திருமண அழைப்பிதழ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 6,834 
 

நான் வேலையிலிருந்து வீடு திரும்பியதும் எனக்குக் கோப்பியும் சான்விட்சும் தந்தபோது, அதோடு எனக்கு வந்திருந்த மூன்று கடிதங்களையும் என் மனைவி ஜூலியா எனக்குக் கொடுத்தாள். அவைற்றை எடுத்துக்கொண்டு போசனம் அருந்தும் மேசைக்கு முன் போய் அமர்ந்தேன் . மூன்று கடிதங்களில் ஒன்று என் பெயருக்கு வழமை போல் வரும் எனது கிரெடிட் கார்டு பில் . அடுத்தது டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் நான் எழுதிய ஸ்ரீ லங்காவில் மனித உரிமை மீறல்களும் ஐ நா சபையும் என்ற தலைப்பில் எனது கட்டுரையைப் பாராட்டி ஒரு தமிழ் வாசகரிடம் இருந்து வந்த கடிதம். மூன்றாவது கடிதம் அதை அனுப்பியவரின் பெயரிடாத ஒரு கடிதம். என் பெயரும் விலாசமும் ஆங்கிலத்தில் முத்தான எழுத்துகளில் எழுதி வந்திருந்தது. கடித கவரை பிரித்து கடிதத்தை வாசிக்க கவரில் எழுதி இருந்த அழகிய எழுத்தில், இருந்து கடிதம் மஞ்சுளாவிடம் இருந்து தான் வந்திருக்கும் என்று நான் ஊகித்தேன்.

“ என்ன பீட்டர் அழகிய எழுத்தில் ஆங்கிலத்தில் விலாசம் எழுதி வந்திருக்கும் கடிதம் யாருடையது ”? ஜூலியா கேட்டாள்

“ நான் நினைக்கிறேன் ஜூலி, நான் ஸ்ரீலங்காவில், வடக்கில் இருந்த அகதிகள் முகாமில் சந்தித்த ஜேர்னலிஸ்ட் மஞ்சுளாவினது என நினைக்கிறேன்”

“எனக்கு நினைவிருக்கு நீங்கள் உங்கள் ஊடகத்தில் இருந்து ஸ்ரீ லங்கா போய், போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலை அறிந்து வந்து உங்கள் ஊடகத்துக்கு ஒரு அறிக்கை எழுதியது . அப்போ எனக்கு நீங்கள் சொன்னது நீங்கள் முகாமில் சந்தித்த மஞ்சுள என்ற ஜேர்னலிஸ்ட் பற்றி. அவளின் கடிதமா இது “?

“அப்படித் தான் நான் நினைக்கிறேன் “ நான் பதில் சொன்னேன் .

நான் கடித கவரை பிரித்து கடிதத்தை பார்த்த பொது என் ஊகம் சரியாகவே இருந்தது. மஞ்சுளா தன் கையெழுத்தில் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதி கனடாவிலிருந்து அனுப்பி இருந்தாள். கடிதத்தொடு அவளின் திருமண அழைப்பிதலையும் அனுப்பி இருந்தாள்

அழைப்பு கவிதை வடிவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி புதுமையாக தன் எழுத்துத் திறமையைக் காட்டி இருந்தாள்

கடிதத்தை வாசித்தேன்

என் அன்புக்கும் மதிப்புக்குரிய பீட்டருக்கு என்று கடிதம் ஆரம்பித்தது.

என்னை உங்களுக்கு செட்டிக்குளம் மணிக் அகதிகள் முகாமில் சந்தித்து நினனைவிருக்கும் என நம்புகிறேன். ஆங்கிலத்தில் கனடாவில் வெளிவரும் சஞ்சிகைக்கு “பெண் அகதி” என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையை வாசித்துப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . அந்த கதையின் கரு ஒரு பெண் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பற்றியது. அந்த கதையின் கரு உண்மையை பிண்ணணியாகக் கொண்டது . நான் பிறந்த நாட்டில் நான் அனுபவித் துன்பங்களைக் கருவாக வைத்து தமிழில் சில இலங்கை பத்திரிகைளுக்கு எழுதி பாராட்டைப் பெற்றேன். ஆனால் நான் கனடாவில் உள்ள ஒரு ஆங்கில சஞ்சிகைக்கு எழுதிய “பெண் அகதி” என்ற கதையை வாசித்து வில்லியம் என்ற டொரோண்டோ யோர்க் யுனிவேர்சிட்டி மாணவன், என்னோடு அந்த சஞ்சிகை மூலம் தொடர்பு கொண்டார் அவர் மென்பொருள் துறையில் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டு இருந்தவர் . நான் வாழ்வதோ மனித உரிமை மீறல்கள் நிறைந்த ஸ்ரீலங்காவில். அவர் இருப்பது பல இன மக்கள் வாழும் மனித உரிமைகளை மதிக்கும் கனடாவில் . எனது கதை காளிதாசனின் மேகம் விடு தூது போல் இருந்தது.

நான் பிறந்தது இலங்கை உள்ள மாகாணத்தில் இருக்கும் மானிப்பாயில் . படித்தது உடுவில் மகளிர் கல்லூரியில் . ஊடகவியல் துறையில் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதே என் இலட்சியம். நம் நாட்டில் நடந்த ஈழத்துப் போர். நிலைமையிலும் , நான் படித்துக் கொண்டு இருக்கும் போதே யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் சுடு ஊற்று (Hot Spring) என்ற பிரபல ஆங்கில பத்திரிகைக்கு அப்பாச்சி என்ற புனைப் பெயரில் கோப்பி கடை (Coffee Shop) என்ற தலைப்பில் ஒரு தமிழ், சிங்கள, முஸ்லீம் நண்பர்கள் சந்திப்பைஅப்புஹாமியின் கோப்பிக் கடையில் சந்தித்து இலங்கை அரசியலையும் விமர்சிப்பதாக, நக்கல் கலந்து எழுதிவந்தேன் . அந்த எழுத்தே எனக்கு என் எழுத்து உரிமைக்கு எதிராகப் பிரச்சனை தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை . ஸ்ரீ லங்கா அரசியல் வாதிகள் நமது நாட்டில் ஊடக சுதந்திரமுள்ளது என்று எவ்வளவோ பேசினாலும் , அது நடை முறையில் நடக்காதது ஒன்று .

என் சக ஊடகவியளாளர் ராமன் சொன்னார்,

“மஞ்சுளா நீர் எழுதுவதைக் கவனமாக எழுதும் எனக்குத் தெரிந்த மட்டக்களப்பு எழுத்தாளர் ஒருவர் உம்மை போல் எழுதியதில் அரசின் எதிர்ப்பை சந்தித்து உயிர் இழந்தார். அவரை அரசு கூலி பட்டாளத்தை வைத்து கொலை செய்தாக நான் அறிந்தேன். அது மட்டுமல்ல கொழும்பிலிருந்து வெளிவரும் “ஞாயிறு தலைவர்” (Sunday Leader)

என்ற பத்திரிகை ஆசிரியருக்கும் அதே போன்ற கதி ” ராமன் சொன்னார்.

நானொரு துணிச்சல் காரி. தொடர்ந்து அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பல தமிழ் ஊர்களில் ஆர்மி நடத்திய படுகொலைகள் பற்றி எழுதினேன். அந்த ஞாயிறு தலைவர் கொலைக்கும் அரசின் ஆதரவு உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தொடர்பு உண்டு என்று மறைமுகமாக எழுதினேன் . அதுவே எனக்கு ஆபத்தில் முடிந்தது. எனக்கு விடுதலை புலிகளின் பெண் ஆதரவாளன் என்று பட்டம் சூட்டி, என்னைக் கைது செய்து போக போலீசார் என் வீட்டுக்குக் கதவை வந்து தட்டினார்கள் . என் எழுத்து அவர்களை என் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்தது. பிறகு என்ன,? வழக்கம் போல் குறுக்கு விசாரணை, துன்புறுத்தல்கள் . என்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தாதது என் அதிர்ஷ்டம் .என்னைக் கொழும்பில் இருக்கும் பல மாடிகள் கொண்ட கட்டிடத்தில் நாலாம் மாடியில் வைத்து குறுக்கு விசாரணை செய்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு நான் சூட்சுமமாகப் பதில் சொன்னேன். நான் போலீஸ் அதிகாரிகளின் மிரட்டல்களுக்கு மசியவில்லை . என் எழுத்து சுதந்திரத்தை நான் இழக்கத் தயாராக இருக்கவில்லை போரின் இறுதியில் பல நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு போர் புரிந்து, தமிழர்களின் உரிமை போராட்டத்துக்கு எதிராக வெற்றி பெற்றது. போரின் பின் பல தமிழர்கள் கைதானார்கள் . ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள் அகதிகளாய், ஒரு காட்டுப் பகுதியில். திறந்த வெளி முகாமில், அரசு சிறை வைத்தது . அந்த அகதிகளில் நானும் ஒருத்தி. அங்கு தான் உங்களை நான் சந்திக்க நேர்ந்து. எனது கதையை உங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன் கனடாவில் வாழும் எனது பேனா நண்பர் வில்லியம் பற்றி உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் கனடா சென்றதும் என் நண்பரோடு தொடர்பு கொண்டு எனக்குக் கனடா வர உதவுவதாக வாக்குறுதி தந்தீர்கள் . மேலும் நான் உங்களோடு தொடர்பு கொள்ள உங்கள் பிஸ்னஸ் கார்டை தந்து சென்றீர்கள் உங்கள் வாக்குறுதிப்படி என் நண்பர் வில்லியம் தன் ஸ்பொன்சரில் நான் கனடா வர உதவினீர்கள் . எங்கள் இருவரினதும் கடித உறவு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிவு பெறப் போகிறது. எனது திருமண அழைப்பிதழை இத்தோடு அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் மனைவியோடு நிட்சயம் வருவீர்கள் என எதிர் பார்க்கிறேன் , திருமணம் நடக்கும் இடம் பிக்கெரிங் என்ற இடத்தில் உள்ள எல்லா தேச மக்களின் சேர்ச்.(All nations Church) இந்த கடிதத்தை உங்கள் மனைவிக்கு வாசிக்கக்கொடுங்கள் . அப்போது அவவுக்கு என் நிலமை புரியும். என்னைப் போல் எத்தனையோ பெண்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பாடு பிற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து, புது வாழ்வு பெற்று குடும்பம் நடத்துகிறார்கள் என்பதை உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன்,

இப்படிக்கு

மஞ்சுளா வில்லியம்

கடிதத்தை வாசித்த பின் .திருமண அழைப்பிதலை வாசித்துப் பார்த்தேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை வடிவில் புதுமையாக அழைப்பிதழ் இருந்தது. தனது எழுத்து திறமையை மஞ்சுளா அழைப்பிதலில் காட்டி விட்டாள்

கடிதத்தை என் மனைவி ஜூலியாவுக்கு வாசிக்கக் கொடுத்தேன்’ அவள் கடிதத்தை வாசித்த பின் , “ பீட்டர் நாங்கள் இருவரும் அவசியம் மஞ்சுவின் திருமணத்துக்குப் போகவேண்டும் . தம்பதிகளுக்கு ஒரு நல்ல பரிசு கொடுக்க வேண்டும் “என்றாள் ஜூலி .

நான் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.

( யாவும் புனைவு)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *