும் நியாயமாகத்தான் பட்டது ராமதாஸுக்கு. ட்யூஷன்பீஸ் இருபது ரூபாய் என்று வைத்தால் கூட மாசம் நுhறு ரூபாய் கிடைக்குமே ஐந்து பையன்களுக்கு, வீட்டுச் செலவுகளுக்கு உபயோகப்படுமே!

அன்று மாலையே அதைச் செயல் படுத்தினான். பையன்களிடம் சொல்லியனுப்ப, அவர்களின் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டு, ரெகுலர் ட்யூஷனாகவே வைத்து விட்டார்கள்.

ஒரு மாதம் சென்றிருக்கும்.

ராமதாஸ் கடைத்தெருவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கையில் விவேக்கின் அம்மா கூப்பிட்டாள்.

“சார்! ஒரு நிமிடம்.” என்று அவனை நிறுத்தியவள், தினமும் ட்யூசன் போறேன்னு சொல்லிட்டுப் போறானே தவிர விவேக்கிற்கு ஸ்கூலில் மார்க் ஒன்றும் ஏறவில்லை. கொஞ்சம் கவனிச்சு சொல்லிக் கொடுங்க” என்றாள். அதற்குள் அவளுடன் இருந்த சதீஷின் அம்மா குறுக்கிட்டாள்.

“நான் கூடக் கேட்கணும்னு இருந்தேன். என் பையன் அங்கே வந்து படிக்கிறானா, இல்லே உங்களை ஏமாற்றிவிட்டு விளையாடப் போயிடறானா? கணக்கிலே முன்னைக்காட்டிலும் கம்மியா மார்க் வாங்கியிருக்கிறானே?”

ராமதாசுக்குச் சுருக்கென்றது. சமாளித்துக்கொண்டு, “கவனிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு விருவிருவென்று நடந்தான். இருந்தாலும் அவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்தது.

“சும்மாவா? மாதம் இருபது ரூபாய் அழுகிறோம்! ஒழுங்கா சொல்லிக் கொடுக்காமல் என்ன பண்றார் இவர்? அதான் உறைக்கட்டும் என்று சொன்னேன்…..”

ஒருமாதத்திற்கு முன்பு வரை அவன் எதிரில் வரக்கூடத் தயங்கியவர்களா இப்படிக் கன்னத்தில் அறைவது போல் பேசுகிறார்கள்!

அவனுக்குப் புரிந்தது.

இலவசமாய்ச் சொல்லிக் கொடுத்த போது மதிப்பும், மரியாதையும் இருந்தது. இப்போது ……. பணம் வருகிறது மரியாதை போய்விட்டது. இரண்டில் ஏதாவது ஒன்றுதான் கிடைக்கும் போலிருக்கிறது!

அடுத்த மாசமே அவன் ட்யூஷன் பீஸ்களைத் திருப்பியனுப்பிவிட்டான்.

- 12-03-1987 

தொடர்புடைய சிறுகதைகள்
திருமணம் முடிந்த கையோடு , சூர்யா தன் தாயார் சிவகாமி அம்மாவை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தான் . ''இல்லேப்பா ,இங்க வீட்டை போட்டுட்டு எப்படி வர்றது ?சும்மா கிடந்தா வீடு வீணாய் போயிடும்லே ''என்றாள் . ''அம்மா ,உங்களுக்கு வயசாயிட்டு ,இனிமேலும் நீங்கள் ...
மேலும் கதையை படிக்க...
தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார், யார் வந்திருக்கிறார்கள் என்று!” தீர்த்தா அவசரமாக வெளியில் வந்து பார்த்தபோது சுஜா நின்றிருந்தாள், தலை நிறையப் பூவும் வாய் நிறையச் சிரிப்புமாய்! நமக்குத் தெரிஞ்சு, கவுன் ...
மேலும் கதையை படிக்க...
'யெய்யா....அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு ...புழச்சு வந்தியே "என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . "அப்பத்தா ,சும்மா புலம்பாதே ,,பாவம் அன்பு அவனே மனசொடிஞ்சு வந்திருக்கான் ..அவனை இன்னும் கஷ்டப்படுத்தணுமா .ஆறுதலா பேசுவியா ,புலம்பிகிட்டு "அதட்டினான் அன்புவின் நண்பன் அசோக் கிராமத்து ...
மேலும் கதையை படிக்க...
“டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ... பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்” உற்சாகமாக வரவேற்றார். “குட் ஈவினிங், எங்கே சார் ஒய்ப் இல்லே?” ‘இருக்கா, இருக்கா அவ உலகத்திலே ஐ மீன் அடுப்படியிலே.’ அதைத் தொடர்ந்து க்ளுக்’ என்று சிரித்தாள் ...
மேலும் கதையை படிக்க...
சரவணனுக்கு ஏக்கமாக இருந்தது யாராவது ‘மணி என்னவாகிறது?’ என்று கேட்கும் பொழுது இடது கையை உயர்த்திப் பார்த்து மணி சொல்லும் மற்ற மாணவர்களை பார்க்கும்பொழுது அவனுக்கு ஏக்கமாக இருக்கும். அவன் வகுப்பில் அவனைப் போல் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்ற மாணவர்கள் எல்லோருமே ...
மேலும் கதையை படிக்க...
மறுபக்கம்
மெழுகுவர்த்திகள்
நண்பன்
கதையாம் கதை
கைக்கடிகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)