தீபம் – ஒரு பக்க கதை

 

ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் பள்ளிக்கூட தாளாளர் கேஷியரை
அழைத்தார்.

”வாய்யா..மொத்தம் 2500 மெழுகுவர்த்தியாவது தேவைப் படும்னு நினைக்கிறேன்”

”ஆமாங்கய்யா, நீங்க மீட்டிங் போடும்போதே சப்ளையர்கள் கிட்டே ஃபோன்ல பேசி ரேட் வாங்கிட்டேன், தபாருங்க, கம்பாரேடிவ் ஸ்டேட்மெட்ன்ட் கூட ரெடி பண்ணிட்டேன்”

வாங்கிப் பார்த்த தாளாளர், ”யாருக்கு ஆர்டர் தர்றது?” என்றார்

“இதுல என்னங்க கேள்வி வழக்கம்போல உங்களுக்கு 10 பர்சண்ட் கமிஷன் எந்த கடைக்காரன் தர்றானோ அவனுக்குத்தான் ஆர்டர். அதுதானே முறை”

”அதானே பார்த்தேன்” என்று புன்னகைத்தவாற்றே வடை பொட்டலத்தைப் பிரித்தார் தாளாளர்.

கிழிந்த செய்தித்தாள் பொட்டலத்தில் அன்னஹசாரே சிரித்துக் கொண்டிருந்தார்..!

- சூரியகுமாரன் (ஏப்ரல் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று சித்திராப்பௌர்ணமி இந்த உலகத்தினை நமக்கு அடையாளப்படுத்திய தாயவள் நம்மை விட்டுச் சென்றாலும் அவளின் உன்னதங்களை ஞாபகப்படுத்திச் செல்லும் நாள்..இதனை மறவாத தாமரை கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டை இரண்டு படுத்துக்கொண்டு இருக்கிறாள்.சமையலறையில் அவள் செய்யும் ஆரவாரம் இறந்து போன பாட்டிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
“ஏங்க நம்ம குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு. அப்புறம் ஆபீஸ் போங்க” என்று சொன்னாள் நீலா. “போடி எனக்கு ஆபீஸ்ல அவசரமான வேலை இருக்கு டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா’ என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜன். ஆமாம் ...
மேலும் கதையை படிக்க...
எழுதியவர்: நாராயண் கங்கோபாத்தியாய் ஐயா, நீங்கள் இந்த விடைத்தாளைக் கடைசிவரை படிப்பீர்களா என்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் விடைத்தாளில் ஒர கேள்விக்குக்கூடவிடையெழுதவில்லை. இந்தக் கடிதத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். நீங்கள் ஒரு சில வரிகள் படித்ததுமே புருவத்தைச் சுளிப்பீர்கள், விடைத்தாளில் சைபர் போடுவீர்கள், பிறகு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில் வேகமாக அக்கரையை நோக்கி ஓடினார். ஆனால் முடியவில்லை. மணல் நெருப்பாகத் தகதகத்தது. வரும்போது செருப்பை மாட்டிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
வீட்டை விட்டு ஓடி வந்தேன். அப்படிச் சொல்லக்கூடாது. வீடென்று எதைச் சொல்வது? வீடே இல்லை. கண்ணி வெடியில் சிதறிய சிங்கள இராணுவத்தின் கணக்குத் தெரியவில்லை. ஆனால் எரிந்த குடிசைகளின் கணக்குத் தெரியும். முப்பத்தியிரண்டு. இராணுவம் சுட்டு இறந்துபோன தமிழர்களின் கணக்கும் தெரியும். ...
மேலும் கதையை படிக்க...
ஞானம்
அவசர வேலை – ஒரு பக்க கதை
மதிப்புக்குரிய, விடைத்தாள் திருத்துபவர் அவர்களுக்கு
காவல்
சகபயணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)