தொண்டன்

 

சார்… ஃபோன் வந்தது. அங்கேயிருந்து பெரியவரோட பிஏ பேசினாரு.

பெரியவருக்கு காய்ச்சலாக இருக்கிறதாம். கொரோனார டெஸ்ட் எடுத்திருக்கிறார்களாம். ஒருவேளை ரிசல்ட் பாஸிட்டிவ் என்றால் இங்கே அட்மிஷன் போடணுமாம். ‘அன்பான’ வேண்டுகோளாம். உங்களுக்குத் தகவல் சொல்லச் சொன்னாங்க.

சரிய்யா. கொடுத்துத் தொலைச்சிடலாம். அவங்களைப் பகைச்சிக்கிட்டு வேற என்ன நம்மால செய்ய முடியும்? ஆமா கட்சிக்கார விஐபி எத்தினி பேரு இப்ப நம்ம கிட்ட டிரீட்மெண்டில் இருக்காங்க?

அதுவா சார், இருபது முப்பது பேரு இருப்பாங்க. அதில் ஒரு நாலைஞ்சு கேசு இழுபறியில இருக்கு.

ஓ. ஆக்ஸிஜன் கையிருப்பு பத்துமா? இன்னும் எத்தினி நாளுக்கு வரும்?

அதுதான் சார் பிராப்ளம். கையிருப்பு நாலு நாளுக்குத் தாங்கும்.

இது தெரிஞ்சும் ஏன்யா முப்பது அரசியல் விஐபி களை அட்மிஷன் போட்டீங்க. கொஞ்சம் கவனமாயிருந்து எதுனா வேற காரணம் சொல்லி வேற இடத்துக்குத் தள்ளி விட்டிருக்கலாமே..இப்பத் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டமாயிடும். எப்படி சமாளிக்கத் போறேனோ தெரியலையே

அதுதான் சார் உங்களைக் கலந்துகிட்டு…… அப்புறமா பெரியவர் பிஏ கிட்ட கன்பார்ம் பண்ணணும். மே 2 கவுண்டிங் வேற இருக்கு முடிவுகள் வந்து பெரியவர் ஜெயிச்சி இங்க இருந்தா இன்னும் சிக்கலாகும்.

இப்பத்தைக்கு விஐபி டீலக்ஸ் ரூம் எல்லாம் ஃபுல்லா இருக்கு.

சரி… சரி… பெரியவருடைய பையன் நம்பருக்குப் ஃபோனைப் போட்டுக் குடு. நான் பேசறேன்.

அதுக்கிடையில பெரியவர் கட்சி ஆளு விஐபி ரூம்மில இருக்கிறவங்க லிஸ்ட எனக்கு அனுப்பு.

அண்ணே வணக்கம். பெரியவருக்கு உடம்பு சரியில்லை. நம்மகிட்ட அட்மிஷன் போடணும் அப்படின்னு பிஏ சொன்னாரு. இங்கபாருங்க நம்மட்டையும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருக்கு……

அது கழுதைய விடுங்க சார், பெரியவர் வரதாயிருந்தா நான் சென்ட்ரலில பேசி ஸ்பெஷல் ப்ரொக்யயூர்மெண்ட்டுக்கு ஆர்டர் வாங்கிடலாம். ஆனா…

ஆனா என்ன ஆனா? இழுக்கறே….

அது ஒண்ணும் இல்லை. விஐபி சூட் எல்லாம் ஃபுல். உங்க கட்சி ஆளுங்களே பத்து ரூம்மில இருக்காங்க. நம்ம கிட்ட லிஸ்ட் இருக்கு. படிக்கவா?

உம். உம் படிங்க.

ராஜி, செல்வம், தீனா, மதி, அழகேசன், உமாபதி, ரமாதேவி, பாண்டியன், காதர் பாட்சா, ஸ்டீபன்.

இதில நாலு பேரு நிலைமை இழுபறியாக இருக்கு. நீங்க என்ன செய்யணும்னு சொன்னீங்கன்னா, சொல்லறபடி செஞ்சிடறேன். உடனே அட்மிஷன் போட்டுறலாம்.

“………………………………………………….”.

சரியா?

சரிண்ணே.அப்படியே செஞ்சிடலாம். சாயங்காலம் ஆறு மணிக்கு அட்மிஷன் போட்றலாம்.

பிரஸ் ஆட்களுக்கும் பந்தோபஸ்துக்கு போலீஸுக்கும் தகவல் அனுப்பிடறேன்.

நாலு மணிக்கு யுரேனஸ் செய்தியில் அதிர்ச்சித் தகவல் பகுதியில செய்தி வந்தா நல்லாயிருக்கும். நீங்க ஆறு மணிக்கு வரும் போது சரியா இருக்கும்.

சரி. ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.

அண்ணே ஆட்சிக்கு வந்ததும் படப்பைல உள்ள அந்த பிரச்சினைய கொஞ்சம் கிளியர் பண்ணி விட்டா சந்தோஷமா இருக்கும்.

சரியா. பண்ணிடலாம்யா. ரிசல்ட் வந்த பின்னாடி நினைவுபடுத்து. சரி இப்ப ஃபோனை வைச்சிடறேன்.

சரிண்ணே.

ஏய் யாரது? அந்த விஐபி ரூம் டியூட்டி டாக்டர் யாரு? உடனே வரச் சொல்லு.

நாலு மணிக்கு யுரேனஸ் தொலைக்காட்சியில் ******கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு.மதி அவர்கள் ######மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திடீர் மரணம்.****** கட்சித் தலைவரின் மகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மறைந்த மாவட்டச் செயலாளர் உடலுக்கு மலரஞ்சலி செலுத்துவார் என்று கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது..

மாலை ஆறு மணிக்கு யுரேனஸ் தொலைக்காட்சியில்****** கட்சியின் மூத்த தலைவருக்கு தொற்று உறுதி. ###### மருத்துவமனையில் திடீர் அனுமதி என்று செய்தி ஓடிக் கொண்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் எப்போதும் போல் அன்றும் பரபரப்பாக இருந்தது. அங்கே எதிரே கட்சி அலுவலகத்தில் யாரோ ஐந்தாறு ஆட்கள் வெய்யிலில் வண்ணக் குடை பிடித்தபடி வீடியோ படம் பிடிக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விதவிதமான வண்ணக் கொடிகள் கட்டிய ...
மேலும் கதையை படிக்க...
“ராகவா எழுந்திருடா, மணி எட்டு அடிக்கப் போறது”, என்ற அம்மாவின் குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டு கண்ணைத்திறந்து, ”என்னம்மா, அதற்குள்ளாகவா எட்டு மணியாகி விட்டது.இன்னிக்கு லீவுதானேமா, இன்னும் ஒரு மணி நேரம் தூங்கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் . தினமும் இப்படி சென்னை - சூளூர் பேட்டை மார்க்கத்தில் உள்ள ஒரு சிற்றூரின் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் அவர். ...
மேலும் கதையை படிக்க...
மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி சாலை சென்னை, என்ற முகவரியில் இயங்கிய அந்தத் தனியார் நிறுவனத்தின் வரவேற்பறையில் எப்படியும் குறைந்தது நூறு பேராவது இருப்பதாகவே தோன்றியது. ...
மேலும் கதையை படிக்க...
கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு. டீசர் வெளியான நாளிலிருந்தே எப்படியும் முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கணும் என்ற வெறி ஆறுமுகத்தைப் பிடித்து ஆட்டியது. கூட வேலை பார்க்கும் ஷகாபுதீனிடம் சொல்லி டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்த்திருந்தான். ஷகாபுதீன் இவன் ஊர்க்காரர்தான். சென்னைக்கு ...
மேலும் கதையை படிக்க...
‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது. அந்த அரசுப் பள்ளியில் ...
மேலும் கதையை படிக்க...
அது பெருநகரத்தின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் கூட்டமும் அவர்களை "ஏய், வரிசையாய் போ", என்ற வாத்திமார்கள் பிள்ளைகளை அதட்டும் சப்தமும் அடிக்கடி கேட்டபடி இருக்கும். அன்று அந்த ...
மேலும் கதையை படிக்க...
அவரை நான் பார்த்தது காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் ஒரு சாக்கடை அருகில். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. சாக்கடை அருகில் குடிபோதையில் உருளும் மனிதர்களை தினமும் காண்பதெல்லாம் எங்களுக்குப் புதிய விஷயம் இல்லை என்பவர்களுடன் முரண்படுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. இந்த மனிதன் ...
மேலும் கதையை படிக்க...
ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கிளியா இருக்கா.திவாகருக்கு ரொம்பவே பிடிக்கும். சாயங்காலமா குரு ஓரையில கொண்டு வரறேன்” என்றபடி எதிரே வந்தார் தரகர் அய்யாச்சாமி. ...
மேலும் கதையை படிக்க...
மதுரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான். இன்னும் முழுசாக 70 நிமிடங்கள் இருந்தது. 5 வது பிளாட் பாரத்தில் தூங்கி வழிந்த படி நின்று கொண்டிருந்தது. அறிவிப்பாளரின் ...
மேலும் கதையை படிக்க...
மாநகரப் பேருந்துப் பயணம்
காலப் பெட்டகம்
சென்னை – சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி
சங்கிலிக் கண்ணிகள்
நம்பிக்கை நட்சத்திரம்
சண்முகவடிவு
மிருகக் காட்சி சாலை
எச்சில் சோறு
மலைப் பாம்புகள்
ரயில் பயணங்களில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)