நீங்கதான் கடவுள் – ஒரு பக்க கதை

 

புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை.

தீர்மானத்தோடு ஒவ்வொரு கடையாக ஏறி ஏறி இறங்கினான். தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஷுவில் இருக்கும் லேஸ் கூட வாங்க முடியாது என்பதை உணர்ந்தவன், அந்தக் கடைகளையே ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் தோளில் யாரோ கைப்போட, திடுக்கென திரும்பிப் பார்த்தான். “இங்க என்ன பார்த்துக்கிட்டிருக்க?’ என்று கேட்டாள் பெண்மணி ஒருத்தி.

“அடுத்த மாசமாவது நிறைய காசு சம்பாதிச்சு, ஷு வாங்கணும்னு வேண்டிக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

அவன் சொன்ன அந்த வார்த்தைகளில் உண்மையும் இருப்பதை உணர்ந்தவர், நேரே தன் கடைக்குள் சென்று அந்த சிறுவனின் காலுக்கு ஏற்றவாறு அழகிய ஷு ஒன்றை அவனிடம் தந்தாள். அந்தச் சிறுவனுக்கோ ஒரே குஷியாகி விட்டது. அவன் கண்ணில் பட்ட சந்தோஷத்தைப் பார்த்த அந்த பெண்மணி, சிறுவனிடம், “நான் யார்னு தெரியுமா?’ என்று கேட்டாள்.

தான்தான் அந்தக் கடைக்கு முதலாளி என்று கண்டுபிடித்து விடுவான் என்று எதிர் பார்த்திருந்த சமயத்தில்…

சற்றும் சளைக்காமல், அடுத்த நொடியே வந்தது பதில், “நீங்கதான் கடவுள்’

– பி.கே. அருணா, திருச்சிராப்பள்ளி. (திசெம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு 8:00:02 இலிருந்து யாராவது புண்ணியவான் 'கொமென்ட்' போடுகிறானா என்று பார்க்கத் தொடங்கும் சாதாரண பதிவன். இரண்டு மூன்று 'அப்பாவிகள்' ...
மேலும் கதையை படிக்க...
சத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன்என்று நம்பி இந்த ஊரில் அவன் அலைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு கடன்கொடுத்தவன் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக் கொள்வதற்காக ஒரு மனோதத்துவநிபுணரை அணுகுவானேயானால், அவனுக்கு அந்த மருத்துவரால் உணர்த்தப்பட வேண்டியமிக முக்கியமான ...
மேலும் கதையை படிக்க...
அந்த மலையின் சரிவில் இறங்கிக்கொண்டிருந்த ஜானுக்கும் ரவிக்கும் குளத்தில் தண்ணீரில் தத்தளித்துக்கொடிருந்த அந்தச் சின்ன நாய்க்குட்டியை பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. சரிவான குளத்தின் விளிம்பில் படிந்திருந்த பாசி வழுக்கியதால் அதனால் ஏறமுடியவில்லை. ஊட்டியின் கடும் குளிர் அதனை மேலும் வாட்டியது. “ஜான் எப்பவும் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன் அதிகாலைமுதலே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினாபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும் , குதிரைகளிலும் ,மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி அரண்மனையை சூழ்ந்து கொண்டது.அரண்மனையில் இருநாட்களுக்கு முன்னரே பரபரப்பு பெருகி ,அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் ...
மேலும் கதையை படிக்க...
1910 "டேய்! இந்தக் கல்லு முடியுமா, பாரு!" "இதைத்தாண்டா இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருக்கோம். இனிமே இது வெறும் கல் இல்லே. சாமி!" அந்தக் கருங்கல்லை ஒரு பெரிய மரத்தடியில் நட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த சிவப்புத் துண்டை அதன்மேல் போர்த்தினார்ககள். மண் தரையில் விழுந்து, தலைமேல் ...
மேலும் கதையை படிக்க...
சின்னாம்பி
நான் ஒரு பூஜ்ஜியம்
உயிர்களிடத்தில்…
களம்
கடற்கரைப் பிள்ளையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)