நாட்டு நடப்பு

 

போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வழக்கு-

கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாக ஒரு வழக்கு-

கம்பியூட்டர் நிறுவனம் வைத்து மோசடி செய்ததாக ஒரு வழக்கு-

ஆட்களை கடத்தியதாக ஒரு வழக்கு-

சொத்து குவிப்பு வழக்கு ஒன்று-

அனைத்து வழக்குகளிலும் ஜாமீனில் வெளி வந்த அந்த கோடீஸ்வர தொழிலதிபரிடம் ஒரு டி.வி. நிருபர் எடுத்த பேட்டி

“ அடுத்து நீங்க என்ன செய்வதாக உத்தேசம்?”

“பெர்னாட்ஷா போன்ற அறிஞர்கள் சொன்ன கடைசி வழி தான்!”

“புரியலே சார்!…..கொஞ்சம் தெளிவா சொல்லுங்க!…”

“சீக்கிரம் பாராளும் மன்றத் தேர்தல் வரப் போகுது…நாட்டில் செல்வாக்குள்ள அரசியல் கட்சியில் மிக செல்வாக்கு உள்ள முக்கிய தலைவர்களை ‘நன்கு கவனித்து’ எம். பி. சீட் வாங்கி எம்.பி. ஆகப் போறேன்!..”

“அது எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லறீங்க?…”

“காந்தியால் கூட பதவி வாங்கித் தர முடியாது!…ஆனால் காந்தி தலை அச்சிட்ட ரூபாய் நோட்டுக்களால் எந்தப் பதவியும் வாங்கிப் தர முடியும்!……அது என்னிடம் கொட்டிக் கிடக்கிறது!….பத்திரிகை நிருபர் தானே நீங்கள்?…..நாட்டு நடப்பு உங்களுக்குத் தெரியாதா என்ன?…….”

நிருபர் பேச மறந்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
“அப்பா!...மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!...ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!...” “ நாங்க நல்லா விசாரித்து விட்டோம் அம்மா!....படித்த மனுஷன் தொழில் விஷயமா நாலு பெண்களோட பேசினா தப்பாமா?...நீயும் படிச்சவ தானே?...உனக்கு இது தெரியாதா அம்மா?...ஐஸ்வரியா தங்க ...
மேலும் கதையை படிக்க...
“ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?....எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே உங்களுக்குப் பொழப்பாப் போச்சு!.....ராத்திரியானா என் உசிரை எடுக்கிறீங்க!....உங்களுக்கு இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் உத்தியோகம் வேண்டாம்!....வேற ஏதாவது வேலை தேடிக் கொள்ளுங்க!…காத்தாலே ...
மேலும் கதையை படிக்க...
சாந்தியின் அன்பு மகன் மோகனுக்கு அவனுடைய மூன்றாவது வயசிலேயே போலியோ தாக்கப்பட்டு வலது கால் சூம்பிப் போய் விட்டது. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. அது போல் தான் இந்த ஊனமும்! யாரும் விரும்பி ஊனம் அடைவதில்லை! பிறப்பால், விபத்தால், வியாதியால் ...
மேலும் கதையை படிக்க...
ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து விட்டால், பக்கத்தில் இடி விழுந்தால் கூட அவனுக்குத் தெரியாது! ‘பிளஸ் டூ’ பரிட்சையை போன மாதம் தான் ரமேஷ் எழுதி முடித்தான். ...
மேலும் கதையை படிக்க...
விஷ்ணு காந்த் சிங்கத்தின் வாயை கைளால் பிளப்பது போன்ற பதினாறு அடி கட் அவுட்டுகள் நாற்சந்தி, முச்சந்தியில் நின்று நாட்டு மக்கள் அனைவரையும் ஆவலோடு எதிர் பார்க்க வைத்த படம் ‘அடலேறு!’ அதன் ஹீரோ விஷ்ணு காந்தே தயாரிப்பாளரும் கூட. விஷ்னு காந்த்க்காக ...
மேலும் கதையை படிக்க...
வள்ளியா?…தெய்வானையா?
மகளுக்கு கடமை இல்லையா?
உலகை மாற்றும் திறனாளி!
பேஸ் புக்! – ஒரு பக்க கதை
விஷ்ணு காந்த் அழைக்கிறார்! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)