நம்பிக்கை – ஒரு பக்க கதை

 

“என்ன சொல்றீங்க? கொடுக்கற பணம் அஞ்சு வருஷத்துல அஞ்சு மடங்காகுமா? நம்பற மாதிரி இல்லையே! பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தற மாதிரி சொல்லுங்கண்ணா”

“சில விஷயங்கள நம்ப முடியாது தான். ஆனா இதுல நான் பணம் போட்டு இப்படி பணம் எடுத்திருக்கேனே தம்பி!”

“அண்ணே.. ரெண்டு வருஷமா என்னை உங்களுக்குத் தெரியும்.. இத்தன நாள் சொல்லாம இப்ப ஏன் சொல்றீங்க? என்ன வச்சு எதாவது டெஸ்டு கிஸ்டு பண்றீங்களா?”

“டெஸ்டெல்லாம் இல்லப்பா, நானே இதுல அவ்ளோ நம்பிக்கை இல்லாமத்தான் இருந்தேன். ஆனாலும் ட்ரை பண்ணலாமேனு அஞ்சு வருஷத்திக்கு முந்தி ரெண்டு லட்சம் கொடுத்தேன். அது ரெண்டு நாளைக்கு முன்னாடி பத்து லட்சமா திரும்பி என் வீட்டுக்கு வந்துச்சு.. அப்பத்தான் நம்பினேன்”

“அப்ப இது மாதிரி வருதுனா, நிச்சயமா நல்ல வழியா இருக்க வாய்ப்பில்ல.. இதுல ஏதோ பயங்கரமான கோல்மால் இருக்கு”

“சரி உனக்கு விருப்பம் இல்லேனா விடு.. எதுக்கு ஏதேதோ சொல்ற!”

“என் மனசுக்கு பட்டதக் கூட சொல்றது தப்பாண்ணே!?”

“எப்பவுமே நான் சொல்ற எல்லாத்தையும் நம்புவ… இப்ப இத ஏன் நம்ப மாட்டேங்கற..!?”

“நீங்க அரசியலுக்கு போகாத வரைக்கும் அப்படித்தான் நம்பினேன். எப்ப தேர்தல் அறிக்கைனு ஒன்ன வெளியிட்டு, அதுக்கு உல்டாவா எல்லாமே செய்ய ஆரம்பிச்சிங்களோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்”

“என்னனு?”

“அஞ்சு வருஷத்துல இதப்பண்ணுவேன், அதப்பண்ணுவேனு யாரு என்ன சொன்னாலும் நம்பக் கூடாதுனு”

“!???” 

தொடர்புடைய சிறுகதைகள்
"அந்த வில்லேஜ்ஜுல எதுக்கு தினமும் இவ்வளவு இறப்பு நிகழுது?.. அவ்வளவு வீரியமா அங்க கொரோனா இருக்கு?" "தெரியல சார்.. நான் நம்ம டாக்டர் டீம அங்க அனுப்பி வைக்கறேன்... அது நம்ம மாவட்டத்து எல்லையில ரொம்ப தூரம் தள்ளி ஒதுக்குப்புறமா இருக்கற வில்லேஜ்கறதால, ...
மேலும் கதையை படிக்க...
திடீரென கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம்.. கண்களின் முன்னே.. அவனால் கண்களையே சரியாக திறக்க முடியவில்லை.. எப்படியோ கஷ்டப்பட்டு திறந்த பார்த்தால்.. அவனால் நம்பவே முடியவில்லை. முன்னே கடவுள் நின்று கொண்டிருந்தார். அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. கடவுள் அவனைப் பார்த்து.. "தைரியம் ...
மேலும் கதையை படிக்க...
அவன் அவசர அவசரமாகக் கிளம்பினான் ஆபிசிலிருந்து.. ஒரு அரைமணி நேரம் காட்டுப்பாதையில் பைக்கில் போனால் தான்.. மெயின் பஸ் ஸ்டான்டு போக முடியும். அங்கிருந்து ஒரு மணி நேரம் பஸ் பயணம் வீட்டிற்கு.. அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு சென்றால் தான் ...
மேலும் கதையை படிக்க...
"கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!" என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா பேக் பண்ணியாச்சா?", என்று கேட்டபடியே சாப்பிட‌ வந்தமர்ந்தாள் லிசா. "ஆச்சு.. ஏன்டி இவ்வளவு அவசரம் கொஞ்சம் முன்னமே எழுந்து பொறுமையா கிளம்பலாம்ல" "நீயும் தினம் தினம் இதைத்தான் சொல்ற, நானும் தலையாட்டறேன்.. ஆனா முடிய மாட்டேங்குதே" "என்னடி முடியமாட்டேங்குது, சீக்கிரமா எந்திரிக்கனும்னா சீக்கிரமா தூங்கனும், ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா! கும்புடுறேனுங்கோ!" "என்னய்யா ராமசாமி! என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க.. ஏதாவது விஷேசமா?", என்றார் மீசையை முறுக்கியவாறே ஊரின் பெரிய மனிதரான ஜம்புலிங்கம். பக்கத்திலேயே அவரது வலதுகை கணேசு நின்று கொண்டிருந்தான். "விஷேசந்தாங்கையா, பொண்ணுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வச்சிருக்கேனுங்க.. நீங்கதாய்யா ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க சார்.. வாங்க சார்... வாங்க சார்"னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, "சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு" ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி.. எதுக்கு எங்க... அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்... ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு... யாருக்கிட்ட எப்ப ...
மேலும் கதையை படிக்க...
"அப்பா.. நான் கோழிக்கு பேர் வைக்கவா?" "கோழிக்குப் பேரா.. !!சண்டைக்கோழிக்கு வைப்பாங்க... ஆனா சாப்படற கோழிக்கு கூடவா வைப்பாங்க!" "என்னது சாப்படற கோழியா!?" "ம்.. அது ஒன்னும் இல்ல.. நீ எதோ பேர் வைக்கணும்னு சொன்னியே.. வச்சுக்க" "ம்.. சரிப்பா", என்று சொல்லிவிட்டு "சின்ட்ரெல்லா" "சின்ட்ரெல்லா" என ...
மேலும் கதையை படிக்க...
அவர்களுக்கு அது ஐந்தாவது விசிட்.. ஐந்து திக் ப்ரண்ட்ஸ்.. ஐடில ரொம்ப பிஸி லைப் வாழ்றவங்க... அப்பப்ப இந்த மர்ம மலைக்காட்டுக்கு ட்ரக்கிங் வருவாங்க.. விஜி, மிதுன், சோபன், ரித்தி அப்பறம் ரமேஷ்.. வேறு வேறு மாநில ஆளுங்கலா இருந்தாலும் எல்லோருடைய ...
மேலும் கதையை படிக்க...
சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள் ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது ...
மேலும் கதையை படிக்க...
சோறு முக்கியம் பாஸ்
கொம்பு முளைத்த மனிதர்கள்
வாலும் காலும்
வ‌ருவாரா மாட்டாரா?
மாறிய மனம்
பெரியமனுசத்தனம்
ரசவாதி
சின்ட்ரெல்லாவின் முத்தம்
எங்கேயும் கேட்காத குரல்
நான் நீயாக.. நீ நானாக..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)