டூப் டூப் – ஒரு பக்க கதை

 

ரைஸிங் ஸ்டார் பிரேம்குமாரிடம் டைரக்டர் அமர் கேட்டான் ”பிரேம் சார், இந்த பைக் ஹம்ப் நீங்களே பண்றீங்காளா?”

இல்லை, அமர், டூப்பை வச்சு பண்ணிடுங்க, என்றவாறே கேரவனுக்குள் சென்றான் பிரேம்குமார்.

டைரக்டர், தன் உதவியாளரிடம் கூறினான், ‘இவன் ஒரு காலத்தில் ஃபைட்டரா கூலிக்கு மாரடிச்சவன்தான், இப்ப ஒரு சின்ன பைக் ஜம்புக்கு இவனுக்கு டூப் போட வேண்டியிருக்கு’ என்று அலுத்துக் கொண்டான் அமர்.

கேரவனிலிருந்து வந்து டச்சப் செய்து கொண்டிருந்த பிரேம்குராரிடம் அஸிஸ்டென்ட் டைரக்டர் கணேஷ் கேட்டான்.

”சார் ஒரு சின்ன பைக் ஜம்புக்கு டூப் போடச் சொன்னதுக்கு டைரக்டர் உங்க மேல ஆதங்கப்பட்டார். நீங்க நல்லா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற கேரக்டர். நீங்க டூப் போடச் சொன்னதுக்கு ஏதாவது காரணம் இருக்குமே?

கணேஷ், ஒரு காலத்திலே நானும் ஃபைட்டரா டூப் போட்டவன்தான். ஒரு தடவை பைக் ஹம்ப் பண்ணினா எனக்கு ஐயாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்ப அதை நான் பண்ணினா ஒரு டூப் போடற ஸ்டண்ட் நடிகரோட வயிற்றிலே அடிச்ச மாதிரி ஆயிடும்..! அதனால்தான் நான் முடியாதுன்னேன்! நான் செஞ்சது சரிதானே?

நூறுசதவீதம் சரி சார்! என்று சந்தோஷப்பட்டான் கணேஷ்

- வி.சகிதாமுருகன் (நவம்பர் 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
கோவையிலிருந்து இரவு 8 மணிக்கு வரும் ``ஆதி டீலக்ஸ் பஸ்சில் நம்ம ஆபீசுக்கு புது ஹெட்கிளார்க் பஞ்சநாதம் வர்றார்.அவரை ரிஸீவ் பண்ணி நம்ம ஆபீஸ் கெஸ்ட் ஹவுஸில் சேர்க்க வேண்டியது உம்ம பொறுப்புய்யா!'' என்று எஸ்டாப்ளிஷ்மெண்ட் செக்ஷன் ரங்காச்சாரி, ஸ்டோர்ஸ் தங்கப்பனிடம் முந்தின ...
மேலும் கதையை படிக்க...
ஒரு மந்தமான மதிய வேளை. உண்ட களைப்பில் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அது என்னவோ தெரியவில்லை எல்லோரும் விழித்திருக்கும் நேரங்களில் உறங்குவதற்கும் உறங்கும் நேரங்களில் விழித்திருந்து வித்தியாசப்படுவதற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஒரு வழியாக முழுவாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
“ஒரு விவசாயி கோடீஸ்வரனாக முடியலையே ஏன் சார்?” இப்படியொரு சந்தேகத்தை கேட்டவுடன் மொத்தத் தலையும் முனியாண்டியை வையாத குறையாகத் திரும்பிப் பார்த்தது. பின்னே எத்தனை முறைதான் இதே கேள்வியை கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பக் கேட்பது. புயலுக்கு விலகிக்கொடுத்து நிமிர்ந்து நிற்கும் கோரைப் புல் ...
மேலும் கதையை படிக்க...
இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது. "நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று எப்போது நம்மால் உணரமுடியவில்லையோ, அப்போது நாம் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டும்' என்று ஒருவாறு விளக்கம் சொல்லிக்கொண்டான். ...
மேலும் கதையை படிக்க...
சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி. கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை. ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு 'பாலிக மஹா வித்தியாலய' ...
மேலும் கதையை படிக்க...
சிக்கன் 88
எல்லைக்கு அப்பால்
விவசாயி கோடீசுவரனாக முடியுமா?
ஜஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம்
கபரக்கொய்யாக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)