Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாகரிகம் – ஒரு பக்க கதை

 

டீசன்ட்டான அந்த ரெஸ்டாரன்டினுள் முண்டாசுடன் ஒரு கிராமவாசி நுழைந்தார். மடித்துக் கட்டிய அழுக்கு வேட்டி, அதைவிட அழுக்கான சட்டை.

சர்வர் அருவருப்படைந்த போதிலும், தொழில் தர்மம் கருதி பவ்யமாக,’’என்ன சாப்பிடறீங்கய்யா?’’ என்றார்.

‘’சாப்பாடு எவ்வளவு?’’

முழுச்சாப்பாடு அறுபது ரூபா’’

உனடே தன் அண்டர்வேரிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிப்பார்த்தர். ‘’பணம் பத்தாது…அளவுச் சாப்பாடு இருக்கா?’’

இருக்குங்க. முப்பத்தைஞ்சு ரூபா’’

‘’சரி, அதையே கொடுங்க.’’

சாப்பிட்டு முடித்ததும் பில்லை ஒரு அட்டையினுள் வைத்து நீட்டினார் சர்வர். பணத்தை அதனுள் வைத்து விட்டு எழுந்துபோன கிராமவாசி, கைகழுவி வேட்டியிலேயே துடைத்துக் கொண்டு அப்படியே வெளியேறினார்.

பயந்துபோன சர்வர், டேபிளுக்குப் பாய்ந்தார். பத்து ரூயாய் நோட்டுக்கள் ஐந்து அங்கே அவரைப் பார்த்து சிரித்தன.

- ஷேக் சித்தார் மதார் (8-9-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
தன் நண்பனின் மெக்கானிக் ஷாப்பினுள் நுழைந்தான் சங்கர். நிறைய கார்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தன. பானெட்டை திறந்தும், காருக்கு அடியில் படுத்தும் வேலையாட்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி உள்ளிருந்த அறைக்குள் நுழைந்தான்.""வா சங்கர், என்ன இந்தப் பக்கம் அபூர்வமாக ...
மேலும் கதையை படிக்க...
”ஹலோ! இது ராஜா ராமனா?” மறுமுனையில் ராஜாராமன். ”ஆமாம், நீங்க?’ ”நான் ராகம் ஆஸ்பத்திரியிருந்து டாக்டர் சம்பத், நீங்கள் வயிற்றுல ஒரு வித்தியாசமான வலின்னு வந்து மருந்து மாத்திரை வாங்கிட்டுப் போனீங்களே, சரியாயிட்டுதா?” ”நூறு சதவீதம் சரியாயிட்டுது. நினைவு வெச்சு கேட்டது ரொம்ப சந்தோஷமா இருக்குது ...
மேலும் கதையை படிக்க...
நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை, குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாக பார்க்க போனால் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கேட்டாள். “ஏன்டா முரளி. உன் கல்யாணம்தான் திருப்பதியில் சிம்பிளா நடந்தது… ரிசப்ஷன் கிராண்டா உட்லன்ஸ்ல வெச்சிருக்கோம்… ஆனா ஏன் நம்ம வீட்டு வாட்ச்மேன், சர்வெண்ட்க்கெல்லாம் பத்திரிகை வேண்டாம்னுட்ட…?’ “அம்மா… அது பெரிய ஹோட்டல்… இவங்கல்லாம் சரிப்படமாட்டாங்க. எனக்குத் தெரியும். பொறுமையா இருங்க’ ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல் முன் கண்ணாடியில் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் மெதுவாக நேரத்தை படிப்படியாக எண்ணியபடி தாண்டிக்கொண்டிருந்த நான், சரியாக பத்து நிமிடம் ஆனதும் ...
மேலும் கதையை படிக்க...
கோபம் தவிர்
பரிசோதனை – ஒரு பக்க கதை
மகான்கள்
ரிசப்ஷன் – ஒரு பக்க கதை
செகண்ட் செலக்ஷன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)