ஜமீன்தாரின் காதலி…..

 

ஜமீன்தார் கோபால் குமார் அந்த ஆளுயர போட்டோவுக்குள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.

வழக்கம் போல் இறந்து போனவரின் மனைவி, பெயர் ரங்கநாயகி அம்மா, வயது எண்பது இருக்கும், பணிவோடும், பய பக்தியுடனும் போட்டோவுக்கு எதிரே நின்று, ஏதோ தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இது அந்த ‘ஜமீன்தார் கோபால் குமார் நினைவு அனாதை இல்லத்தில்’ உள்ள மற்ற நபர்களுக்கு ஒரு வித்தியாசமான நிகழ்வாய் தோன்றவில்லை. ஏனென்றால் இது, தினமும் நடக்கும் ஒன்று தான்.

வார்டன் தனம் அதைப் பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டாள்.

சில சமயம், அவர் திட்டுவது மாதரியும், “ சரிங்க, சரிங்க, மன்னிச்சுடுங்க….” என்று அதற்கு, ரங்கநாயகி அம்மா பயந்து போய் பதில் சொல்வது மாதரியும் தோன்றும்.

ஒரு முறை தனம்,

“ ஏம்மா…. இப்படி போட்டோவுக்குள்ள இருக்கிற அவருகிட்ட தெனமும் பேசறீங்களே…. உண்மையில அவரு உங்க கிட்ட பேசராறா…..” கேட்டு விட..

ரங்கநாயகி அம்மாவுக்கு கோபம் வந்து விட்டது.

“ ஆமாண்டி…. அவரு எங்கிட்ட பேசிக்கிட்டுதான் இருக்காரு…. உனக்கு எதுக்கு சந்தேகம்…..”

அதற்கு பிறகு இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

ரங்கநாயகி அம்மா, ஜமீன்தார் கோபால் குமாருக்கு வாழ்க்கைப் படும்போது, அவர்கள் இன்னொரு ஜமீன்தாரின் ஒரே செல்ல மகளாய், வாரி வாரிக்கொடுத்த சொத்துக்களுடனும், கணக்கிலடங்கா விலை உயர்ந்த நகைகளுடனும் தான் வந்து சேர்ந்தார்கள்.

ஆனால், கோபால் குமார் வேறு பட்ட மனிதர். அவருடைய லீலைகளுக்கு, எவ்வளவு சொத்து இருந்தாலும் கரைந்து விடும். ஏகப்பட்ட பெண்கள் வருவார்கள் போவார்கள். ரங்கநாயகி அம்மா கண்டுகொண்டது கிடையாது. கேட்டதும் கிடையாது.

அப்படி வந்த பெண்களில், ஒருத்தி கூடவே தங்க ஆரம்பித்து விட்டாள். அவள் தான் சுசிலா..

ரங்கநாயகி அம்மா தன் பிறந்த வீட்டிலிருந்து, பணம் கொண்டு வரும் வரைக்கும், விட்டு வைத்திருந்த கோபால் குமார், மாமனார் வீட்டு வரவு குறைய ஆரம்பித்தவுடன், ரங்கநாயகி அம்மாவை அடிக்க ஆரம்பித்தார். சில சமயம், சுசிலாவும் சேர்ந்து கொள்வாள்.

அப்படி ஒரு நாள்…..

மேல் நாட்டு மதுவின் பிடியில் இருந்த கோபால் குமார் அடிக்க ஆரம்பிக்க…

ரங்க நாயகி தன் கணவனின் கால்களை பிடித்துக்கொண்டு,

“ வீட்டை விட்டு மட்டும் போகச்சொல்லிடாதீங்க…. இதே வீட்டில ஒரு ஓரமா வேலைக்காரியா இருந்திடரேன்…. இது வரைக்கும், நீங்க என்ன அடிக்கிறதாவோ, கொடுமைப் படுத்தறதாவோ என் அப்பாகிட்ட சொல்லலே…. அவருக்கு, தெரிஞ்சா செத்துடுவாரு…..”

கோபால் குமார் இரக்கம் காட்டவில்லை…..

கோபால் குமாரும், சுசிலாவும் சேர்ந்து ரங்க நாயகியை துரத்திவிட, தன் அப்பாவிடம் வந்து சேர்ந்த ரங்க நாயகி, எவ்வளவோ தன் அப்பாவிடம் சமாதானம் சொல்லியும், அதிர்ச்சியை தாங்க முடியாமல் அவர் போய் சேர்ந்தார்.

ஆனால் ரங்க நாயகி துவளவில்லை.

உடன் பிறப்புகள் யாரும் இல்லாததால், மிஞ்சியிருந்த தான் பிறந்த அந்த வீட்டை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட ஆரம்பிக்க, மனம் மட்டும் தன்னை துரத்தி அடித்த கணவனின் மேல் தான் இருந்தது.

கோபால் குமார் குடித்து குடித்து, உடல் கெட்டுக் கொண்டிருப்பதாகவும், சுசீலாவும் அவளுடைய தம்பிகளும், சொத்துக்களை, ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டிருப்பதாகவும், சிலர் வந்து சொல்வதுண்டு.

வீட்டிலிருக்கும் பொருட்கள் கூட காலியாகிக் கொண்டிருப்பதாகவும் வந்து சொன்னார்கள்.

ஒரு நாள் கோபால் குமார் உடம்பு கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்கள் தான் தாங்கும் என்று வந்து சொல்ல, மனம் தாங்க முடியாமல் ரங்க நாயகி போய் பார்க்கலாம் என்று போக, சுசீலாவும் அவளுடைய தம்பிகளும் வீட்டிற்கு உள்ளே விட வில்லை.

ஒரு ஆள் வந்து மெதுவாய்,

“ மீதி இருக்கிற சாமான்களை எல்லாம் அவங்க மூட்டை கட்டிக்கிட்டு இருக்காங்க…. அதையெல்லாம் எடுத்தவுடனே அவங்க போயிடுவாங்கன்னு தோணுது…. வீட்டு மேல கூட, முழுகற மாதரி கடன் இருக்காம்… ”

ரங்க நாயகி அழுது கொண்டே வெளியில் காத்துக் கொண்டிருக்க, இரவு வந்தது.

“ அம்மா… அவங்க போயிட்டாங்க…” என்று யாரோ வந்து சொல்ல,

ரங்க நாயகி வீட்டிற்கு உள்ளே சென்று பார்க்கும் போது, ஜமீன்தார் கோபால் குமாருக்கு நினைவு இல்லை.

காலையில் ஜமீன்தாரின் உயிர் போக, வீட்டின் மேல் கடன் கொடுத்தவர்,

“ வீட்டோட மதிப்பை விட அதிகமா கடன் இருக்குதும்மா… உங்க கிட்ட ஏதுவும் கேட்க மாட்டேன்… நீங்களே பாவம்…. இதுல ஒரு கையெழுத்து ஒன்னு மட்டும் போடுங்க…..” என்றார்..

பிறகு தன் அப்பா வீட்டை அனாதை விடுதியாக மாற்றி, அதற்கு தன் அப்பாவின் பெயரை வைப்பதற்கு பதிலாக, தன் கணவனின் பெயரை வைத்த போது மற்றவர்கள், ரங்க நாயகி அம்மாவுக்கு, புத்தி பேதலித்து விட்டதாக நினைத்து கொண்டார்கள்.

அதற்கு பிறகு, அவருடைய போட்டோவுக்கு எதிரே நின்று, பேச ஆரம்பித்தவுடன், யாருக்கும் எதுவும் கேட்க தோன்றவில்லை.

மின்னல் இடியுடன் மழை கொட்டிக்கொண்டிருந்தது. இரவு பத்து மணி இருக்கும். அனாதை இல்லத்தின் முன் கட்டப்பட்டிருந்த வெண்கல மணி அடித்தது. அப்படி மணி அடித்தால் அனாதை இல்லத்திற்கு புது வரவு என்று அர்த்தம்.

ரங்கநாயகி அம்மா,

“ ஏண்டி தனம், கொஞ்சம் என்னான்னு பாரு..” என்று சொல்லிக்கொண்டே கைத் தடியின் உதவியோடு வாசலுக்கு வந்தார்கள்.

ஒரு பெண்ணின் முனகல் குரல். மழையில் நனைந்து போய் படுத்து கிடந்தது. மாட்டு வண்டி ஒன்று வந்து திரும்பிய தடயம் இருந்தது. யாரோ கொண்டு வந்து போட்டு விட்டு, மணியை அடித்து விட்டு போய் இருக்கிறார்கள்.

ரங்கநாயகி அம்மா படுத்து கிடந்த அந்த பெண்ணின் அருகில் சென்று முகத்தை உற்றுப் பார்த்தார்கள். வெளிறிய தலையில் பாதி தான் முடி இருந்தது. உடம்பு எலும்பு கூடாய் இருந்தது. முகத்தில் ஏதோ கொப்பளங்கள். முகம் சரியாகத் தெரியவில்லை.

“ அக்கா… என்னை தெரியுதா…. நான் தான் சுசிலா….”

ரங்கநாயகி அம்மாவுக்கு கண்கள் விரிந்தன. அந்த சுசிலாவா இது….. நார் நாராய் போன உடம்போடு….

இந்த உடம்பின் வனப்புக்காகவும், வயதுக்காகவுமா தாலி கட்டிய தன்னை துரத்தினார் தன் கணவர் …. அந்த உடம்பா இப்படி சிதைந்து போய் விட்டது….

அதற்குள் தனம் வந்து சேர்ந்து விட,

ரங்கநாயகி அம்மா உத்தரவிட, காரியங்கள் மள மள வென்று நடந்தன.

தன்னுடைய அறையிலேயே தனக்கு நிகரான வசதிகளுடன் படுக்கை தயாரானது.

“ அக்கா, நீங்க கடவுள்… என்ன மன்னிச்சி, இப்படி ஏத்துப்பிங்கன்னு நா நெனக்கில…..” சுசிலா முனக,

உடனே கணவன் போட்டோவுக்கு முன் நின்று கொண்டு ரங்கநாயகி அம்மா, ‘ நீங்க தொட்ட அந்த உடம்பை, அநாதை பிணமா சாக விட மாட்டேங்க….’ என்று சொல்ல,

இதைக்கேட்டு, போட்டோவுக்கு உள்ளே கம்பீரமாய் நின்று கொண்டு இருந்த ஜமீன்தார் வெட்கி தலை குனிந்ததை பார்த்து, ரங்க நாயகி அம்மா அதிர்ச்ச்சி அடைந்தார்கள்.

அதற்கு பிறகு ஜமீன்தார் பேசுவதும் இல்லை, மிரட்டுவதும் இல்லை.

அதில் ரங்கநாயகி அம்மாவுக்கு வருத்தம் தான்… 

தொடர்புடைய சிறுகதைகள்
யமுனை நதிக்கு அப்பால் கிழக்கு டெல்லியின் அரசு அதிகாரிகளுக்கான காலனி. புலர்ந்தும் புலராத டிசம்பர் மாத அதிகாலை பனி மூடி இருந்தது. குளிர் சற்று அதிகம். ரஜாயின் கதகதிப்பில் எழுந்திருக்க மனம் இல்லாமல் படுத்துக் கொண்டிருந்தான் சுந்தரம். அம்மா எழுந்து விட்டிருக்க ...
மேலும் கதையை படிக்க...
குமரேசனுக்கும் அவன் தாய் மாமா சந்துருவுக்கும் ஒரு உடன்படிக்கை. தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி அவரிடம் குமரேசன் பேசக் கூடாது... பதிலுக்கு தன் மகள் ஈஸ்வரியைப் பற்றி அவர் இவனிடம் பேச மாட்டார். இந்த உடன்படிக்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக, சந்துரு ...
மேலும் கதையை படிக்க...
தேன் மொழிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள் அவனுக்கு. ஹைதராபாத்தில் கல்யாணம் ஆன புதிதில், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து மூன்று வருடம் அவர்கள் இருவரும் வாழ்ந்ததை நினைவு படுத்தி, அங்கு நம் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றாள் அவனிடம். சென்னையில் அவர்கள் இருந்ததும் வாடகை ...
மேலும் கதையை படிக்க...
கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் ...
மேலும் கதையை படிக்க...
சம்பள கிளார்க் நாராயணன் ஒரு பெண்ணின் போட்டோவை பக்கத்து கிளார்க் சுப்பிரமணியிடம் காண்பித்து இளிக்க, அவனும் ஒரு மாதரி சிரித்தான்.. இருவரும் கல்யாணம் ஆனவர்கள். அந்த போட்டோ கண்டிப்பாக நாராயணனின் மனைவி போட்டோவாக இருக்க முடியாது. மேலும் மனைவியின் போட்டோவுக்கு அப்படி ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சுமங்கலி வேஷம்
விஞ்ஞானியின் மாமனார்
இரண்டாவது அத்தியாயம்
பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு
நாராயணனின் நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)