திமிர் – ஒரு பக்க கதை

 

ஆபிஸர் கோபாலுக்கு, தனது செக்‌ஷனிலேயே கார்த்திக்கை மட்டும் பிடிக்காது. திமிர் பிடித்தவன்…வயசுக்கு மரியாதை தர மாட்டான்’ என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருப்பார்.

புதியதாக வந்த ஜி.எம்.ரவுண்ட்ஸ் போய் எல்லோரையும் அறிமுகம் செய்து கொண்டு, அறைக்குள் வந்து உட்கார்ந்ததுமே அவரிடம் போட்டுக் கொடுக்கும் தன் பணியைத் துவக்கி விட்டார் கோபால்.

‘நீங்க ஃப்ளோர் விசிட் போனப்ப, மற்ற உழியர்கள் எல்லாரும் உங்க பின்னாடியே பவ்யமா வந்து வெல்கம் பண்ணி பேசிட்டிருந்தாங்க., கை கொடுத்தாங்க. ஆனா, இந்த கார்த்திக் மட்டும் சீட்டை விட்டு எழுந்திருக்கவே இல்லை.ஜஸ்ட் வணக்கம் சொன்னதோட முடிச்சிக்கிட்டான்
பார்த்தீங்களா. ஒரு மரியாதைக்காகக் கூட உங்க்கிட்டே நாலு வாரத்தை பேசலை..அவ்ளோ திமிர பிடிச்சவன் சார் அவன்!

”ரொம்ப கரெக்ட்…எனக்குப் பின்னால வந்தவங்க்ள்ல நாலு பேரை இன்டர்காம்ல கூப்பிடுங்க…ஸ்பெஷலா நன்றி சொல்வோம்!” என்றார் ஜி.எம்

கோபால் இனடர்காமில் அழத்த போது, மறுமுனையிலிருந்து பதில் வந்தது
-
”நீங்க கேட்கிற அந்த நாலு பேரும் கேன்டீன்ல இருக்காங்க சார்…கார்த்திக் மட்டும்தான் சீட்ல இருக்கார். அவரை அனுப்பவா?”

ஜி.எம் பலமாகச் சிரிக்கத் தொடங்குவதற்குள் வெளியே நழுவினார் கோபால்

- பம்மல் நாகராஜன் (15-10-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆளவந்தார் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இருக்காதா? அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது. அய்யா,"அம்மனுக்கு நீங்கள் இந்தமுறை செய்த சிறப்பு முற்காலத்தில் அரசர்கள் கூடச் செய்திருக்கமாட்டார்கள்" என்றார் ஒருவர். "பின்னே கண்ணைப்பறிக்கும் ஒட்டியாணம் அம்மனுக்கே புது மெருகல்லவா? வேறு யாருஞ் செய்ய ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் கார் ஐ.ஐ.டி.யின் பரந்து விரிந்த வளாகத்தின் ஏதோ ஒரு தனி மரத்தை முட்டியபடி நின்றுக்கொண்டிருந்தது. மேலிருந்து சருகுகள் வேலையில்லாமல் முன் கண்ணாடியில் விழுந்து சரிந்துகொண்டிருந்தன. உள்ளுக்குள் மெதுவாக நேரத்தை படிப்படியாக எண்ணியபடி தாண்டிக்கொண்டிருந்த நான், சரியாக பத்து நிமிடம் ஆனதும் ...
மேலும் கதையை படிக்க...
“வணக்கம் மேடம் நான் வைதேகி மேடத்த பார்க்கணும்”. “அவங்க வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் சார். நீங்க என்ன விஷயமாக அவங்கள பார்க்கணும்?” என்றாள் சாரதா. கொஞ்சம் தயங்கி சொல்ல ஆரம்பித்தான் பிரபு. “நான் ஏற்கனவே வைதேகி மேடம்கிட்ட போன்ல ...
மேலும் கதையை படிக்க...
கார்த்திகை மாதத்து இரவுகளில் காற்றில் ஈரம் அதிகம் அடர்ந்திருக்க, பேருந்துகளிலோ ரயிலிலோ பயணிக்கும்போது முகத்தில் மோதும் குளிர்ச்சி கொடுக்கும் கிளர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது. ஆனால், நம் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் ஜன்னல் திறந்திருப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள். வண்டி ஓடும்போது, தூரத்து மரங்களும் வீடுகளும் ...
மேலும் கதையை படிக்க...
சாமிக்கெடா
கெடாவ எப்ப வெட்டுவீங்க... மணி இப்பவே ரெண்டாயிடுச்சு... எப்ப கரகம் எடுத்துக், கூழ ஊத்தி, பொங்க வச்சு, கெடா வெட்டி சோறு போடுறது... கோயிலுக்கு வந்த சனமெல்லாம் பொழுதோட ஊர் போய் சேர வேண்டாமா...'' பூசாரியிடம் கோபித்துக் கொண்டார் சம்பந்தி. வருடா வருடம் ...
மேலும் கதையை படிக்க...
மனத்தில் மாசிலா மணியே போற்றி!
செகண்ட் செலக்ஷன்
கருவோடு என்னை தாங்கிய….
சொக்கப்பனை
சாமிக்கெடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)