நியாயமே! – ஒரு பக்க கதை

 

பத்தாயிரம் ரூபாயை பார்த்திபன் வைத்தபோது, நன்கொடைவ சூலிக்க வந்தவர்கள் வாயைப் பிளந்தனர்.

அந்த ஊரில் பண்டிகை, புத்தாண்டு, பொங்கல், தலைவர்கள் பிறந்த நாளெனவிழாக்கள் நடக்கும். அப்போது ஆட்டம்,
பாட்டம், கொண்டாட்டம்தான்.

நான்கைந்து குழுவினர் தனித்தனியே நன்கொடை வசூலிப்பர்.

ஆர்க்கெஸ்ட்ரா, நாடகம், கூத்து, நடனம் நடத்தி ஊரையே அமர்க்களப்படுத்துவர்.

ஆனால் இதுவரை ஒருரூபாய் தந்ததில்லை பார்த்திபன். சரித்திரமே மாறியதோ? பத்தாயிரம் ரூபாயை எண்ணி வைக்கிறாரே!”

”உங்க பெயருக்கு ரசீதுதந்திடலாமா சார்?”

”எழுதுங்க அதுக்கு முன்னால நீங்க ஒருவிஷயத்துக்கு சம்மதிச்சா”

‘என்ன விஷயம் சார்?”

”நம்ம ஊர் பள்ளிக்கூடம் இடிஞ்சு விழற நிலைல இருக்கு. ஆடம்பரத்துக்கு வசூலிக்கிற இந்தத்தொகையை நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குச் செலவழிப்பதாக இருந்தா…ரசீது எழுதுங்க…’

பார்த்திபன் சொல்ல, அனைவர் புத்தியிலும் சுரீர் என ஒரு உணரல்.

நியாயம்தானே?

‘அறிவுக் கண்ணைத் திறந்தீங்க. நன்றி சார்” என ரசிது எழுதினர்

- தமிழ்நாயகி (28-8-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார். அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார். “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார். “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய ...
மேலும் கதையை படிக்க...
1 அடைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத - மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால் தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனனவி, பத்து வயதுச் சிறுவன், ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது ...
மேலும் கதையை படிக்க...
இன்று டிசம்பர் 31, காலை. கடந்த வருடம் இந்த நேரம் எல்லாம் அப்பாவிடம் திட்டு வாங்கியபடி டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தது ஞாபகம் வந்தது, கேசவனுக்கு. பாவம் அவரும் என்னத்தான் செய்வார்? பிடிச்ச வேலையை சொந்தமா செய்வோம் இல்லைன்னா சும்மா இருப்போம் அப்படிங்கறது என் கொள்கை, ...
மேலும் கதையை படிக்க...
மரத்தைப் பார்த்ததும் அவனது உள்ளங்காலிலிருந்து மேலெழுந்து ஓடியது ஒரு சிலிர்ப்பு. அந்த நுனா மரத்தில்தான் 'ரெட்டக்குண்டி' சின்னைய்யனை அடித்து மாட்டி வைத்திருந்தனர். ரெட்டைக்குண்டி சின்னைய்யனின் சாவு இன்று வரையும் புதிராகவே தான் இருக்கிறது. அதைப்பற்றி ஊருக்கு ஊர் கதை கதையாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சின்னையன் சூராதி ...
மேலும் கதையை படிக்க...
இறுதி யந்திரம்
கதை ஆசிரியர்: ஜெயமோகன். எட்டு இருபது முதல் ஒரு மணி நேரத்தை அவருக்காக அதிபர் ஒதுக்கியிருந்தார். விருந்தினர் அறையில் அந்த ஒல்லியான பரட்டைத் தலை மனிதர் தன் கருவியுடன் காத்திருந்தார். முன்பக்கம் கண்ணாடி  விழி ஒன்றும் சில பித்தான்களும் கொண்ட சதுரமான எந்திரம் அது. விருந்தினர் அறை ...
மேலும் கதையை படிக்க...
படைப்பு – ஒரு பக்க கதை
கொத்தடிமைகள்
செயல்வினை
ரெட்டக்குண்டி
இறுதி யந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)