நான் சொல்லவில்லை

 

1929ல், அதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு நோட்டீசுகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர் – பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது. என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது எங்களுக்குத் தெரியும். மணி 6½யும் ஆயிற்று.
எங்களை அழைத்தவர்களும் அங்கே வரவில்லை. ஆகவே, நான் பெரியாரிடம், நாம் பேசாமல் திரும்பிப் போய்விடுவது நல்லது என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார். நான் போய் எட்டணாவுக்குப் பேசி ஒரு குதிரை வண்டியைக் கூட்டிவந்தேன்.

வண்டியில் முதலில் என்னை ஏறச் சொல்லிவிட்டுப் வண்டியில் பின் ஏறி அமர்ந்து பெரியார் வண்டிக்காரனிடம் கூட்டம் நடக்கும் இடத்தின் வழியாக இரயிலடிக்குப் போகும்படி சொன்னார். அந்த இடம் , வந்ததும் பெரியார் பார்த்தார். சுமார் ஐநூறு அறுநூறு பேர்கள் அங்கு கூடியிருந்தனர். மேடையில் மேசை நாற்காலிகள் எல்லாம் இல்லை, எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை

உடனே பெரியார் வண்டியை நிறுத்தும்படி, சொல்லிக் கீழே இறங்கினார். தனியாகவே போய் மேடையில் ஏறினார். “பொதுமக்களே! நான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை. ஒரு உண்மையைச் சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களைப் பொய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீசு போட்டிருக்கிறார்கள். அது நான் சொல்லவில்லை.

“சைவப் புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்ளையெல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக, புராணங்களைப் பொய் என்று சொன்னவர்கள் சைவ – வைணவப் பண்டிதர்கள் தான். இதைச் சொல்லிப் போகத் தான் நான் வந்தேன். என்மேல் பழிபோடாதீர்கள்” என்று சொன்னதும் ஒயாமல் கைதட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள், தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டே யிருந்தார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

அந்தக் காலத்தில், பெரியாரும் நானும் சேர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதில் நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகள் பலர் என் நினைவை விட்டு அகலவில்லை.

- அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும். ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து ...
மேலும் கதையை படிக்க...
முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, இவர்களுக்கு முன்னே இளம்பெண் ஒருத்தி, இரண்டுமாதக் கைக்குழந்தையுடன், செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து அக்கரை ...
மேலும் கதையை படிக்க...
நாற்பது ஆண்டுகட்குமுன் பள்ளிப்பாடப் புத்தகத்தில் உள்ள கதை இது. வயதான தன் தந்தையைத் தெருத்திண்ணையில் உட்காரவைத்து, ஒரு சட்டியைக் கொடுத்து, நாடோறும் அதில் சோறு போட்டுவைத்து, அவர் உண்ணும்படிச் செய்யத் தன் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தான் ஒருவன். பல நாட்கள் இந்தத் தொண்டு நடந்துவந்தது. ஒருநாள் சோறு ...
மேலும் கதையை படிக்க...
ஓர் ஊரிலே சுருட்டு வியாபாரிகள் இருவர். அவர்களுக்குள் போட்டி அதிகமாக இருந்தது. போட்டி போட்டு ஒருவர்க்கொருவர் சுருட்டு விலையைக் குறைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். தன் போட்டி ஆசாமி அசலுக்கும் குறைவாக விற்பதைக் கண்டு, மற்றவரால் அதைச் சமாளித்துப் போட்டி போட முடியவில்லை. எப்படிக் குறைந்த ...
மேலும் கதையை படிக்க...
50 ஆண்டுகட்கு முன்பு. தஞ்சையை அடுத்த கரந்தையில் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழா. த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் முன்நின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா பேசினார்கள், அதன்பின் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார் அவர்கள் பேசினார்கள். இறுதியாக சேலம் மாவட்டத்துச் சிற்றுார் தாரமங்கலம் அ. ...
மேலும் கதையை படிக்க...
ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லோரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒருபேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான். பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என ...
மேலும் கதையை படிக்க...
அடிக்கடி நீதி மன்றத்திற்கு வந்து பொய்ச்சாட்சி சொல்லிக்கொண்டே காலங் கழித்து வந்த ஒருவரை வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் : உமக்கு என்ன வேலை? சாட்சி : பொதுமக்களுக்குத் தொண்டு செய்வது. வக்கீல் : உமக்கு சொத்து ஏதேனும் உண்டா? சாட்சி : ஆம். இருக்கிறது. வக்கீல் ...
மேலும் கதையை படிக்க...
செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன் என்ன சொல்வான், அதற்கு நாம் என்ன சொல்வது என்று தானே சிந்தித்தான். முதலில் நாம் போனதும் நோயாளியை, ‘நோய் எப்படி இருக்கிறது’ ...
மேலும் கதையை படிக்க...
இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி அவர்கள், தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை {பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல்கட்டுந் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார். பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் சம்பளம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
தன்னிடம் வேலைக்கு வரும் வேலைக்காரர்கள் அனைவனரயும் முட்டாள்கள் என்றே கருதி, எதையும் விபரமாக எடுத்துச் சொல்லி அனுப்புவார் முதலாளி. ஒரு சமயம், அவர் தன் வேலையாள் ஒருவனை அழைத்து, ‘நான் சொல்வதை மட்டும் நீ செய்தால் போதும். மற்றதைச் செய்யாதே’ என்று கண்டிப்பாய்ச் ...
மேலும் கதையை படிக்க...
தன்னம்பிக்கை
இளந் துறவியும் முதிய துறவியும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
சுருட்டும் திருட்டும்!
வரத நஞ்சையபிள்ளை
கடுக்காய் வைத்தியர்
சாட்சிக்காரனின் சொத்து மதிப்பு
நல்ல வைத்தியர்
விக்டோரிய மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்
வேலை வாங்கும் முதலாளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)