டிரைவர் – ஒரு பக்க கதை

 

இதய ஆபரேஷனுக்கு பிறகு செல்ப் டிரைவிங்கை குறைக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கிறதால, பர்சனல் டிரைவர் வேணும்னு கேட்டீங்க.

எட்டு வருட க்ஸ்பீரியன்ஸோட சாரதி, பாரதின்னு இரண்டு பேர் வந்திருக்காங்க. நான் டெஸ்ட் செய்து பார்த்ததில், இவருடைய டிரைவிங்கிலும் எந்த குறையும் இல்லை.

இருவரும் உங்களை பார்க்க காத்துக்கிட்டு இருக்காங்க. என்று எம்.டி.விசுவிடம், அவருடைய பி.ஏ.தெரிவித்தார்.

இருவரையும், தனித்தனியே அழைத்து பேசிய விசு, ஒரு மாத்திரை பெயரை எழுதி, பணத்தையும் கொடுத்து அதை உடனே
வாங்கி வரச்சொன்னார்.

பக்கத்து பார்மஸியில் விசாரித்தேன். மாத்திரை ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க… ஐந்து நிமிடத்தில் திரும்பிய
சாரதி பணத்தை திருப்பிக்கொடுத்தார்.

சற்று தூரத்தில் இருக்கிற பார்மஸியிலிருந்து வாங்கி வந்தேன் சார்… அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு… என்று மருந்தை
நீட்டினார் பாரதி.

ஒருவர் ஓட்டும் காரில் நாம் உட்கார்ந்திருக்கும்போது நம் உயிரை அவர் கையில் ஒப்படைத்து விடுகிறோம்.

பிரயாணத்தின்போது. அவசர உதவிக்கு அவரைத்தான் சார்ந்திருக்க வேண்டும். அதனால் மருந்தை தேடிக்கண்டு பிடித்து வாங்கி வந்த பாரதிக்கு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்து ஐயாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுங்கள். என்ற எம்.டி.யை ஆச்சரியத்தோடு பார்த்தார் பி.ஏ.

- மார்ச் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
”உங்க மருமகள் சொல்றதுக்கு நேர்மாறாகத்தான் எதையும் செய்வேன்னு போன தடவை வந்திருந்த போது சொன்னீங்க. இப்ப அவள் இன்னும் கொஞ்ச நாள் தங்கிட்டு போங்கங்கறா, நீங்களும் கிளம்பறா மாதிரி தெரியலையே…?” பக்கத்து வீட்டு பாகியம் தன் பங்குக்கு ,தனியாக பங்கஜத்திடம் தனியாக வம்பு ...
மேலும் கதையை படிக்க...
”பிள்ளை வீட்டுக்காரங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. நானும் உடனடியா அங்கே போறேன். வந்தவங்களக்கு காப்பி கொண்டு வா” என்று பெண்ணிடம் சொல்லிய அம்மா பர்வதம் வேகமாக வாயிற்பக்கம் இருந்த படியேறினாள். ”மாப்பிள்ளை அளவுக்கு என் பொண்ணு படிக்கலை. ஆனா சமயோசிதமா நடந்துக்குவா” என்று ...
மேலும் கதையை படிக்க...
சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம் இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட் வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு. வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க. அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு ...
மேலும் கதையை படிக்க...
‘’உன்னை பெண் பார்க்க வரப் போறவருக்கு நல்ல படிப்பு, கை நிறைய சம்பளம் இருக்கு. உனக்கு மேட்ச் ஆகற மாதிரியே ஸ்மார்ட்டா இருக்காரு. எந்த குழப்பமும் செய்யாம, இவரையாவது ‘சரி’ ன்னு சொல்லுடி’’ என்றாள் மூச்சு விடாம அம்மா. ம்ம்ம்…வீட்டு வாசலில், பெரிய ...
மேலும் கதையை படிக்க...
“என்னப்பா அரைகுறையா பெயிண்ட் அடிச்சிருக்கே…? உன்னோட சூப்ரவைசர்கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணி கூலியை குறைக்கச் செல்றேன்…’ என்று பெயிண்டர் ஆறுமுகத்திடம் கோபமாக கத்தினேன். உள்ளே வந்து அந்தச் சுவற்றை எட்டிப் பார்த்து, “ஓ அதுவா… அங்க நான் வேணும்னுதான் பெயிண்ட் செய்யலை. அதுக்கு காரணத்தைத் ...
மேலும் கதையை படிக்க...
சூட்சுமம் – ஒரு பக்க கதை
தகுதி – ஒரு பக்க கதை
தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
கோலம் – ஒரு பக்க கதை
பெயிண்ட் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)