தலைவர் – ஒரு பக்க கதை

 

தலைவரே… அந்த ஏகாம்பரம் எதிர்கட்சிக்காரன்கிட்ட பணத்தை வாங்கிட்டு நமக்கு எதிரா உள்குத்து வேலை பார்த்திட்டிருக்கான் தலைவரே..அவன கூப்பிட்டு மிரட்டி வச்சாதான் அடங்குவான்.. பக்குவமாய் எடுத்துச் சொன்னார் வட்டச் செயலாளர்.

தலைவர் யோசித்தார். “அவன வந்து என்னைய பார்க்கச் சொல்லு’ என்றார்.

ஏகாம்பரம் தலைவர் முன் பவ்யமாக நின்றான்..

“என்னடா.. ஏகாம்பரம் நான் கூப்பிட்டதுக்கே இவ்வளவு லேட்டா வர்றே..என்ன விஷயம்..’

“தலைவரே காலங்காத்தால மினி பஸ்ல வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு..’

“ஏண்டா இத்தனை காலம் எங்கூட இருந்துட்டு.. இன்னும் பஸ்லயா போற வர்றே…என்ன ஆளுடா நீ… இந்தா.. இந்த வண்டிச் சாவியை நீயே வச்சுக்கோ.. எலெக்ஷன் வேலையைப் பார்த்ததுக்கு என் பரிசு.’ புது இரு சக்கர வாகனத்தை ஏகாம்பரத்திடம் கொடுத்தனுப்பினார் தலைவர்… மகிழ்ச்சிப் பெருக்கில் கையெடுத்துக் கும்பிட்டான்..

வண்டியை பார்த்து பதமாக ஓட்டிச் சென்றான்..

வழியில் காவல் துறையினர் சோதனை…

ஐயா வீட்டு வண்டியை திருடிட்டுப் போனா சும்மாவா விடுவாங்க… கொத்தாகப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர்.

“பின்னிட்டீங்க… தலைவரே..’ சியர்ஸ் சொல்லியபடியே சரக்கை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர் வட்டமும் தலைவரும்.

– கே. தியாகராஜன் (மே 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
அறைக்குள் நுழைந்த பொழுதே அவனை ஐந்தாறு பேர் முறைத்துப் பார்த்தார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான கோணங்களில் படுத்திருக்கிறார்களா? உட்கார்ந்திருக்கிறார்களா? என்று சரியாக கூற முடியாத நிலையில் கிடந்தார்கள். ஆனால் அனைவரும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் நிச்சயம். அவர்களில் ஒரு ஓரமாக ...
மேலும் கதையை படிக்க...
இதெல்லாம் சகஜம்தான்
பத்து மணிக்கு உயிரோடு இருந்த அந்த மூன்று பேரும் பத்து இரண்டுக்கு உயிரோடு இல்லை. அந்த சாரம் பத்தாவது மாடியில் இருந்து சரிந்து விழுந்த போது அதில் வேலை செய்து கொண்டிருந்த அந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்த பில்டர் ...
மேலும் கதையை படிக்க...
பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées பகுதியில் இருக்கும் Beauchamps விடுதியில், எதிர்பாராத விதமாக ஒரு போர்த்துக்கல் நாட்டுக்காரரைச் சந்தித்தான் தேவன். அந்தச் சந்திப்பை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அன்று திங்கட்கிழமை. காலை ஒன்பதரை மணி இருக்கும். வெளிநாட்டு அஞ்சல் தொடர்புக் கட்டணம் பற்றித் தெரிந்து கொள்ள நகரின் தலைமை அஞ்சலகத்திற்குச் சென்றிருந்தேன். பெரிய அறையொன்றில் நடு இருக்கையில் இருந்தார் அலுவலகப் பொறுப்பதிகாரி. அவரைப் பார்க்கும்போது, அந்தக்காலத்து அரசவையில் வீற்றிருக்கும் அரசரைப் போலத் ...
மேலும் கதையை படிக்க...
‘வசதியான வீடு. இன்டர்நெட்ன்னு எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கு. ஆனா தொலை பேசி மட்டும் எதிரி எண் தெரியற அளவுக்கு வசதி கெடையாது. இவ்வளவிற்கும் அது பெரிய காசும் கெடையாது. ஏன் இப்படி ?......‘ - வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள நாஸ்ட்ரடேமஸ்
இதெல்லாம் சகஜம்தான்
வடகாற்று
களித்தார் காட்சி…! – திருக்குறள் விளக்கக் கதை
ஏன்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)