“குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.
“என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன்.
வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார்.
“ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனும் பெரியவரிடம் சென்றான். அவனையும் அவர் ஆசிர்வதித்தார். ஆனால், அந்த இளைஞன் விடவில்லை. “பெரியவரே, இந்த ஆசிர்வாதத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என் பிழைப்புக்கு ஏதாவது கொடுங்கள்’ என்று கேட்டான்.
உடனே பெரியவர் தன்னுடைய பையைத் துழாவி ஒரு அழுக்கு மோதிரத்தை எடுத்து, “இதை விற்று உன் பிழைப்புக்க வைத்துக்கொள்’ என்றார்.
நூல் சுற்றி கரை படிந்த அந்த அழுக்கு மோதிரத்தை பார்த்த இளைஞனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. என்றாலும், அந்த மோதிரத்தை எடுத்துக்கொண்டு
போய் கிராமத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்க முயன்றான். ஆனால், யாரும் அந்த அழுக்கு மோதிரத்தை வாங்க முன்வரவில்லை. இந்த மோதிரம்
விலை போகாது என்ற முடிவுக்கு வந்த இளைஞன் மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான்.
அப்போது அந்தப் பெரியவர், “இந்த மோதிரத்தை நகைக் கடையில் விற்க முயற்சித்தாயா? முதலில் போய் ஒரு நகைக் கடையில் கேள்’ என்று சொன்னார்.
பெரியவர் சொன்னது போல் ஒரு நகைக் கடையில் மோதிரத்தை காட்டியபோது. அவர்கள் உடனே அதன் அழுக்கை நீக்கி அதன் தரத்தை கண்டுபிடித்துவிட்டனர்.
அவனுக்கு நல்ல பணமும் கொடுத்தனர்.’
இந்தக் கதையைச் சொன்னதும் வேலை தேடி வந்திருந்த இளைஞனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது.
அப்போது அவனுக்கு குரு சொன்ன வின் மொழி:
திறமை அறிந்தவர்களிடம் திறமை காட்டினால்தான் பலன்.
- வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)
தொடர்புடைய சிறுகதைகள்
குருவே, என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.’’ என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“வருத்தப்படாதே, என்ன பிரச்னை?’’ என்று கேட்டார் குரு.
”என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்னை ...
மேலும் கதையை படிக்க...
“குருவே நான் அடிக்கடி பதட்டமாகிவிடுகிறேன். அதனால் நிறைய பிரச்னைகள் வருகின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. அப்படியா?”
ஆமாம் குருவே பதட்டத்தில் நான் செய்யும் காரியங்கள் எல்லாம் தப்பாக முடிகிறது” என்று சொன்னம் அவனுடைய பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு ஆபீஸ்ல ரொம்ப பிரச்னை. எல்லா வேலையும் என் தலைலதான் விழுது. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“ஏன், மத்தவங்க யாரும் உங்க ஆபீஸ்ல இல்லையா?”
“இருக்காங்க குரு. ஆனா அவங்க யாரும் என்னளவு வேலை செய்ய மாட்டாங்க. ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு சில லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது எப்படி?” என்று ஆர்வமாய் கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“லட்சியங்களை அடைய நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்ன இளைஞனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, என்னை எல்லோரும் ஏமாளி என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு கூறியவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“என்ன பிரச்சனை?”
“என்னை எல்லோரும் எளிதில் ஏமாற்றிவிடுகிறார்கள். நான் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் இளைஞன்.
அவனின் பிரச்சனை குருவுக்கு புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை ...
மேலும் கதையை படிக்க...
"குருவே, நான் நிறைய ஏமாந்து விடுகிறேன்” என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"ஏன்! என்ன பிரச்னை?"
"என்னைச் சுற்றியிருப்பவர்கள் என்னை ஏமாற்றி விடுகிறார்கள். நான் நம்புபவர்கள் காலை வாரிவிட்டு விடுகிறார்கள்” என்று சொன்னவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
“”ஒரு ...
மேலும் கதையை படிக்க...
“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.
“ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை ...
மேலும் கதையை படிக்க...
”குருவே, எனக்கு உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரிடமும் பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன” என்று சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“அப்படியா, என்ன பிரச்சனைகள் வருகின்றன?”
“அவர்கள் யாருமே உண்மையாக இருக்கவில்லை. எல்லோரிடமும் எதாவது கெட்ட குணம் இருக்கு. என்னால யார் கிட்டயுமே சரியா ...
மேலும் கதையை படிக்க...
"எனக்கு மனசு ரொம்ப பாரமாய் இருக்கிறது” என்ற சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
“என்ன பிரச்சனை? என்ன ஆயிற்று” என்று அவனைத் தேற்றும் விதத்தில் கேட்டார் குரு.
“குருவே நான் ஒரு தப்பு செய்து விட்டேன். அது என் மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது”
வந்தவனின் பிரச்சனை ...
மேலும் கதையை படிக்க...
“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.
“என்ன சங்கதி’ என்றார்.
“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள்தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை’ என்றான் வந்தவன்.
இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ...
மேலும் கதையை படிக்க...
பதறாமல் செய்யும் காரியம் சிதறாது!
பகிர்ந்து செய்தால் பளு குறையும்!
சிந்திக்காமல் செயலில் இறங்கினால்…
தீயவர்களை அடையாளம் காணுதல்…
இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!