தீர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 5,514 
 

வேலன் தனது நிலத்தில் உழவு செய்ய வேண்டும். கடந்த இரண்டு வருடங்கள் கடன் தொல்லையால் நிலத்தை தரிசாகவே விட்டுவிட்டோம், இந்த தடவையாவது நாம் பயிர் சாகுபடி செய்துவிட வேண்டுமேன்று நினைத்தான்…

ஊரில் வட்டிக்கு வாங்குவதை விட அரசு வங்கியில் கடன் வாங்கி பயிர் வைக்கலாம் என்று வங்கியின் படியை நாடினான் வேலன்.

வேலனுக்கு இரண்டு பிள்ளைகள்,மகனுக்கு படிப்பு வரவில்லை என்பதால் அவனது போக்கிலேயே விட்டான். இரண்டாவது மகள் பண்ணியிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டுயிருக்கிறாள். மனைவி குடும்பத்தையும் மற்றும் நிலத்தில் நாற்று நடுவதேன்று சிறு சிறு கூலி வேலைக்கு போவது வழக்கம் …

யாருடைய நிலத்திலோ சென்று வேலை செய்வதை விட நம் நிலத்தில் உழைத்தாலே போதும் நிம்மதியாக நாம் வாழ்க்கையை கழித்து விடலாம் என்று யோசித்ததான் வேலன்.

எவ்வளவு கடன் வாங்கினாலும் பரவாயில்லை மண்ணில் போட்டது கெட்டுப்போகாது என்ற பழைய சொல்லை நினைவில் வைத்துக் கொண்டு, கடன் வாங்கி விவசாயம் பண்ண தயாரானான்.

வேலன் வங்கிக்கு சென்றான் அங்கு வங்கியின் மேலாளரை பார்க்க வெளியே நின்றுக் கொண்டுயிருந்தான். அப்போது கோட்டு சூட் போட்டுக் கொண்டு ஒருவர் வங்கியின் மேலாளரின் அறையில் நேராக உள்ளே புகுந்தார்… வெளியே வேலன் மற்றும் வங்கி கணக்கு தொடங்கவும் லோன் பென்ஷன் வாங்குவோர் என ஒரு கூட்டமே வரிசையில் காத்துக் கிடந்தது..

சுமார் ஒரு மணி நேரம் ஒடிப்போனது பின், வங்கி மேலாளரும் அந்த கோட்டு சூட்டு போட்டவரும் பேசிய படியே வெளியே வந்தார்கள். அதிலும் வங்கி மேலாளர் சிரித்துக் கொண்டே சரிங்க சார் எல்லாத்தை பார்த்துக் கொள்வோம். நாளைக்கே உங்கள் வேலை முடிந்துவிடும் என்றவாறு அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அவரது அறைக்குல் சென்றார்…

வேலன் தயங்கியபடியே சார் உள்ளே வரலாம என்று வங்கியின் மேலாளரை பார்த்துக் கேட்டான்..

வங்கி மேலாளரோ இருய்யா ஒரு பத்து நிமிசம்கூட உன்னால வெளிய நிக்க முடியாதா என்ன?. நானே கூப்பிடுறேன் சத்த வெளிய நில்லு போ? என்று முகம் சுழித்துக் கொண்டு பேசினார். இதை பெரிதாக வேலன் எடுத்துக் கொள்ளாமல் வெளிய வந்தான்..

பிறகு வெறுப்பாக மேலாளர் கணினியை தட்டிய படி எதையோ தேடி தேடி எடுத்தார் அதற்கு பிறகு வேலனை உள்ளோ அழைத்தார்….

வேலன் உள்ளே போனதும் வணக்கும் ஐயா என்றார். அதற்கு வங்கி மேலாளர் தலையை அசைத்துவிட்டு என்ன விசயமா வங்கிக்கு வந்திங்கனு கேட்டார் மேலாளர் அதற்கு வேலன் எனது ஐந்து ஏக்கர் நிலம் இருக்குங்க அதுல பயிர் வைக்கலானு நினைக்கிறேன்…

அதுக்கு உங்க வங்கில பயிர் லோன் வாங்கலாமேனு வந்தேனுங்க…

மேலாளாரோ ம்ம்ம்ம்ம்ம்… லோன்ல தரலாம் ஆனா நீங்க லோன் வாங்கினதுக்கு அப்புறமா ஒழுங்க பணம் கட்டலணா உங்க நிலத்த நாங்க ஏலம் விட்டு விடுவோம் பராவாயில்லை என்றார்… வேலனும் அதற்கு அந்த மாதிரியான அளவுக்கு நான் போக விடமாடடேன் ஐயா சரியாக எல்லா தவனையும் கட்டி முடிச்சுடுவேன் நீங்க என்னைய நம்பி பணத்த தரலாம் என்றார்…

வங்கியின் மேலாளர் யோவ் எல்லா பணம் வாங்கும் போது இப்படிதான் வாய்க்கு வந்தத சொல்றது அதுக்கப்புறம் லோன அரசாங்கம் எப்படியும் தள்ளுபடி பண்ணிடும்னு பணத்த கட்டாமலே வச்சிக்கிறது…

நாங்களும் உங்க வீட்டுக்கு நாயா அலையுனும்.. இந்த மாதிரி சொல்லி எத்தன பேர் இங்க லோன் வாங்கிட்டு போய் கட்டாமா இருக்கானு உனக்கு தெரியுமாய்யா என்னோமோ பேசுற என்று வேலவனை கடித்தார்…

மேலளாரின் பேச்சை சகித்துக் கொண்டு சரி ஐய்யா அப்போ லோன் தர மாட்டிங்களா எனக்கு என்று கேட்டான் அதற்கு மேலளார் நான் யாரு உனக்கு லோன் தரமுடியாதுனு சொல்ல… உனக்கு அரசாங்கம் லோன் தருது அத ஏமாத்தமா பணத்த சரியா கட்டினா போதும் என்று சொல்லிய படியே சரி நிலத்தோட பட்டா சிட்டா வில்லங்கம் எல்லாம் இருக்க என்று வேலனை கேட்டார் வங்கி மேலாளர்..

வேலனும் எல்லாம் என் கை பையிலேயே இருக்கு ஐயா என்றான் அதற்கு மேலாளர் எல்லாத்தையும் பையிலேயே வச்சுட்டு யிருந்தா எப்படி எல்லாதையும் வெளியே எடுய்யா அப்புறம் இந்த வங்கில உனக்கு சேமிப்பு கணக்கு இருக்கா என்றார் அதற்கு வேலனும் ம்ம்ம்ம் இருக்கு ஐய்யா வங்கி கணக்கோட பாஸ்புக்கு இதோ பாருங்க என்று எல்லாவற்றையும் எடுத்து வங்கியின் மேலாளரின் கைகளில் கொடுத்தான் வேலன்..

வங்கி மேலாளர் வேலனின் நிலத்தின் பட்டா சிட்டா வில்லங்கம் போன்ற சான்றிதழ்களை சரி பார்த்தார் பின் வேலனை பார்த்து எல்லாம் சரியாக உள்ளது, நான்கு லட்சம் வரை லோன் தரலாம். ஆனால் மாதம் உங்களால் எவ்வளவு பணம் கட்ட முடியும் என்று கேட்டார்..

அதற்கு வேலன் நான் எட்டாயிரம் ரூபா கட்டிவிடுகிறேன், பயிர் அறுவடை செய்த பின் வரும் பணத்தில் ஒரு பகுதியை அப்படியே வங்கியில் கட்டி என் கடனை குறைத்துக் கொள்கிறேன் என்றான் வேலன்.

அதற்கு வங்கி மேலாளரும் சரி என்று ஒப்புக் கொண்டு வங்கியின் ஃபில்டு ஆப்பிஸரை பாருங்கள் அவர் எல்லாத்தை பார்த்துக் கொள்வார் என்று வங்கி மேலாளர் வேலனை அனுப்பி வைத்தார்..

வேலன் ஃபில்டு ஆப்பிஸரை பார்த்து விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து அதனுடம் லோனுக்கு தேவையான எல்லா சான்றிதழ்களையும் வைத்துக் கொடுத்தான்.

வேலன் கொடுத்த விண்ணப்பத்தை வாங்கி பார்த்த ஃபில்டு ஆப்பிஸர் நாளைக்கு உன் நிலத்த பார்த்த பிறகு தான் லோன் தருவார்கள் என்று அனுப்பிவைத்தார்..

ஃபில்டு ஆப்பிஸரும் வங்கி மேலாளரும் காரில் வந்து வேலனின் நிலத்தை ஆய்வு செய்தார்கள் அப்போது அருவர்களுக்கு கூட்டிங்ஸ் வாங்கி கொடுத்தான் மேலாளர் அதை வேண்டாமேன்றார் ஃபில்டு ஆப்பிஸர் மட்டும் வாங்கிக் கொண்டார்…

பிறகு மேலாளர் வேலனிடம் சொன்னார் உங்களுக்கு லோன் தருகிறேன் உங்களுக்கு சாட்சி கையெழுத்து போட ஒய்வுப் பெற்ற அரசு அலுவலகத்திலோ அல்லது ராணுவத்தில் பணிப்புரிந்த நபர் இருவரை அழைத்து வந்து உங்கள் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கேளம்பினார்.

அதன்பின் வேலன் மேலாளர் சொன்னதை போன்றே இருவரை அவருடன் அழைத்துச் சென்று லோனை பெற்றுக் கொண்டான்.

வேலன் ஐந்து ஏக்கர் நிலத்தையும் உழுது பயிரிட நினைத்தான் ஆனால் வேலனின் மனைவி வேண்டாம் முதலில் மூன்று ஏக்கருக்கு நெல்லை போடலாம் மீதம் இருக்கும் இரண்டு ஏக்கரில் நிலக்கடலையும் உளுந்தும் போடலாம் என்று யோசனை சொன்னாள் அதை அவ்வாறே செய்ய வேலனும் முடிவு செய்தான்.

மூன்று ஏக்கருக்கு தேவையான நெல் விதையை விதைத்தான் வேலன் இரண்டு மாதங்கள் சென்றது, அதன் பிறகு மூன்று ஏக்கரையும் உழுது நெல் பயிரை நடவு செய்தும் முடித்துவிட்டான்.

மீதம் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தை ஏர்உழவுதளை செய்தான் அப்போது தான் அரசு அதிகாரிகள் வந்து வேலனை தடுத்தார்கள், இந்த இரண்டு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திற்கு சொந்தமானது நீ இதுக்கு இன்னும பணம் வாங்க வில்லையா என்று கேட்டார்கள்.

வேலனுக்கு எதுவும் புரியாமல் நின்றான் ஏன் என் நிலத்தை உழ வேண்டாம் என்று சொல்வதற்கு நீங்கள் யார் என் அனுமதியில்லாமல் எப்படி அரசு என் நிலத்தை கையெகப்படுத்த முடியும் என்று வந்த அதிகாரிகளிடம் சண்டையிட்டான் வேலன்..

அதற்கு அரசு அதிகாரிகளோ உன்னால் இனி எதுவும் செய்ய முடியாது அரசு தரும் பணத்தை வாங்கிகக் கொண்டு செல் இல்லை என்றால், இதுவுமே இல்லாம் போகும் பார்த்துக் கொள் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்கள்.

வேலன் அவனது நண்பர்களை பார்த்து நடந்த விசயத்தை சொன்னான். அப்போது அவர்கள் சொன்னார்கள் என்ன வேலா உனக்கு தெரிந்த விசயம் தானே நம்ம ஊர் நிலத்துல தானே ஏதோ எண்ணெய் எடுக்க போறாங்க அதுக்கான நிலத்தை அரசு நம்ம கிட்ட யிருந்து வாங்கி அந்த நிலத்த வெளிநாட்டு வியாபாரிக்கு கொடுத்துவிட்டது..

எண்ணெய் கிணறு தோண்ட தான் நிலத்த உழ வேண்டானு சொல்லி தடுக்கிறாங்கய்யா, இது உனக்கும் தெரியுமே அப்புறம் ஏன் இத எங்ககிட்ட வந்து நீ கேக்கிற என்றார்கள்

அதற்கு வேலன் அட இல்லப்பா அதுக்கு தானே தனியா நிலத்த ஒதிக்கிட்டாங்களே இப்போ சம்மதமே இல்லாம என் நிலத்தை கேட்கிறாங்க அதன் எனக்கு ஒன்னுமே புரியாலப்பா என்றான்…

அப்போது நண்பன் ஒருவன் சொன்னான் உன் நிலத்தில் தான் அதிகாரிகள் வந்து போக அலுவலகம் கட்டப் போவதாக பேசிக்கிட்டாங்க வேலா நீ எதுக்கும் நம்ம பஞ்சாயத்து தலைவர சத்த பாத்து பேசிப்புடு அதான் நல்லது என்றார்கள்.

பஞ்சாயத்து தலைவரை பார்க்க வேலன் சென்றான் அவரிடம் நடந்த விசயத்தை சொல்லி கேட்டான் அதற்கு பஞ்சாயத்து தலைவரும் ஆமா வேலா அது உண்மை தான் என்னால் எதுவும் செய்ய முடியாது இனி அரசு செய்வதை வேடிக்கை மட்டும் தான் பாக்கனும் என்றார்..

வேலன் மனமுடைந்து வீடிற்கு வந்தான் நடந்த விசயத்தை நினைத்து அழுதான் எப்படி வாங்கின் கடனை அடைக்கப் போகிறோமோ என்ற கவலை அதிகமானது.

இரண்டு ஏக்கர் நிலத்திற்கான பணத்தை தர அரசு அதிகாரிகள் வேலனின் வீட்டிற்கு சென்றார்கள் வேலனிடம் அரசு அறிவித்த பணத் தொகையை சொன்னதும் வேலனுக்கு மூச்சடித்துப் போனாது அவ்வளவு குறைவான தொகைக்கு நிலத்தை கேக்கிறது அரசு.

வெளியே விற்றால் ஒரு சென்டுக்கு பதிநான்காயிரம் ரூபாய். ஆனால் அரசு கேட்பதோ இரண்டாயிர ரூவாக்கு என்று புலம்பினான் வேலன் சரி வேற வழி இல்லையே அரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதே என்று நிலத்தை விட்டான் வேலன்.

வங்கியில் வாங்கி கடனை அவனது கையிருப்பில் இருந்த பணத்தை வைத்து கட்டி சமாளித்தான் வேலன்..

ஆனாலும் மன வேதனையில் நெல் விதைத்த நிலத்தையும் பார்த்துக் கொண்டான் எண்ணெய் கிணறு தோண்டுவாதாக நிலத்தை சேதப்படுத்துகிட்டு இருந்தார்கள்..

வெடி வைத்து நிலத்தை தோண்டுவதும் அது இது என்று மண்ணில் கலந்தது அவை நிலத்தடிநீரை விட்டு வைக்கவில்லை எல்லாமே விஷமாக மாறிப் போனது..

நெல் பயிர் பூ அரும்புகட்டி இருந்த சமயத்தில் எல்லாமே கறுக ஆரப்பித்தது வேலன் நிலம் மட்டும் அல்ல அந்த ஊர் நிலங்களும் தான்.. என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார்கள் ஊர் மக்கள்.

வேலன் மனம் பயிர் கறுகுவதை பார்த்து பொறுக்கவில்லை ஒரு நிலையில் வெறுத்துவிட்டான் என்ன உலகம்டா இது என்று.?

ஆறு மாதங்களாக வங்கியில் வாங்கிய லோன் பணம் வேலன் கட்டவில்லை. உடனே பணத்தை கட்ட சொல்லி நோட்டீஸ் வருகிறது வேலனுக்கு..

இப்படியாக ஒரு வருடம் சென்றுவிட வங்கியில் இருந்து கடைசி எச்சரிக்கை நோட்டிஸ் வருகிறது லோன் தொகை மற்றும் அதற்கான வட்டியை சரியாக கட்டவில்லை என்றால் உங்கள் நிலம் ஏலம் விடப்படும் என்று அதில் எழுதியிருந்தது.

இதை வேலன் எதிர் பார்க்க வில்லை விவசாய நிலத்தை அடிமட்ட விலைக்கு வாங்கியது இந்த அரசு.
இந்த நிலத்தின் மேல் வாங்கின கடன் தொகையை தள்ளுபடியும் செய்யாதாம் அந்த கடனை நான் தான் கட்ட வேண்டுமாம் நிலத்தையும் பிடிங்கிக் கொண்டு இப்படி சாகடிக்கிறதே என்றும்

பயிரை மட்டுமே நம்பி வாழும் எங்கள் நிலங்களை இப்படி விளைச்சலே இல்லாத நிலைக்கு தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது இப்படி நடந்துக் கொண்டால் தற்கொலை செய்வதைத் தவிற வேறு வழியே இல்லை..

இனியும் தாமதிக்காமல் நீதிமன்றத்திற்கு சென்றுவிட வேண்டும் அல்லது சாக வேண்டும் இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதே நல்லது என்று யோசித்துக் கொண்டே இருந்தான்

.. அப்போது தீடிர் என ஊர் மக்கள் அலரல் சத்தம் கேக்கவே வேலன் ஓடினான்.

எண்ணெய் கிணறு வெட்டிக் கொண்டுயிருந்த 20தொழிலாளிகள் அந்த எண்ணெய் கிணறுக்குள் மண் சரிந்து மண்ணோடு மண்ணாக புதைத்துப் போனார்கள்.

இதை எதிர் பார்க்காத அதிகாரிகள் எல்லாரும் அங்கியிருந்து ஒடிவிட்டார்கள் இந்த தகவல் எண்ணெய் கிணறு தோண்டும் வெளிநாட்டு நிறுவனத்துக்கும் சென்றது.

இந்த எண்ணெய் கிணறு வேண்டாம் என ஊர் மக்கள் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் போடுகிறார்..

இதுதான் சயம் என்று வேலனும் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறான்.

வேலனின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது வங்கி தரப்பில் இருந்து வந்த வக்கீல் வேலன் கடந்த ஒன்னரை ஆண்டுகலாக அவர் வங்கியில் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தவேயில்லை அவருக்கு முறையாக எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதன் விளைவாகவே தற்போது அவரின் நிலத்தை சட்டப்படி ஏலம் விட வங்கி முடிவு செய்துள்ளது என்று வாதாடினார்.

அதற்கு வேலன் நீதிபதிகளை பார்த்து வணக்கும் சொல்லியே பின் அவன் தரப்பு நடந்த விவரங்களை சொன்னான் எண்ணெய் கிணறால் என் நிலங்களே நாசமாக போய்விட்டாது ஐயா

இனி என்னிடம் நிலம் இருந்தாலும் தேவையில்லாத நிலமாகதான் இருக்குமே தவிற பயிர் விளைச்சல் நிலமாக மாறாது.

நிலத்தின் மண் அதன் உயிரை இந்த அரசும் எண்ணெய் கிணறு தோண்டிய நிறுவனுமும் தான் எடுத்துவிட்டார்கள் ஐயா என்றான்.

நீதிபதிகள் வேலன் சொல்லியதை கவனத்தில் வைத்து வேலனிடம் கேள்விகளை கேட்டார்கள்..

வங்கியில் கடன் வாங்கியதை போலவே திரும்ப அந்த பணத்தை கட்ட வேண்டியைது உங்கள் கடமைதானே?

நீங்கள் எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு முன்பாகவே வங்கியில் கடன் வாங்கி விட்டிர்கள். ஆனால் இந்த எண்ணெய் கிணறால் நீலமோ வீணாக போய்விட்ட காரணத்தால் வங்கியின் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை சரிதானே என்றார்கள் ?

வேலன் அதற்கு ஆமா ஐய்யா இப்பக்கூட நான் கடன தரமாட்டேனு சொல்லல, எனக்கு விவசாயத்த விட்ட வேற தொழியில் தெரியாது.

மண்ணில போட்ட காச பயிரா வளர்த்து என் உயிரை காப்பாதும் என்ற நம்பிக்கையில தான் நான் பயிரே செய்தேன். ஆனா ஏங்கயிருந்தோ வந்து இந்த ஊர்ல தான் எண்ணெய் இருக்குனு விவசாய நிலத்த மொத்தமா அழிச்சிட்டாங்க அதுல என் பயிரும் கறுகிப்போச்சி என்று அழுதான்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதற்கான தீர்ப்பை நாளை சொல்கிறோம் என்றார்கள்.

அதே நேரத்தில் எண்ணெய் கிணறு தோண்டிய நிறுவனத்தின் வழக்கும் விசாரணைக்கு வந்தது. வேலனும் அங்கேயே இருந்து பார்த்தான். இந்த எண்ணெய் கம்பெனிக்காரன் 20பேர் செத்ததுக்கு என்ன தான் நீதிபதிக்கிட்ட சொல்றானுங்கனு பாக்கலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டே அவர்களை பார்த்தான்.

நீதிபதிகள் வெளிநாட்டு நிறுவனத்தின் அஜாக்கிரதையை முதலில் கண்டித்தார்கள் அதன் பின் வழக்கு விசாரணையை தொடர்ந்தார்கள்.

யாரும் எதிர் பார்க்காதவாறு எண்ணெய் நிறுவனம் ஒன்றை சொன்னது கிணறு தோண்டும் போது தற்செயலாகவே மண் சரிந்தப்போனது இத்தனைக்கும் மேல் கரைகள் வலுமையுடன் தான் இருந்தது ஆனால் எப்படி மண் சரிந்தது என்றே தெரியவில்லை, இந்த ஒரு கிணறு மட்டுமே ஆட்களை வைத்து வெளிவட்ட கிணறாக தோண்டப்பட்டது..

மீதமுள்ள கிணறுகள் எல்லாமே ஆழ்துளைக் கிணறுகள் இதுவரையிலும் சுமார் 500கோடி செலவு செய்துள்ளோம். அதற்கான கணக்கும் எங்களிடம் உள்ளது, இறந்த குடும்பங்களுக்கு அரசுடன் நாங்களும் இணைந்தே நிதி உதவி செய்வோம் என்று சொன்னது.

நீதிபதிகள் இந்த கருத்துகளை ஏற்றுக் கொண்டது. ஆனால் மக்கள் உங்கள் நிறுவனத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஆகவே நீங்கள் இவ்வேலை நிறுத்த வேண்டும் அங்கு கிணறுகளை தோண்ட அனுமதி இல்லை என்று சொன்னது..

அதற்கு அந்த வெளிநாட்டு நிறுவனம் சொன்னது சரி தாங்கள் சொல்வதைப் போன்றோ நாங்கள் அங்கு கிணறுகளை தோண்டவில்லை இதுவரையில் அங்கு கிணறு தோண்ட மிக அதிக பணத்தை செலவு செய்துள்ளோம்.. இதனால் பெறும் இழப்பு எங்கள் நிறுவனத்திற்கே..!

வங்கியில் வாங்கிய கடனை திருப்பி எங்களால் கட்ட முடியாது அந்த தொகையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு நிறுவனதிற்கு சாதகமாக வாதிட்டார் வக்கீல் இதை கேட்ட நீதிபதிகள் இதற்கான தீர்ப்பை நாளை சொல்கிறொம் என்று சொல்லிவிட்டார்.

வேலனுக்கு தைரியம் வந்தது என்னட இது நாம வேறும் நாலு லட்சம் வாங்கினதுக்கே நம்ல இப்படி அலைய விடுறானுங்க இவனுங்க ஆயிரம் கோடி கடன வங்கில வாங்கிட்டு திருப்பி தர முடியாதுனே சொல்லிட்டு போறானுங்களே நாளை நாமளும் பாத்துக்கலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டே வெளியே சென்றான்.

மறு நாள் காலை தயார் நிலையில் வேலன் இருந்தான் நீதிமன்றத்தில் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதனை சரியாக மனதில் பதிய வைத்துக் கொண்டு நீதிமன்றம் சென்றான்.

நீதிபதிகளும் வந்தார் தீர்ப்பை வாசிக்கும் முன்பு வேலனை அழைத்தார்கள் நீதிபதிகள் பின் தீர்ப்பை நாங்கள் சொல்வதற்கு முன் நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று நீதிபதிகள் வேலனை கேட்டார்கள்.

உடனே வேலன் சரிங்க ஐயா நேற்று நீங்கள் சொன்னதை போல் நான் வாங்கி கடனக்கு நானே தான் பொறுப்பு அதை நான் என் மனப்புர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனக்கு சில சந்தேகம் வருகிறது அதற்கு உங்களால் மட்டுமே விடை சொல்ல முடியும் ஐய்யா என்றான்..

நீதிபதிகளும் சரி உன் சந்தேகம் என்ன சொல் என்றார்கள்.

நான் என் நிலத்தை நம்பியே வங்கியில் கடன் வாங்கினேன். வங்கியும் என் மீதான நம்பிக்கையின்மையால் தான் என் சொத்தாக இருக்கும் வீடு நிலத்தை நம்பியே எனக்கு கடன் கொடுத்தது ஐய்யா..

வங்கி கொடுத்த கடனை நான் எப்படி அடைப்பேன் நிலத்தில் பயிரிட்டு அதில் வரும் இலாபமோ நஷ்டமோ அதை வைத்துதானே கடனை திருப்பி தர முடியும்?

எனக்கே தெரியாமல் என் நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுமாம். ஆனால் அந்த நிலத்தின் பெயரில் வாங்கிய கடனை நான் கட்ட வேண்டுமாம், அதிலும் அரசாங்க விலையின் படியே ஒரு தொகை தரும் அத்தொகை என் நிலம் தரும் ஒரு அறுவடை காசைவிட மிக குறைந்த தொகை. அந்த பணத்தை வைத்து எப்படி நான் வங்கி கடனை கட்டுவது… நிலத்தை அரசு பிடிங்கொண்டது வங்கி அதன் கடன்கேக்கிறது இதனால் கந்து வட்டி வாங்கி வங்கியின் கடனை கொடுத்துவிட்டாலும்கூட வாங்கி கந்து வட்டிக்காரணுக்கு என்னால் எப்படி பணம் தரமுடியும்…?

என் நிலத்தையும் வாங்கிக் கொள்கிறீர்கள் வங்கி கடனையும் கட்ட வேண்டுமேன்றால் எதை வைத்து நான் பணம் கட்ட முடியும்..?

என்னை நம்பி யார் பணம் தருவார்கள் ஐய்யா?

ஒரு வெளிநாட்டு நிறுவனம் நம் நாட்டுக்கு வந்து நிறுவனம் தொடங்கினால், அரசுக்கு 3சதவீதம் கழிவு தரனும்னு வச்சுக்கலாம். ஒரு 2000கோடி ரூபாய் பட்ஜெட் என்றால் மூன்று சதவீத கழிவு 6கோடி ரூபா அரசுக்கு வருவாய் வருது ஆனால் இதில் எனக்கேன்ன லாபம்…….?

என் கடனை தள்ளுபடி செய்கிறதா அல்லது வாங்கிய நிலத்திற்கு பதிலாக வேறுயிடத்தில் நிலம் வாங்கி கொடுக்கிறதா என்றால் இல்லை?.

வெளிநாட்டு நிறுவனம் அரசும் தான் வாழ்கிறதே தவிற ஏழை மக்களும் விவசாயிகளும் தான் பாதிக்கப்படுகிறோம் ஐயா…!

நாட்டிற்கு வளர்ச்சி தேவை தான் ஆனால் அந்த வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் தான் தவறுள்ளது…

இப்போது நான் விவசாயம் செய்ய வங்கியில் கடன் வாங்கினேன். அதை அப்படிய நிலத்தில் தான் விதைகளாக போடுகிறேன், அந்த விதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானதா? இல்லை அறுவடை செய்யப்படும் நெல் அரிசியாக மாறி பத்து வீடுகளுக்கு போகும்… இது என்னால் ஏற்படும் வளர்ச்சி.. இதே போன்றே மற்ற விவசாயியும் நாட்டிற்கு வளர்ச்சியை கொடுக்கிறான் ஐயா, அதை யாரும் கண்டுக் கொள்வத்தில்லையே ?

ஐய்யா இப்போ இந்த எண்ணெய் கிணறு இனி தோண்டக்கூடாதுனு நீங்க தீர்ப்பு சொல்றீங்கனு வைங்க

வெளிநாட்டுக்காரன் என்ன பண்ணுவான்?. நம்ம நிலத்தையும் அழிச்சதும் இல்லாம கடனையும் வாங்கிட்டு உங்களாதான் இந்த திட்டம் நின்னுப் போச்சுனு ஏதுவுமே தராம அவன் ஊருக்கே போய்டும்..!

அவன் போன பின்னாடி நிலத்தை பழைய விளைநிலமா இந்த அரசால தர முடியுமா? அப்படியும் தந்தாலும் அந்த நிலத்துல தான் விவசாயம் செய்ய முடியுமா?

எல்லா இரசாயனத்தையும் நிலத்தடிநீர்ல கலக்கவச்சி எல்லாதையும் நாசம் பண்ணிட்டு போய்யிடுறான். அரசும் நீ போனா எனக்கேன்ன இன்னொருத்தன் வருவானு எங்க வரி பணத்த வீண் செலவு செய்யுது ஐயா. இனி இத பண்ணுங்க.

நம்ம நாட்டல இருக்கிற நிலம் எல்லாதைமே வெளிநாட்டவனுக்கு கொடுத்துடுங்க. இங்க இருக்கிற ஏழை மக்கள் விவசாயி நடுத்தர மக்கள் இவங்கள எல்லாரையும் தூக்கி ஜெயில்ல போடுங்க, இல்ல அடிமைகளா வெளிநாட்டுக்கு யாருக்காச்சும் கொடுத்துடுங்க…!

ஏதுக்கு உங்களையும் எதிர்த்து வெளிநாட்டு நிறுவனத்தையும் எதிர்த்து விவசாய நிலம் எங்கள் கண்கள் முன்னே அழியறத பார்த்து வெந்து வாழ்க்கையே வேணாணு தற்கொலை செய்வதை விட நான் கேட்ட தண்டணையைக் கொடுத்துடுங்கய்யா?!

நாங்க இல்லாம போனாவே இந்த நாடு வளர்ச்சி பெற்று முதலிடத்துகே வந்துடும் அரசும் வெளிநாட்டு நிறுவனம் வாழும் இடத்துல எங்கள மாதிரியான விவசாயம் எதுக்கு வேணா ஐயா…

நான் கேட்ட தண்டணையே தந்துடுங்க நான் எதாச்சும் தப்பா பேசியிருந்தா என்ன மன்னிச்சுடுங்கய்யா என்றான் வேலன்.

இதை கேட்ட நீதிபதிகள் மாதம் தேதி சொல்லாமல் தீர்ப்பை தள்ளிவைத்துவிட்டது.

உண்மை வெல்ல வேண்டும் என்றால் நேர்மையான தீர்ப்புகள் வர வேண்டும்.

எந்த தரப்பையும் சாராமல் நேர்மையுடன் தீர்ப்பை எழுத வேண்டும் என்றால் அதற்கு சில காலம் தேவை தான். ஆனால் அதற்காக வருடங்களை கடக்கதாதவாறு இருக்க வேண்டும்.

வாய்மை வெல்ல தனி மனிதன் தேவை என்றாலும் அதை கடந்து நேர்மையான சட்டமுறைகளை கையாள வேண்டும்.

விளை நிலங்களை இனி விவசாயம் செய்ய மட்டுமே அரசு கையெகப்படுத்த வேண்டுமே தவிற வேற எதற்குமில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *