பணமா..! பாசமா..! – ஒரு பக்க கதை

 

பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை விடும் ஆட்டோவிற்கு அட்வான்ஸ் தொகை ரூபாய் ஐநூறு கேட்டவுடன் பிரதீப்பிற்கு கோபம் தலைக்கேறியது.

இதுக்கெல்லாமா அட்வான்ஸ்? ஒரு வேளை அட்வான்ஸ பணத்தை வாங்கிவிட்டு ஆட்டோகாரர் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரவில்லை என்றால்…

இரவு முழுவதும் மன உளைச்சலுடன் பருண்டு புரண்டு படுத்த பிரதீப் காலையில் ஆட்டோகாரரிடமே கேட்டு விடுவது என்ற தீர்மானத்துடன் படுத்தார்.

காலையில் ஆட்டோகாரரிடம் வாதம் புரியச் சென்ற பிரதீப் சத்தமில்லாமல் ஆட்டோகாரர் கேட்ட அட்வான்ஸ் தொகையைத் தந்துவிட்டுத் திரும்பியதை அவர் மனைவி தேவி ஆச்சர்யத்துடன் பார்த்து கேட்டே விட்டாள்.

‘ஆட்டோகாரர்ட்ட என்ன பேசினீங்க..அவரு கேட்ட பணத்தை ஏன் கொடுத்துட்டு வந்தீங்க?’

’என்ன சார் உங்க குழந்தையையே என்னை நம்பி ஒப்படைக்கிறீங்க, கேவலம் அட்வான்ஸ் தொகையை ஒப்படைக்கப் பயப்படுறீங்களேன்னு சொன்னார்’ என பிரதீப் சொன்னதும், தேவியும் வாயடைத்து நின்றாள்.

- ச.ஜான் பிரிட்டோ (பெப்ரவரி 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். ...
மேலும் கதையை படிக்க...
கடவுள் மறுப்புக் கட்சிக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். மார்கழிமாதப் பஜனைக்கு எவ்வளவு பேர் கூடவார்களோ அந்தக் கணக்குக்கு மேல் ஜனங்கள் இந்த கூட்டத்தில் கூடினார்கள்; அதில் வேடிக்கை என்னவென்றால், மார்கழி பஜனையில் சேர்ந்து கொண்டு தாளம் போட்டவர்களே இந்தக் கூட்டத்திலும் ...
மேலும் கதையை படிக்க...
அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு மனிதனை எப்படி மிருகமாக்குகிறது. கண நேரத்தில் உணர்ச்சி வயப்பட்டு அவன் செய்யும் ஒரு தவறு அவனை இந்த நிலைமைக்கு கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
வன்னியார் ஒழுங்கையிலுள்ள தனியார் கல்விநிலையமொன்றிலே மகளை இறக்கிவிட்டு அப்படியே அதுபோய் பிரதான வீதியைச் சந்திக்குமிடத்திலே இடதுபக்கம் திரும்பி நேரே மடத்தடிச்சந்தி சுற்றுவட்டத்தைத் தாண்டும்வரை அது ஓர் ஒருவழிப்பாதை என்பதை நான் கவனிக்கவில்லை.'சொய்......ங்!' என்று போக்குவரத்துப் பொலீசின் விசில் சப்தம் காதிலே ஒங்கியறைந்தபோதுதான் ...
மேலும் கதையை படிக்க...
ஈஸ்வரி மட்டையைப் பிண்ணிக்கொண்டிருந்தாள். காலையிலிருந்து இரண்டு கீற்று கூட முடியவில்லை. குத்து வைத்து எத்தனை நேரம் வேலை பார்ப்பது? அடிவயிற்றில் வலி பொறுக்கமுடியவில்லை. எழலாம் என்றாலோ காலும் இடுப்பும் ஒத்துழைக்கவில்லை. கைகளைத் தரையில் ஊன்றி எழப்பார்த்தாள். அடிவயிற்றுக்கும் கீழே வலித்தது. அந்த இடத்தில் ...
மேலும் கதையை படிக்க...
சகபயணி
உள்ளும் புறமும்
பேசிய இதயம்
வசூல் ராஜாக்கள்
கொள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)