திருமணம் – ஒரு பக்க கதை

 

வளாக நேர்முகத்தில் தேர்வு பெற்ற மாணவ மாணவியருக்கு நியமனங்களை வழங்கும் விழா அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

மதிய உணவுக்குப் பின் கலந்துரையாடல். அதன்பின் யார் யாரோ மேடை ஏறிப் பேச கடைசியாக பேசினார் கல்லூரி
நிறுவனத் தலைவர்.

“உங்க எல்லோருக்கும் ஒண்ணு சொல்றேன். வேலைக்கு போங்க, வேணாங்கல, ஆனா உடனே கல்யாணம் பண்ணிக்குங்க.
அதுதான் நல்லது. குடும்பமா இருந்தாதான் பரிவு பாசம் அன்பு எல்லாம் இருக்கறதோட வேலைலயும் கவனம் செலுத்த
முடியும்.’

புரியாமல் பார்த்த மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

இறங்கி வந்த நிறுவனரிடம் கேட்டார் சிறப்பு விருந்தினர்.

“என்ன சார், இப்படி பேசிப்புட்டிங்க. வேலை கிடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கணுமா, அதனால என்ன ஆகப் போவுது?’

“என்ன ஆகப்போவுதா? நகரத்துல நாலு கல்யாண மண்டபம் கட்டி வைச்சிருக்கேன். அஞ்சு விளையாட்டுப் பள்ளி, துவக்கப்
பள்ளி, உயர்நிலைப் பள்ளினு கட்டி வைச்சிருக்கேனே. இதுங்க கல்யாணம் பண்ணி பிள்ளை குட்டிகளை பெத்துப் போட்டா தானே எனக்கு வருமானம் என்ன நான் சொல்றது!’

சிறப்பு விருந்தினருக்கு மயக்கம் வந்தது.

- சூர்யகுமாரன் (ஏப்ரல் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
'மாடர்ன் டைம்ஸ்' திரைப்படத்தில் சார்லி சாப்ளின் மாட்டிக்கொண்டு விழிபிதுக்கும் பெரிய எந்திரத்தைக் காட்டிலும் மிகப் பெரும் எந்திரம் அது. சென்னை நகரின் மையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளாய் இயங்கிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கில் ரோபோட்கள் அதன் உள்ளும் புறமும் இருந்து கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
மதுரை சந்திப்பிலிருந்து அந்த பகல் பொழுது பாசஞ்சர் வண்டி மதியம் இரண்டு மணிக்குப் புறப்படும். இப்போது மணி 12.50 தான். இன்னும் முழுசாக 70 நிமிடங்கள் இருந்தது. 5 வது பிளாட் பாரத்தில் தூங்கி வழிந்த படி நின்று கொண்டிருந்தது. அறிவிப்பாளரின் ...
மேலும் கதையை படிக்க...
“மோகன்! கல்யாணத்துக்கு அப்புறமும் உங்க அம்மாவும் அப்பாவும் நம்மளோடதான் இருப்பாங்களா? மோகனின் ஆசைக் காதலி சௌம்யா கேட்டாள். அப்புறம் எங்கே போவாங்க? நம்மளோடதான் இருப்பாங்க! மோகன் சற்று அதிர்ச்சியோடு சொன்னான். அதுக்கில்லே… ஒருவேளை நாம தனிக்குடித்தனம் போய்ட்டாலும் அத்தையும் மாமாவும் தனியா சமாளிச்சுக்குவாங்கல்ல.. என்ன பேசுறே ...
மேலும் கதையை படிக்க...
தமிழ்நாடு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இரவின் காரிருளில் தவித்துக் கொண்டிருக்க சிங்கார சென்னை தன்னை அலங்கார கலர் கலராய் மின்குழல் விளக்குகளால் சீவி சிங்காரித்து மினுக்கி குலுக்கிக் கொண்டிருந்தது. அந்த குலுக்கலும், மினுக்கலும் அதிகாலை கதிரவன் வெளிச்சம் பரப்பிய பின்பும் கூட ...
மேலும் கதையை படிக்க...
மனைவி சரஸ்வதி, “ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க’ என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள். “அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க’ என்று கூறி அனுப்பினாள். குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ...
மேலும் கதையை படிக்க...
ஆன்மாக்களின் கல்லறை
ரயில் பயணங்களில்
நியாயம் – ஒரு பக்க கதை
ஒய்யாரச் சென்னை
அகல் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)