தமிழ் மொழிநண்பர்கள்

 

மருதமலை! கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது, முருகன் முகம் என்னை பார்த்து புன்புறுவல் காட்டுவது போல் எனக்கு தோன்றியது, கண் மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றேன், பக்கத்திலிருந்த என் மனைவி கற்பூர ஆரத்தியை எடுக்க என்னை தட்டியவுடன் நான் கண்விழித்து கற்பூர ஆரத்தியை எடுத்து கண்ணில் ஒற்றினேன். அரசியலையும் விட்டாயிற்று அடுத்து என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய் இறைவா? மனதுக்குள் வேண்டிக்கொண்டு மனைவியுடன் வெளியே வந்தேன். செல்போன் கிண்கிணித்தது, பேசியவள் என் மகள் அப்பா உங்களைத்தேடி உங்கள் நண்பர் “சென்னியப்பன் என்பவர் வந்திருக்கிறார் என்றாள், அவரை வீட்டிலேயே இருக்கச்சொல் இப்பொழுதே கிளம்பி வருகிறோம் என்று மனைவியுடன் கார் இருக்குமிடம் நோக்கிச்சென்றேன்.

பல்கலைக்கழ்கம்! தமிழ் ஆராய்ச்சித்துறை வகுப்பில், பேராசிரியர் ‘இலக்கிய வரலாறு’ பாடத்தை முடித்துவிட்டு, மெல்ல வெளியேறினார்.

அத்துடன் வகுப்பும் முடிவதால், நானும், சென்னியப்பனும் கல்லூ¡¢யிலிருந்து வெளியேறி ஹாஸ்டல் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தோம், சுற்றிலும் மாணவ மாணவிகள் தன் கல கலப்பு பேச்சால் சூழ்நி¢லையை சுறுசுறுப்பாக்கினர், மாலை வேறு ஆகிவிட்டதால், வீடு சேரும் வேகமும் மாணவரிடம் காணப்பட்டது.

நானும் சென்னியப்பனும், தமிழின் மீது பற்றுக்கொண்டு இளங்கலை முதல் இப்பொழுது வரை ஒன்றாக படித்து கொண்டு வருகிறோம்,இருவரும் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் கருத்துகொண்டவர்கள், நான் எதிலும் தீவிரமாக செயல்படுவேன் சென்னியப்பன் நிதானமாக செயல்படக்கூடியவன், ஆனாலும் அவரவர் கருத்துக்களை மதித்து, நல்ல நட்புடன் நடந்து கொண்டோம். அன்றைய கால கட்டத்தில் “தமிழின்” பெயரால் தீவிர அரசியல் புயல் தமிழ் நாட்டில் வீசிக்கொண்டிருந்தது நான் தமிழின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தேன், சென்னியப்பன் கூட தாய்மொழி வேறாக இருந்தாலும் தமிழின் மீது இவ்வளவு ஆர்வமாக் இருக்கிறாயே என்று கிண்டல் செய்வான்.ஆனால் சென்னியப்பன் வித்தியாசம் கொண்டவன், தமிழின் மீது பற்று கொண்டாலும். மற்ற
மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டவன்இப்பொழுது கூட ஹாஸ்டல் போனபின் தனது மலையாள நண்பர்களுடன் மலையாள இலக்கியத்தைப்பற்றி பேச போய்விடுவான்.அதே போல் எந்த மொழிபேசும் நண்பர்களையும் விடமாட்டான், அந்த அந்த மொழிகளின் இலக்கியத்தைப்பற்றி பேச ஆசைப்படுவான். நான் கூட அவனை கிண்டல் செய்வேன் உனக்கு கடைசியில் தமிழே மறந்து விடும் என்று. நாங்கள் எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று பேசிக்கொள்வோம்

ஒரு நாள் என் உறவினர் கொடுத்த ஆலோசனைப்படியும் அவரின் வற்புறுத்தலினாலும், ஒரு முடிவு எடுக்க வேண்டியதாயிற்று, அதை என் நண்பனிடம் சென்று “சென்னியப்பா” நாளை நம் பல்கலை முன்னால் நடக்கப்போகும் போராட்டத்திற்கு என்னை தலைமை ஏற்கச்சொல்லியுள்ளார்கள்.

நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன், என்றேன்.நான் ஏன் போராட்டத்தில் பங்கு ஏற்கிறேன் என்பதையும் ஒவ்வொன்றாக எடுத்துச்சொன்னேன், அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு அமைதியாக ‘சீனிவாசா’ மொழி நமக்கு முக்கியம்தான், ஆனால் போராட்டம் மட்டுமே இத்ற்கு தீர்வு அல்ல, மேலும் இப்போராட்டம்
வேறொரு இலக்கை நோக்கி செல்கிறது, இந்த அரசியலில் உன்னால் தாக்குபிடிக்க் முடியாது, புரிந்துகொள் என்றான், வழக்கம்போல் என் கருத்தில் நான் தீவிரமாக இருந்ததால், போராட்டத்தில் கலந்துகொண்டேன்.

மறுநாள் போராட்டம் வன்முறையாக் மாறிற்று! போலீஸ் தடியடி, கலவரம் கைது போன்றவை அரங்கேறின.போராட்டத்தின் நோக்கம் மாறிற்று, நான், மற்றும் என்னுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட பல மாணவர்கள் பல்கலையியிருந்து நீக்கப்பட்டோம், ஆனால் எங்களை போராட்டம் நடத்த சொன்ன இயக்கம் எங்களை அரவணைத்துக்கொண்டு தகுந்த பதவிகள் வழங்கிற்று, என் வாழ்க்கை மாறிற்று இப்பொழுது நான் நல்ல தமிழ் மேடைப்பேச்சாளராகிவிட்டேன்.

காலங்கள் உருள ஆரம்பித்துவிட்டன. இப்பொழுது எங்கள் இயக்கம் தமிழ் நாட்டை ஆளும் இயக்கமாகிவிட்டது, நானும் அதன் அங்கமாகி இன்று மந்திரி என்ற ஸ்தானத்தை அடைந்துவிட்டேன்.

ஒரு முறை மந்திரி என்ற முறையில் ஒரு தமிழ் இலக்கிய விழாவிற்கு என்னை தலைமை விருந்தாளியாக அழைத்திருந்தார்கள், இப்பொழுதெல்லாம் மேடைத்தமிழை தவிர இலக்கியத்தமிழை மறந்திருந்தேன், இருந்தாலும் மந்திரி அல்லவா! அந்த விழாவை ஆரம்பித்துவைத்துவிட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்பதற்காக மேடையை விட்டு இறங்கி கீழே உட்கார்ந்தேன், அப்பொழுது சென்னியப்பனை மேடையில் அழைத்தார்கள், அவன் என்னை நோக்கி வந்து கைகூப்பி விட்டு மேடையேறினான். அடடா! இவனை மறந்து விட்டேனே, இருந்தாலும் இவன் என்னை கவனித்திருக்கிறான் நிச்சயம் என்னை பார்த்து பொறாமைப்பட்டிருக்கமாட்டான், ஆனால் நான் மனதுக்குள் பார்த்தாயா என் வளர்ச்சி எதுவரை வந்துள்ளது என்று கர்வப்பட்டது.

சென்னியப்பன் தமிழ் இலக்கியத்தோடு மற்ற மொழி இலக்கியத்தை ஒப்பிட்டு பேசினான், நல்ல ரசனையாக் இருந்தது, அதற்குள் எனக்கு தொலைபேசி அழைப்பு தலைமைசெயலகத்திடமிருந்து வந்ததால் நான் கிளம்ப வேண்டியதாயிற்று.

மீண்டும் ஒரு காலச்சுழற்சி, எங்கள் இயக்கம் தன் ஆட்சியை இழந்தது எனக்குட்பட்ட தொகுதியிலேயே எனக்கு போட்டிகள் வந்தன. என்னை விட சிறந்த பேச்சாளர்கள் உருவாகிவிட்டனர். பழைய மேடைத்தமிழ்
பேச்சு மறக்கப்பட்டு புதுமாதிரியான் மக்களை மயக்கும் பேச்சுக்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. என் மேடைத்தமிழ் மக்களுக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த உண்மை நான் உணர்வதற்குள் நான் என் அரசியல் வாழ்க்கையில் அடி மட்டத்திற்கு வந்துவிட்டேன், இப்பொழுது யாரும் என்னை அரசியல் மேடைக்கு கூப்பிடுவதில்லை, நானும் ஒதுங்க ஆரம்பித்துவிட்டேன்.

இதற்கிடையில் ஒரு நாள் பத்தி¡¢க்கையில் செய்தி ஒன்று வந்திருந்தது, சென்னியப்பனுக்கு மலையாள இலக்கிய உலகில் சிறந்த மொழிமாற்ற நாவலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல் பல மாநில இலக்கிய உலகம் இவனை அழைத்து கெளரவித்திருந்ததை செய்திகளாக பத்திரிக்கைகளில் தெரிந்து
கொண்டேன்.எனினும் நான் அவனை தொடர்புகொள்ள முற்சித்தேன் ஆனால் முடியவில்லை, இப்பொழுது ஏதோ ஒரு நாடு அவனை அழைத்திருப்பதாக செய்தி!.

எனக்காக காத்திருந்தான் ‘சென்னியப்பன்’ இருவரும் சந்தித்து பல வருடங்கள் ஆகி விட்டன. அதற்குள் எத்தனை மாற்றங்கள் உருவத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி, இருவரும் கைகோர்த்துக்கொண்டு பழைய கதைகள் பேசினோம், என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் அவனை அறிமுகப்படுத்தி இடையில் ஏற்பட்ட பிரிவுகளை சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டோம்.

இருவரும் சாப்பிட்டவுடன் அவனை மேல் மாடிக்கு கூட்டிச்சென்றேன், சிறிது நேரம் கண்ணயரட்டும் என்று, அவன் மேலே வந்தவுடன் சீனிவாசா எனக்கு ஒரு உதவி செய்வாயா? என்று கேட்டான், நான் வியப்புற்றேன், நான் பதவியில் இருக்கும்போது அவன் நினைத்திருந்தால் எத்தனையோ உதவிகள் கேட்டிருக்க முடியும், அப்போது எல்லாம் கேட்காத உதவி இப்போது என்ன கேட்கிறான்? சொல் சென்னியப்பா செய்கிறேன், நீ மீண்டும் உன் தமிழ் இலக்கியத்திற்குள் வரவேண்டும் என்றான், நான் புரியவில்லை என்றேன், நான் அரசு கல்லூரியில்
தமிழ்த்துறைக்கு தலைவராகிவிட்டதால், என்னால் மலேசிய தமிழ் இலக்கிய சங்கம் சார்பில் கொடுத்த அறுபடை வீடுகளான முருகன் கோயில்களில் ஏற்பட்ட தமிழ் வளர்ச்சி என்னும் ஆராய்ச்சிகட்டுரையை சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது, தயவுசெய்து நீ இந்த பொறுப்பை ஏற்றுக்கொள், இதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்ன சொல்கிறாய்? தவறாக நினைக்காதே நீ இப்பொழுதெல்லாம் தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை என் கேள்விப்பட்டுத்தான் இந்த உதவியை கேட்கிறேன். என்ன சொல்கிறாய்?

செலவுகளைப்பற்றி நான் கவலைப்படவில்லை நல்ல வசதியுடன் உள்ளேன், ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு என் கல்வித்தகுதி ஒத்துவருமா? இந்த ஆராய்ச்சிக்கு கல்வித்தகுதியை அவர்கள் வற்புறுத்தவில்லை என்றாலும் நீ உன் ஆராய்ச்சிக்கான படிப்பை முடித்துவிடு, ஏனெனில் எதிர்காலத்தில் நாம் தமிழுக்கு ஏதேனும் செய்யவேண்டும்.

மருதமலை முருகனின் புன்னகை முகம் உனக்கொரு வேலை வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருப்பதாக புரிந்துகொண்டு கண்களை மூடி அவனை மனதுக்குள் தரிசித்தேன். 

தொடர்புடைய சிறுகதைகள்
"படக்"கென சத்தம் கேட்டு கீழே குனிந்து பார்த்த பாலு, சே என்று அறுந்து போன செருப்பை உதறினான்.இன்னும் ஒரு மாதம் தாக்கு பிடிக்கும் என நினைத்து இருந்த செருப்பு தன் ஆயுளை முடித்திருந்தது, இன்னொரு காலில் இருந்த செருப்பையும் கழட்டி புதரில் ...
மேலும் கதையை படிக்க...
இளவரசி அழைத்தார் என்று வெளியே காத்திருந்த அமைச்சர், சிறிது சலிப்புடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். இளவரசி வீட்டு வாயில்காப்போன் அமைச்சரின் சலிப்பான நடையை கண்டு ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தான். இந்த நாட்டுக்காக என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது, ...
மேலும் கதையை படிக்க...
அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க வரலை, அப்படி இருந்துச்சு அவர் முகம். யாரு போய் பேசறதுன்னு, பம்மிகிட்டு அந்தா இந்தான்னு மிரளுறானுங்க. என்னாச்சு இந்த அண்ணாச்சிக்கு? விசயம் ...
மேலும் கதையை படிக்க...
காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில் இருந்த பொழுது, முதன் முதலில் வாங்கிய கார், இந்த கார் இவனுடனே பதினைந்து வருடங்களாக இருந்தது. இருந்தது என்பதை விட ...
மேலும் கதையை படிக்க...
அப்பா இந்த படத்தை பாரேன்? அகிலா கொஞ்சம் பேசாம போறியா, எனக்கு இங்க தலைக்கு மேல வேலையிருக்கு. மகள் முகம் சுருங்கி போப்பா நீ எப்பவுமே இப்படித்தான் ! சொல்லிக்கொண்டே நின்று கொண்டிருந்தாள் ஏங்க கொஞ்சம் அந்த குழந்தைகிட்ட பேசுனாத்தான் என்ன? பாருங்க ...
மேலும் கதையை படிக்க...
இவனும் ஒரு போராளி
மந்திரியின் தந்திரம்
தனக்கு மட்டும்
“பீனிக்ஸ்” பறவை
நன்றாய் இருக்கும்போது உறவுகள் தெரிவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)