ஜீவத்தோழமை

 

விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான்.

காலைப்பனி காற்úாடு வந்து சீறுகிது. தடதட, கடகடாவெனப் பேயிரைச்சல் போடுகி தகரக் கூச்சல்.

பஸ் வேகம் ஜாஸ்திதான். டிரைவர் சீசன் துண்டை காது மûக்க தலையில் கட்டியிருந்தார். கண்டக்டர் கூதல் இல்லாத இடம் தேடி உட்கார, பஸ் அவரைத் தூக்கித் தூக்கிப் போடுகிது. ஊசிகளாகக் குத்துகி கூதல்காற்று.

வடிவுக்கு கூதல் தாங்கவில்லை. கிடுகிடுத்தாள். பாவாடைக்குள் கால்களையும் நெருக்கினாள். ரெண்டு கைகளையும் நெஞ்சில் குறுக்காக வைத்து, மடக்கி உயர்த்தி, கன்னச் சதைகளையும் காது மடல்களையும், உள்ளங்கையால் அழுத்தி மûத்தாள்.

அதையும் மீறி உள் பாய்ந்து சிலிர்க்க வைக்கி கூதல், “”உஸ்ஸ்ஸø.. அஸ்ஸ்ஸø” வென்று ஊதிக்கொண்டு, கடைவாய்ப் பற்களை அழுந்தக் கடித்து நடுக்கத்தைச் சமாளித்துப் பார்த்தாள்.

டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் அய்யா உட்கார்ந்திருந்தார். என்ஜின் வெக்கையும் ஆவியும் ஒரு சின்னக் கதகதப்பு.

“”வடிவு… இங்க வா… பாப்பா”

“”எ…எ…என்னத்துக்கு?”

“”கூதல் கொûயாயிருக்கு?”

“”இருக்…க்… கட்டும்”

வடிவுக்கு ஜன்னலோரம், பார்த்து வருவது பிடிக்கிது. கூதல்கூட நல்ல அனுபவம். ஓடும் பஸ்ஸில் பாயும் காற்றில் கூடும் கூதல். பொழுது புப்படாத கீழ்வானச் சிவப்பு.

மேல்வான மேகங்களிலும் ஒரு கனிவான சிவப்பு. வட்டமடித்து ஓடுகி பசுங்கடலாக வேலி மரங்களின் தலைகள். கல்லைக் கண்ட பயத்தில் ஓடுகி நாயைப்போல் விருட் விருட்டென்று பாய்கி மின் கம்பங்கள்.

வலையப்பட்டியைத் தாண்டி, மேலாண் மûநாட்டை நோக்கி ஓடுகி பஸ். வேலி மரங்களுக்குள் சாவகாசமாக இû பொறுக்குகி நியை மயில்கள். தரைப் பனியை துடைத்துக்கொண்டு இழுபடுகி மயில் தோகைகள். அழகழகான தோகைக் கற்கைள்.

அழகேயில்லாத பெண் மயில்கள். அதன் குட்டை வால்கள். பின்னோடுகி தவிட்டு நி மயில் குஞ்சுகள். ஒரு போல் மரத்தின் உச்சியில் ஓர் ஆண் மயில். பனி காய வெயிலுக்காகக் காத்துக்கொண்டே, சிக்கெடுத்துக் கொண்டிருக்கி ஆண் மயில்.

பஸ்ஸøக்குள் மேலும் ரெண்டு பேர். புருஷன், பெஞ்சாதி, மூன்று பிள்ளைகள். டவுன்காரப் பிள்ளைகள். நல்ல துணியும் மணியுமாய், புதுப்பேஷனுமாய் ஸ்டைல் பண்ணுகிதுகள். அதுகளுக்கு கூதல் தெரியவில்லை. குதூகலமும், கும்மாளமுமாய் கூச்சல் போடுகிதுகள். ஒவ்வொன்றும் அதுகளுக்குப் புதுசு. வியப்பூட்டுகி புது உலகம். வியந்து வியந்து மாய்கிதுகள்.

“”இங்க பாரு… பட்டர்ஃபிளை. யல்லோ”

“”அய்க்… இந்தா, அங்க பாரு. வேலி உச்சியிலே கருப்பா ஒரு பட்டர் ஃபிளே. ரெட் மார்க்ஸ், ஏய்..ஏய்…ஏய்க்… இங்க பாரு யல்லோ மார்க்úஸாட தேன்கலர் பட்டர்ஃபிளே.”

கிராமமே கண்டறியாததுகள் போலிருக்கிது. அதிசய அதிசயமாகக் கூச்சல். தம்பலப் பூச்சியை தம்பலப் பூச்சின்னுகூட சொல்லத் தெரியவில்லை. இங்கிலீஷ்லேயே சொல்லுதுகள். தமிழ்ப் பூச்சிக்கு இங்கிலீஷ் கூப்பாடா? நல்ல கூத்து! இங்கிலீஸ்காரன் பேரக் கழுதைகளோ..

வடிவு அவர்களையே உர்ர்ரென்று பார்த்தாள். உள் மனசுக்குள் பொாமையின் நமைச்சல். அலட்சியமும், ஏளனமுமாய் உதட்டைச் சுழித்தாள்.

“”ஏய்… ப்ரியாக்குட்டி, அங்க பாரு… பீக்காக்”

என்று பிள்ளைகளுக்குக் காட்டிய அந்த “சூட்’காரர், வேலிக்காட்டுக்குள் திரியும் மயில்களைச் சுட்டுகி அவரது விரல்.

அம்புட்டுத்தான். பிள்ளைகள் இரண்டும் கைதட்டி குதூகலித்தன. “”அய்ய்க்… பீக்காக்.. அய்க்க் பீக்காக்.. பீக்காக்குட்டிகள்” என்று ஒரே உற்சாகக் கூப்பாடு. ஆதாளி தாளாமல் கூத்தாடின. கண்ணிலும், கன்னச் சதையிலும் மன மின்னல்கள். சின்னச் சூரியனின் சிதலாக இனிய வெயில் துளிகள்.

“”ஏய்க்.. கவிதா, அங்க பாரு பிக் பீக்காக். எவ்ளோ… பெரிய தோகை பாரு.”

“”கொண்டையைப் பாரு… நாதஸ்வரம் பீப்பீ மாதிரி..”

“”ஏய் ப்ரியா, அந்தா… பொதருக்குள்ளே நெயை மயில்க. மயில் குட்டிக் கூட பின்னாலேயே ஓடுது பாரு.”

“”மயில் குட்டி இல்லே பாப்பா.. மயில்குஞ்சு”

“”டாடி, குட்டியும், குஞ்சும் ஒண்ணுதானே?”

இல்லே பாப்பா. முட்டையிலேயிருந்து வர்து குஞ்சு. நேரா வர்து குட்டி.

ஏய்க்.. ப்ரியா, அங்கபாரு… தோகைவிரிச்சு ஆடு பீக்காக்.

காணாததைக் கண்ட சந்தோஷத் ததும்பலில் கூவல் காடு போடுகி பிள்ளைகள். மயில், அதுகளுக்கு அதிசயம். புத்தகங்களிலும், டி.வி.யிலும் மட்டுமே பார்க்கமுடிந்த கனவு, அழகின் கனவு, நேரில் காணக்கிடைத்த பேரதிருஷ்டம். பரவசத் ததும்பலில் உயிர் பெற்று தோகை விரிக்கி மனக் கனவுகள்.

“”நம்ம ஊர் போன ஒடனே…யோகேஷ், சதீஷ் கிட்டேயெல்லாம் சொல்லணும். மயில் பாத்ததைச் சொல்லணும்.”

பெருமைப்பூக்கள், பூரிப்பின் பரவசம், முகமெல்லாம் பூவின் பிரகாசம்.

“”வாயைப் பொளப்பாக…” அதுக்கும் பெருமை தாங்க முடியவில்லை. அந்த டவுன்காரப் பிள்ளைகள் மயிலைப் பார்த்த பொது உலகமாக ஆனந்தக் கூப்பாடுப் போட… அதைத் தகிப்புடன் பார்க்கும் தனி உலகமாக வடிவு.

போன வருஷம் ஆடிப்பட்டத்து மழையைக் காணாமல் அல்லாடிக் கிடந்தது ஊர். ஆடிமாதக் காற்று, கூச்சமற் குடிகாரனைப் போல தாறுமாாகச் சலம்பியது. தெருவெல்லாம் வாரியிûக்கி புழுதி. மேல் துண்டோடு திரிகி கிராமத்தாட்களிடம் துண்டை உருவி, மாமன், மச்சான் முû கொண்டாடியது. கேலி பண்ணி கூத்துகட்டியது.

“”மழைகிழையைக் காணலியே.. பாழ், பாழ்னு காத்தடிக்குது. கூடு மேகத்தையெல்லாம் தூசிக் காடாக்கி துடைச்சிருது காத்து.”

“”காத்து வாய் பொத்துனாத்தானே, மழை கண்ணு தொக்கும்?”

“”மழை தண்ணியில்லாம… கடலை எப்படி வெதைக்க?”

“”கடலையைக் காயப்போட்டு, ஒடைச்சு, வெதைப் பண்டமாக்கி û#க்க வேண்டியதுதான். ஏதாச்சும் ஒரு நொன்டிமேகம் தப்பித் தவறிவந்து ஒழுகிட்டுப் போகாதா? அந்த ஈரப் பதத்துலே வெதைச்சிர வேண்டியதுதான்.”

“”ஆமாமா… ஆடியிலே வெதைப் பட்டம் கெடைச்சாத்தானே.. தைமாசம் தலைமகளுக்கு பச்சைக் கடலை குத்துவுடலாம்?”

ஊர் ஜனத்தின் பேச்சு, ஏக்கமும் கேலியுமாக தெருக்களின் பெருமூச்சாக உலவுகிது.

வடிவின் அய்யா பரமசிவம், மேலக் களத்தை விளக்குமாால் கூட்டிப் பெருக்கினார். ரெண்டு குடம் தண்ணீர் சுமந்து பரவலாகத் தெளித்தார். நீலம் கருக்கும் நீர்ப்பரவல். தூசி, புழுதி, ஈரத்துக்குப் பயந்து மடங்கியது.

உலர்ந்தபிகு..

விதைக் கடலை முக்கால்சாக்கு இருந்தது. முதுகில் தூக்கிப்போட்டு, குனிந்த நிலையில் சுமந்துவந்து, களத்தில் தட்டிப் பரத்தினார்.

வெள்ளிச் சலங்கைகளாக வேர்க்கடலைகள். போன வருஷத்துக் கடலை. பரத்தப்பட்ட கடலையில் பாதம் கிழித்து, உழவு போட்டார்.

“”வடிவு, இங்க வா…”

“”என்னய்யா?”

“”கடலையைக் கொத்துதுக்கு காக்கா வரும். வுடக்கூடாது. ஒத்தைக் கடலையைக்கூட கொத்த வுடக்கூடாது.”

“”ம்… ஆட்டும்ய்யா…”

“”வடிவு, ஒத்தைக் கடலை கொத்துக் கடலையா வெளையும். வெதை முதல் எதைக் குடுத்தாலும்… சம்சாரி வெதை முதலைப் பறிகுடுத்துரக் கூடாது..ம்? என்ன?”

“”சரியய்யா..”

அரைமனசாக தலையாட்டிய வடிவு, முகம் சுண்டியது. குாவியது. பயமும், தயக்கமுமாய் ஏறிட்ட இமைகள் படபடத்தன.

மகளைப் பரிவோடு பார்த்த பரமசிவம்.

“”என்னம்மா, வெளையாடப் போவணுமா?”

“”இல்லேய்யா..”

“”ம்… பெகு?..”

“”படிக்கணும். டெஸ்ட்டுக்கு. மந்த்லி டெஸ்ட்”

வார்த்தைகளை துண்டாடுகி மகளின் பயம். தகப்ப மனசு மருகியது. திகைத்தார். யோசனைக் குழப்பம். உழவுக் கோடுகளோடு பரந்துகிடக்கி வெள்ளை வேர்க்கடலையை வெறித்தார். அதன் வெள்ளைத் தோலில் வெயிலின் பளீரிடல்.

“”சரி… சித்தே இரு. காக்கா, கீöக்கா வராமப் பாத்துக்க. இந்தா வந்துருதேன்.”

அய்யா நடையில் ஒரு தீவிரம். ஒரு முடிவோடு நகர்கி தெளிவின் வேகம்.

களத்திலேயே ஒரு மஞ்சணத்தி மரம். வட்டமாக நறுக்கின மாதிரி குறுகலான நிழல். சுற்றிலும் வெயிலின் தகிப்பு. வெக்கை சுடுகி அந்த நிழலில் உட்கார்ந்த வடிவுக்குள், படிக்கவேண்டிய எட்டாப்பு அறிவியல் பாடம். ஆயாசப் பெருமூச்சு.

காய்ந்து கொண்டிருந்த நிலக்கடலையைக் கொத்த காகங்கள் வந்தன. “”கா….ர்ர்ர்ர்ó கா….ர்ர்ர்ர்” ரென்று கள்ளத் தட்டோடு கரைந்தன. கபடமான கரைச்சலோடு மெல்ல மெல்ல வருகி காகங்கள். கழுத்தைச் சாய்த்துப் பார்க்கின்ன.

துரத்தில் உட்கார்ந்து, தவ்வித் தவ்வி பக்கத்தில் உட்கார்ந்து, தந்திரம் செய்கி காகங்கள், உயிருள்ள இருள்துண்டுகள். ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி… குறுக்கும் நெடுக்குமாகப் பக்கி கரிய படங்கள். வடிவு அசருகிாளா என்று நோட்டம் பார்க்கி கள்ளப் பார்வையோடு வட்டக் கண்கள். மிளகுக் கண்கள்.

அடச் சனியங்களா… வடி கல்லைப் பொறுக்கிக் கொண்டு ஓடினாள். ஓடி.. ஓடி கல்லை எறிந்தாள். விர்…விர்ரென்று இரைச்சலிடுகி கற்கள். சிகு முளைத்த கோபக் கற்கள்.

ùக்கை விரித்த இருட்பந்துகளாக ஓடிப் பாய்ச்சல் காட்டுகி காகங்கள். பயந்ததுபோல பாவனை காட்டி, அங்கும் இங்குமாக பந்து உட்கார்ந்து, வடிவை அலைக்கழிக்கி காகங்களின் கண்ணாமூச்சி.

ஓடிக்களைத்த கோபத்தில் வடிவு.

“”நாய்களா”

“”பேய்களா”

“”முண்டங்களா”

“”மூதிகளா”

“”மூதேவிகளா..”

திட்டித் தீர்க்கிாள். வாய்க்கு வந்த வசவுக் கங்குகளை வீசியெறிகிாள்.

பரமசிவம் ரெண்டு அகத்திக் குச்சியும், கறுப்புத்துணியுமாக வந்தார். கரித்துணி, கன்னங்கரேரென்கி கரித்துணி.

காயப் போட்டிருக்கி கடலைக்கு கிழக்கிலும், மேற்கிலும் அகத்திக் குச்சிகளை ஒருச்சாய்வாக ஊன்றினார். எண்ணெய் மிணுக்கிய கசங்கலான கரித்துணியை கிழித்து, குச்சியின் நுனிகளில் கட்டித் தொங்கவிட்டார் கொடி மாதிரி.

தாறுமாான கிழிசலோடு தொங்கிய கரித்துணிகளைப் பார்த்தால், செத்த காக்கா தொங்குவதைப் போலிருந்தது. புரியாமையுடன் அய்யாவையே கவனித்த வடிவு.

காகம் தந்திரத்தை மிஞ்சுகி மனிதத் தந்திரமா?

அய்யா ஒரு காரியம் முடித்த திருப்தியோடு மகளைப் பார்த்தார். “”நீ போய்ப் படி… வடிவு”

“”கடலைக்காவல்?”

“”இனிமே காக்கா கிட்டத்துலே வராதும்மா”

“”ஏம்ய்யா?”

“”தொங்கு கரித்துணிகளை காக்கான்னு நெனைக்கும். செத்த காக்கான்னு நெனைச்சுப் பயந்தோடிரும்”

நிஜந்தான். சுற்றிலும் திரிந்த காகங்கள் “கா…….ர்ர்ர்ர், கா……………..ர்ர்ர்ர்ர்’ரென்று கரைந்தன. பதறிப் புலம்புகி அவலக்கதல். பீதியும் கிலியும் அப்பிய குரல்கள். காகங்களின் குரல்கள் கரைந்து கொண்டேப் போய்……… மûந்தே விட்டது.

ரெண்டு மாசத்துக்கு முன்பு.

கழுதைச் சுமையாகக் கனத்த பைக்கட்டு. ஒன்பதாப்பு புத்தகங்கள். நோட்டுகள். முதுகில் போட்டு இழுத்துக் கொண்டு வந்தாள், வடிவு.

சாயங்கால வெயில் சுள்ளென்று அûந்தது. பொடிப்பொடி வியர்வை மணிகள் முகத்தில். தூசி படிந்த அயற்சி. படித்துக் களைத்த வாட்டம். அறுபட்ட கீரைத்தண்டின் தளர்வு.

அம்மா வீட்டில் இருக்கிாளோ… புஞ்சைக்குப் போயிருக்காளோ? அய்யா தெருக்காட்டில் இருக்கலாம்.

வீட்டை நெருங்கினாள். வீட்டு முன்பு ஒரு சிறிய ஓலைச் சாய்ப்பு. அதன் வெறுமை இவளுக்குள் பகீரென்து.

“கட்டிக்கிடந்த வெள்ளாடு எங்கே? குட்டிகளை எங்கே?’ நடையை எட்டிப்போட்டாள். ஓட்டமாய் ஓடிவந்து, ஓலைச் சாய்ப்பில் நின்ாள். ஆடுகட்டிக்கிடந்த நூல்கயிறு அறுபட்டுக் கிடந்தது. அறுபட்ட இடத்தில் இழைபிரிந்து கிடந்தது.

சாணமும் மூத்திரமுமாய் நனைந்து சகதியாகக் கிடந்த இடத்தில் ஆட்டின் குளம்புத் தடங்கள். குட்டிகளின் குளம்புச் சுவடுகள். ஆட்டு ரோமங்கள்.

ஆடு எங்கே?

வீட்டுக்கதவு இலேசாகத் திந்திருந்தது. பைக்கட்டை திண்ணையில் போட்டுவிட்டு, பதைப்புடன் உள்ளே ஓடினாள்.

அவள் பதற்மும் பதைப்பும் சரியாக இருந்தது.

கழுத்தில் தொங்குகி அறுந்த கயிற்úாடு வெள்ளாடு அடுப்பங்கரையில் சோற்றுச் சட்டியில் வாய் வைத்துக் கொண்டிருந்தது. பதற்மும் அவசரமுமாய் நெல்லுச்சோற்û அள்ளி விழுங்குகி வேகம். பருக்கைகள் சிதறிக் கிடக்கிவிதம். குட்டிகள் துள்ளித் துள்ளிக் குதிக்கின்ன. தண்ணீர்ச்சாலில் … பாத்திரம் வைக்கி திண்டில்… தாவித் தாவிக் குதிக்கி அதுகளின் விளையாட்டு.

வாங்கி வைத்த பால் சிந்தி, குழம்புச் சட்டி கவிழ்ந்து, சாப்பிடுகி தட்டில்கள், கிளாஸ்கள் எல்லாம் தாறுமாாகச் சிதடிக்கப்பட்டு… அடுப்பங்கரையே துவம்சமாகி… பண்டபாத்திரமெல்லாம் நெளிந்து… நாசக்காடாகி…

வடிவுக்குள் பற்றிய தீ, உடம்பெல்லால் திகு திகுவென்று எரிந்தது. வேசடையும், வெüமுமாய் வைதாள்.

“”சோத்துல மண்ணள்ளிப் போட்டுட்டீயே… ஆட்டுச் சனியனே…”

தொங்குகி கழுத்துக் கயிற்ûப் பற்றி ஆத்திரமாய் இழுத்தாள். ஆடு வர மறுக்கிது. கள்ள முழி முழிக்கிது. ரெண்டு முன்னங் கால்களையும் அகல விரித்து, விûத்து நின்று வர மறுத்து மல்லுக் கட்டியது.

முக்கி முக்கி இழுத்துப் பார்க்கி வடிவு. கோபமிகுதியில் அழுகி அவள். மூச்சிûக்க இழுத்தாலும் வர மறுக்கி வெள்ளாடு. லபக், லபக்கென்று சோற்û லாவுவதிலேயே அதன் குறி, அதன் வேகம்.

சின்னவள் வடிவு. முடியவில்லை. இயலாமையின் திணல், ஆத்திரமூர்க்கம். ஏதாச்சும் செய்து வெள்ளாட்டை வெளி யேற்றியாகனுமே என்கி உக்கிரம்.

விருட்டென்று வெளியே வந்தாள். ஒரு கட்டைக் குச்சி எடுத்தாள். வெள்ளாட்டின் நடு முதுகில் ஓங்கி ஒரு போடு. உசரங்களில் தாவிக்கொண்டிருந்த குட்டிகளுக்கு ஒருபோடு.

“”ம்ம்மே… க்க்” அதன் வலி. கதறல்.

வெள்ளாட்டுக்கு மேலும் நாலுபோடு. குறுக்கெலும்பு ஒடிஞ்சுபோகுமோ? போகட்டும், சனியன்.

மாறி மாறி அடித்தாள்.

குட்டிகள் வெளியே வர.. வெள்ளாடும் வெளியே ஓடியது. அதன் வயிற்றுப் புடைப்பு. வாயோரங்களில் பருக்கைகள். அதன் கொம்புகளில் குப்புக் கவிழ்ந்து கிடந்தது.

- ஆகஸ்ட் 2001 

தொடர்புடைய சிறுகதைகள்
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் அந்த நேரத்தில் தான் பரிமளம் பாட்டி விழித்துக்கெண்டாள். பக்கத்தில் ராஜி படுத்திருந்தான். வீடு பூராவும் ஈரமாகி சுவரெல்லாம் - தரையெல்லாம் குளிர்ந்து கிடந்ததால், கிழிந்த சாக்குகள் ...
மேலும் கதையை படிக்க...
ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டும் உரசித் தள்ளிக் கொண்டும், மந்தையாக வருகிற செம்மறி ஆடுகளை, பட்டிக்குள் பத்தியனுப்பினான் செல்லாண்டி. கைக் கம்பால் அதன் முதுகுகளில் செல்லத்தட்டுகள் தட்டுகிறான். பட்டிக்குள் நெட்டித்தள்ளி மூங்கில் தப்பைக் கதவைச் சாத்தி, கொண்டியை மாட்டுகிறான். குப்புறக் கவிழ்ந்துகிடந்த கூடையைத் தூக்கித் ...
மேலும் கதையை படிக்க...
இடுப்பில் நீர் நிறைந்த குடம் இருந்தது. இருளாயி மனசெல்லாம் கிடந்து கொதிக் கிறது. தாங்க முடியாத கோபக் கனல் தெறிக்கிறது. முகத்தில் மனக் கொதிப்பின் தளதளப்பாகத் தெறித்துச் சிதறுகிற அனல் வார்த்தைகள். ''ஓ வாய்லே புத்து பெறப்பட... நாசமாய்ப் போக... ஒருநாள் பேதியிலே ...
மேலும் கதையை படிக்க...
அருஞ்சுனைக்குள் ஒரு சூன்ய உணர்வு. யாரையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிற ஏக்க வேதனை. ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிறார், தெருக்கோடியின் கிழக்கு நுனியை. ராவுத்தர் வருவதாக இருந்தால், இந்தப் பாதையில்தான் வருவார். கிழக்கு முக்கு திரும்புகிறபோதே அவரது சைக்கிள் அடையாளம் தெரிந்துவிடும். கோடிக்கணக்கான சைக்கிள் மணிகளிலும் ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கிற பரமுவின் முகத்தில் அறைகிற காற்று, காதோர முடிக் கற்றைகளை இழுத்து அலைக்கழிக்கிறது. இடைவிடாத காற்றின் தாக்குதலால் முகமே காய்ந்து ...
மேலும் கதையை படிக்க...
ஆடு குட்டிகளுக்கு மார்கழிப் பனியும், வைகாசி வெயிலும் ஒன்று. ஆடு குட்டிகள் வாலைப்பிடித்துக் கொண்டு பின்னால் திரிபவர்களுக்கும் அப்படித்தான். வைகாசி மாச அக்னி நட்சத்திர வெயில், தீயை அள்ளிக் கொட்டுகிறது. காற்றில்லாத வெயிலின் உக்கிரத்தில் முதுகுத் தோல் காந்துகிறது. இப்பவும்... எப்பவும் போலவே நீல ...
மேலும் கதையை படிக்க...
"ராசாத்தி மகள் மூலையில் உட்கார்ந்து விட்டாள்." முந்தா நாளிலிருந்து ஊரில் இதே பேச்சுதான். ஊர்ப் பெண்கள் மூக்கில் விரலை வைத்தனர். வாயைப் பிளந்தனர். ஆச்சரியத்தில் மாய்ந்து போனார்கள். "நிஜந்தானா" "நிஜந்தானா" என்று ஒவ்வொரு பெண்ணும் திணறித் தவித்தார்கள். பூங்கோதைக்கும் ஆச்சரியம்தான். அத்துடன் கொஞ்சம் அதிர்ச்சியும்கூட. மனசுக்குள் ...
மேலும் கதையை படிக்க...
அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப் பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல். முருகையா முழுத்த இளவட்டம். முறுக்கேறிய உடம்பு. கருவேலமரத் தூர்மாதிரி வைரம் பாய்ந்து இறுகிய திரேகம். சோறும் ...
மேலும் கதையை படிக்க...
சித்தாள் சாதி
ஆறு மாசமாயிற்று, சம்முகம், சிவகாசிக்கு வேலைக்குப் போக ஆரம்பித்து. சித்தாள் வேலை. கொதிக்கிற சுண்ணாம்புச் சாந்தில் கால் புதைந்து நின்று வேக வேண்டும். ரத்தத்தை உறிஞ்சுகிற சிமென்ட்டுச் சாந்தில்கிடந்து வெந்து தணிய வேண்டும். சாந்துச் சட்டிகளைச் சுமந்து சீரழிய வேண்டும். செங்கல் ...
மேலும் கதையை படிக்க...
முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள் விளார்கள் தலை தாழ்த்தித் தலை தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடும். சீமைக் கருவேல முள், விஷமுள். அதைக் கண்டால் எல்லாரும் ...
மேலும் கதையை படிக்க...
பிஞ்சுகளும் போரிடும்
சொந்தக் கால்
புது ராத்திரி
மதகதப்பு
மெளனக் கேள்வி
மனித மனசு
பூ
தள்ளி நில்லு
சித்தாள் சாதி
விபரீத ஆசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)