திருடன் – ஒரு பக்க கதை

 

“இந்தாங்க.. நாம ஊர்ல இல்லாத இந்த பத்து நாளும், நமக்கு வந்த பேப்பர்ஸ். எதிர் வீட்டு திருமால் சார் கொடுத்தார்…!’

“என்ன வைதேகி! ரொம்பப் பாதுகாப்பான அப்பார்ட்மென்ட்டுன்னு புதுசா இங்க குடிவந்த! பாரு…பத்து நாளும் நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருக்கான்!’

“என்னங்க சொல்றீங்க…?’

“அடுத்தவங்க பேப்பரை அனுமதியில்லாம படிக்கறதும் திருட்டுதானே…!’ என்றபடி வாக்கிங் கிளம்பிச் சென்றார் கண்ணன்.

எதிரே தென்பட்டார் அந்த திருடன் – இல்லை திருமால்.

“மிஸ்டர் கண்ணன்! ஒரு நிமிடம்…! இனிமேல் வெளியூர் போகும்போது, பேப்பர் போட வேண்டாம்னு சொல்லிடுங்க. ஏன்னா.. நீங்க எத்தனை நாளா ஊர்ல இல்லைங்கிறதை, வாசல்ல விழற பேப்பரே விளம்பரம் பண்ணிடும். யார் யாரோ வந்து போற அப்பார்ட்மென்ட்! நோட்டமிட்டு, வீட்டுக்கதவை உடைச்சாலும் உடைச்சிடுவானுங்க! அதான்… இந்த பத்து நாளும் உங்கள் பேப்பரை நான் எடுத்து வச்சிட்டேன்…!’ என்ற திருமாலை நன்றியோடு ஏறிட்ட கண்ணன். “ச்சே… நம்ம வீட்டைப் பாதுகாத்த
இவரைப் போயி திருடனா நினைச்சிட்டேனே…!’ என வருத்தப்பட்டார்.

- கோவை நா.கி.பிரசாத் (ஏப்ரல் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
எல்லோருக்கும் சம்பளம் கொடுத்து முடிய இரவு எட்டு மணி ஆகி விட்டது. வழக்கத்தை விட அன்று ஒருமணி நேரம் தாமதம் என்று உணர்ந்தான் சதீஷ். அது ஒரு ரெண்டுங்கெட்டான் ஊர். கிராமமும் இல்லை, பெரிய டவுனும் இல்லை. அந்த மாதிரி சின்னச் சின்ன ...
மேலும் கதையை படிக்க...
அவன் அங்கே வந்து சேர்ந்தபோது நண்பகலாகிவிட்டது! பல வருடங்கள் கழிந்த பின்னும் அவன் வாழ்ந்த வீதி முற்றிலும் தனது பழைய அடையாளங்களை இழக்காமல் இருந்தது. அந்த நீண்ட வீதியின் பெருகிய கிளைகளின் ஊடே முருகன் தியேட்டரும், ஜாஸ்மின் அக்கா வீடும், ராஜாஜி வாசக ...
மேலும் கதையை படிக்க...
ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு நிரைகள் தள்ளி அவனுடன் வேலை செய்யும் •பாம்(Pham) தனது றொலியில் (Troly) பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் வியட்நாம் தேசத்தைச் ...
மேலும் கதையை படிக்க...
அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷனின் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்க ஆபிரிக்காவின் சியாரா லியோனுக்கு வந்திருந்தோம். எங்கள் பி.எச்.டி படிப்பில் இது ஒரு முக்கியமான கட்டம். அபூர்வ குரங்கு ஜாதியான கொலபஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக கடந்த ஐந்துவருடங்களாக பி.எச்.டி மாணவர்கள் ஆபிரிக்காவுக்கு ...
மேலும் கதையை படிக்க...
டொங்.. டொங் என பள்ளிக்கூட சாப்பாட்டு இடைவேளையின் மணியோசை காதில் விழ தன் குடிசையின் மூலையில் இருக்கும் அலுமினிய தட்டை தூக்கி கொண்டு ஓட்டமாய் ஓடினாள் முத்துலட்சுமி. அவளது கால்கள் சக்கராமாய் சுழன்றது அவ்வளவு வேகம், வயதுக்கு மீறிய வேகம், எல்லாமே ...
மேலும் கதையை படிக்க...
மசால் தோசை
பெயரின்றி அமையாது உலகு
சுபாவம்
ஞானம்
முத்துலட்சுமியின் கனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)