நட்சத்திர தேடல்

 

மீசைதாத்தாவுக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும்.

ஊருக்கு வெளியே வாழைத்தோட்டத்திற்கு அருகே ஒரு குடிசை அவருடையது.

ஊருக்குள் அவர் வந்து பல வருடங்கள் ஆகிறது.

வாழைதோட்டத்திற்கு வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுடன் மட்டும் பேசுவார்.

இரவானால் கயிற்று கட்டிலில் படுத்துக்கொண்டு வானம் பார்த்து நட்சத்திரங்களுடன் ஏதேதோ பேசுவார்.

“நிறைய நட்சத்திரம் இருக்கே இதுல நீ எந்த நட்சத்திரம் காமாட்சி” என்று இருபது வருடத்திற்கு முன்பு இறந்த காமாட்சிபாட்டியை நினைத்தபடியே கிடப்பார்.

” நான் டவுசர் போட்ட காலத்துல இருந்து பாக்கறேன்…வானத்துல அப்படி என்னத்ததான் பெரிசு பாக்குதோ” பீடியை பற்றவைத்துக்கொண்டே தன் நண்பனிடம் சொன்னான் பக்கத்து தோட்டத்து காவலாளி முருகேசு.

“இன்னைக்கு கிறுக்கு முத்திப்போச்சுடா, அந்திசாயறதுக்குள்ளேயே பெரிசு வான‌த்த‌ பார்க்க ஆரம்பிச்சுட்டாரு…” சிரித்துக்கொண்டே மீசைதாத்தாவின் குடிசையை கடந்து சென்றனர் இருவரும்.

இவர்களது உரையாடலை கண்சிமிட்டியபடியே ரசித்துக்கொண்டிருந்தார் நட்சத்திரமாகிவிட்ட மீசைதாத்தா.

- Tuesday, September 18, 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்... மனசுக்குள் வினோத்தை பற்றி பலவாறாக எண்ணியபடியே நகம் கடித்துக்கொண்டிருந்தேன் இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.. பத்து மணிக்கே வர்றேன்னு சொன்ன‌வ‌ன் இன்னும் வ‌ர‌லை. ...
மேலும் கதையை படிக்க...
"அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்" நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன். "சொல் நரசிம்மா" "நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று ...
மேலும் கதையை படிக்க...
"காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு பின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை" "எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுற இல்ல, அப்புறம் எப்படி பிடிக்கும்?" "எங்க அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிடக்கூடாதே உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்" "அதென்னடி மாசாமாசம் ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு வாசலில் ரோஜா மாலைகளுக்கு நடுவில் சடலமாக சலனமின்றி கிடக்கும் மலர்விழியை காண்பதற்கா பல மைல் தூரம் பறந்து வந்தேன்? விழியோரம் ஒருதுளி நீர் கசிந்து காற்றில் கரைந்தது... மலர்விழியை சுற்றிலும் தலைவிரிக்கோலமாக அழுது கொண்டிருந்தனர் பெண்கள். மனத்திரையில் மலர்விழியை முதன்முதலாய் சந்தித்த நாட்கள் ...
மேலும் கதையை படிக்க...
ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித உற்சாகத்தை தந்தன.முதல் முறையாக பெருநகரத்திற்குள் நுழைகிறோம் என்கிற சந்தோஷத்துடன் தொலைதூர வானை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் . இவள் எண்ணம் முழுவதும் ...
மேலும் கதையை படிக்க...
கறுப்பு வானவில்
விசித்திர உருளைch2008
வீட்டுப்பாடம்
மலர்விழியும் மல்லிகைப்பூக்களும்
பெருநகர சர்ப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)