அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.
அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.
“நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.
“அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.
பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.
அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.
“நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்குச் சந்தோஷம் வருமா?” என்றார் கோபமாக.
“நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே!”
குயவருக்கு புரிந்தது.
- நவம்பர் 2013
>
தொடர்புடைய சிறுகதைகள்
முன்குறிப்பு: இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் காலியாக ஒருக்களித்துப் படுத்திருக்கும் நிலங்களையும் சுற்றி வளைத்துப்போடுகிறவர்கள் இல்லாத காலத்தில் நடந்தது.
"இதுதான் நாம வாங்கப்போற நிலம்' என்று திருவேங்கடம் காண்பித்த நிலத்தைப் பார்த்ததும் சரோஜாவுக்கு திக்கென்று இருந்தது. கண்ணுக்கு எட்டிய ...
மேலும் கதையை படிக்க...
வழக்கமாகத் தேநீர் அருந்-தும் ராஜகீதம் ரெஸ்டாரென்ட்டுக்குச் சென்றிருந்தான் ஜீவகாருண்யன். அலுவலகத்தில் வாங்கி வந்து பருகுவதைத் தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, கண்ணாடி டம்ளரில் அருந்தும் சுவை, ஃப்ளாஸ்க்கில் வாங்கி வந்து பருகும் போது இருப்பதில்லை. இரண்டாவது, பரிமாறும் பெரியவர் சங்கரனின் கனிவான ...
மேலும் கதையை படிக்க...
அவர் ஒரு துறவியாக இருந்தார். இலக்கின்றித் திரிபவராக, அங்கிங்கெனாதபடி பரவிக்கிடக்கும் இறைமையை இரு கைகளாலும் அள்ளிப் பருகுபவராக. பெயரின்றி, இடமின்றி, அதனால் முகவரியின்றி. எங்கும் அதிக நாட்கள் இருந்ததில்லை. கண் மூடி அமர்ந்து மலைகளில், அருவிகளின் அருகில், அடர்ந்த பசுந்தோட்டத்தில் தியானிப்பதும் ...
மேலும் கதையை படிக்க...
திருவேங்கடம்-சரோஜா தம்பதியினர் மிகவும் சிரமத்துடன் மணவாழ்க்கையை ஆரம்பித்தனர். யார் துணையும் இல்லாமல் காலை உந்தி விசை கொடுத்து, தம் பிடித்து முன்னேற வேண்டிய வாழ்க்கை. போராட்டம், பசி, பட்டினி, வறுமை இவற்றோடு ஆரம்பமான தாம்பத்யம். ஒவ்வொரு பைசாவையும் சேமிக்க வேண்டும். எதையும் ...
மேலும் கதையை படிக்க...
அவருக்கு மிகவும் இரக்க சுபாவம்.
தன்னிடமிருப்பதை யெல்லாம் பிறருக்கு வாரி வழங்குவதில் ஒரு திருப்தி,
கேட்டால்தான் தர வேண்டுமா? கேட்காமலே தருவதுதானே ஈகை என நினைத்தார்.
விதவிதமான பழங்களை வாங்கி வைத்துக் கொண்டு கடைவீதியில் அமர்ந்தார். ‘பழம் வேண்டுபவர்கள் வாருங்கள். இலவசமாய்ப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று ...
மேலும் கதையை படிக்க...
முன்குறிப்பு: இது, முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு. ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால், அதற்கு இந்தக் கதையில் வரும் நாய்கள் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது!
அந்த நிறுவனத்தில், நிதித் துறை மேலாளர் கணேசனுக்கு எல்லோரும் ...
மேலும் கதையை படிக்க...
கொடுப்பதும் எடுப்பதும் – ஒரு பக்க கதை