ஒருநாள் மாலைப்பொழுது…
மயக்கும் மாலைப்பொழுது இல்லை. இலேசான வெயிலின் சூட்டுடன் பயணம். ஜன்னல் ஓர இருக்கையும் கிடைக்கவில்லை. அதனாலும் பயணம் பிடிக்கவில்லை. ஆனாலும் போயாக வேண்டிய கட்டாயம். போகிறேன். மனதில் இலேசான வருத்தம். சொல்ல முடியாத சோகம்… எதனால் சோகம் என யோசித்தேன். காரணம் பிடிபடவில்லை! இனம் புரியாத ஒரு சோகம்! எண்ணற்ற எண்ணங்கள் என்னுள் அமிழ்ந்திருக்கின்றன. ஆனால், எந்த நினைவையும் இப்போது தட்டி எழுப்ப வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். நினைவுகள் எப்போதும் ஏக்கத்தையே சென்றடையும். அதனால்தான் எதையும் யோசிக்காமல் இருக்கிறேன் பேருந்தில்.
இவ்வாறு அமர்ந்திருக்கையில், என்னை யாரோ உற்று நோக்குவது போன்ற ஓர் உணர்வு. நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டே தற்செயலாக இடப்புறம் தலையைத் திருப்பியபோது கிடைத்தது தேவதையின் தரிசனம்!… எனக்கு நேர் இடப்புறத்தில் ஓர் இருக்கை முன்பு இருந்து அவள் பார்த்த பார்வை ஆயிரம் வார்த்தைகள் பேசியது என்னிடம்! விழிகளில் அவ்வளவு ஒளி! அவ்வளவு குளிர்ச்சி! அவ்வளவு கருணை! இனம் புரியாத சினேகம்! பார்த்த மூன்று நொடிகளிலேயே கண்சிமிட்டிச் சிரித்தாள்.
எனக்கு மற்ற அனைத்தும் மறைந்து அவள் கண்கள் மட்டுமே தெரிந்தன. என்னுடைய இனம் புரியாத சோகம் எல்லாம் தடம் தெரியாமல் போனது அவளுடைய ஒற்றைப் பார்வையில். அந்தச் சிறிய கண்களில் நிரம்பி வழிந்தது மகிழ்ச்சி. நானும் அவ்வாறே இருக்க நினைத்து அவளுடன் நட்பு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். எப்படி நட்பை ஏற்படுத்திக் கொள்ள?… எனக்குத் தேவதைகளின் மொழி தெரியாதே!…
சரி, சைகை மொழியில் பேசலாம் என்றால்… தேவதையோ தன் கைகளை இறுக்கமாக மூடியிருக்கிறாள். என்ன செய்வது?… தேவதைக்கு எப்படிப் புரிய வைப்பது என் தவிப்பை?!!… இப்படியே ஐந்து நிமிடப் பேருந்துப் பயணம் எங்கள் விழிவழி உரையாடலில் இனிமையாய்க் கரைந்தது.
தேவதையுடனான உரையாடல் என்னைச் சோகத்திலிருந்து மீட்டது. மனதில் மகிழ்ச்சி நிரம்ப வைத்தது. ஆஹா… இது போதும் எனக்கு!
அலைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன். நண்பனின் அழைப்பு. தேவதையை விடுத்து அவனிடம் பேசினேன். பேசி முடித்த பின் தேவதை இருப்பிடம் நோக்கினேன். அவள் அழகாகத் துயில் கொண்டிருந்தாள்… அவள் அம்மாவின் தோள் சாய்ந்து! அந்தக் குட்டித் தேவதை கண்மூடியிருப்பதும் அழகுதான்!
எனது நிறுத்தம் வந்தது. தேவதையின் நினைவுகளுடன் நான் இறங்கிக் கொண்டேன். பேருந்து தொடர்ந்து மிதந்தது குட்டித் தேவதையுடன் அழகாக!…
நன்றி: நிலாச்சாரல்
தொடர்புடைய சிறுகதைகள்
படித்து முடித்த பின் வேலை தேட வேண்டிய சூழ் நிலை கட்டாயம் அனைவருக்கும் வரும். அது எனக்கும் வந்தது, நானும் நினைத்தேன் ஆனால் இப்போது வேண்டாம் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
காரணம் படித்த படிப்பில் ...
மேலும் கதையை படிக்க...
என்ன சுத்தி இருக்குறவங்க எல்லாருமே லவ் பண்றாங்க. அதெப்படி நான் மட்டும் சிங்கிளா இருக்கேன். நம்மக்குன்னு யாராவது இருந்தா நல்லாத்தான இருக்கும். இதுக்காக விளம்பரமா கொடுக்க முடியும்?
இரவு வீட்டுக்கு போக பேருந்தில் உட்காந்திருக்கும் போது தான் இப்படி யோசனை. எனக்கும் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன், கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் பேருந்தில் தான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். அதுவும் அரசு பேருந்தில் தான்.
தினமும் அதே கூட்ட நெரிசல், முதலில் பழக்கமில்லாத முகங்கள் , நாட்கள் செல்ல செல்ல அறிமுகமானது. முதலில் ...
மேலும் கதையை படிக்க...
அலாரம் அடிக்கும் சப்தம் கேட்டு கண் விழித்தேன், நேரம் காலை 5.30 மணி என்று காட்டியது, நாள் செப்டம்பர் 15 எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று.
மெதுவாக எழுந்து முகம் கழுவிவிட்டு, எனது ஷு-க்களை அணிந்து கொண்டு ஜாக்கிங் போக ...
மேலும் கதையை படிக்க...
மூன்று மணி நேரம் தேர்வறையில் மௌனமாக இருக்கும்போது மனதில் பல்வேறு சிந்தனைகள் தோன்றும். பிரிந்த அன்பு, உடைந்த நட்பு, தோழியின் பரிவு, நண்பனின் நெருக்கம், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால்... எனும் பயம் இப்படி. இது பொதுவானவர்களுக்கு.
இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம்.
வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் ...
மேலும் கதையை படிக்க...
எல்லாருக்கும் ஏதாவது சில விசயங்கள் சிறு வயதுமுதலே பிடித்திருக்கும், அப்படி எனக்கு பிடித்தமான பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்று கம்பியூட்டர்.
ஏனோ தெரியவில்லை கம்பியூட்டரின் மீதாது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு, அதனாலேயே +2 படித்தவுடன், அந்த பாடத்தையே தேர்ந்தெடுத்து படித்தேன்.
படித்தேன் என்று ...
மேலும் கதையை படிக்க...
எனது பைக் 98 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிக்கொண்டு இருக்கிறது என்று ஸ்பீடோ மீட்டர் காட்டியது. அது ஒரு முன்னிரவுப் பொழுது, ரம்யமான இருள் எங்கும் பரவிகிடந்தது. நான் என்.ஹெச்(தேசிய நெடுஞ்சாலை) 7 பயணித்துக் கொண்டு இருந்தேன், நான் இவ்வளவு வேகமாக செல்வதற்கு ...
மேலும் கதையை படிக்க...
பிடித்த நாளில் பெய்த மழைகள்
எனக்கொரு காதலி இருந்தாள்(ல்) !!??