சோற்றுத் திருடர்கள்

 

ஒரு மனிதன் ஓடுகிறான்…

அவனைத் துரத்திக்கொண்டு ஒரு பத்துப் பதினைந்து பேர் ஓடுகிறார்கள் – ‘விடாதே! பிடி!’ என்று கத்தியபடி.

ஓட்டப் பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக வெற்றிபெற்ற அந்தப் பத்துப் பதினைந்து பேர், ஓடத்தெரியாத அந்த ஒற்றை மனிதனை ஓடிவிடாமல் கால்கள் பின்னிக்கொண்ட நிலையில் பிடித்துப் பந்தாடி முடித்ததும் -

மூச்சுத் திணறும் வாய் குழறலோடு அவன் ஒப்புக் கொள்கிறான், தான் திருடியது உண்மை என்று.

அந்த உண்மையை விடப் பெரிய உண்மை -

அவனுக்குப் பசி எடுத்ததுதான்! பட்டினி கிடந்ததால் பசி எடுத்தது. வேலை போய்விட்டதால் பட்டினி கிடக்க வேண்டிருந்தது. நோய்வாய்ப் பட்டதால் வேலை பொய் விட்டது. அந்த வேலை ஆபீஸ் வேலை அல்ல. அன்றாடகக் கூலி வேலை.

அந்த ஒற்றை மனிதன் ஒண்டிக் கட்டையாக இல்லாததால் – அவனை விட அதிகமாக அவன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பசி எடுத்ததால் – அவர்களுக்குப் பிச்சை எடுக்கும் கலை கைகூடி வராததால்,

ஒரு உணவு விடுதியின் புறக்கடைப் பக்கம் நுழைந்து -

குப்பைத் தொட்டிக்கு வரும் முன்பே சோற்றைத் திருடியபோது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில்,

கையும் களவுமாகப் பிடிபட்டான்!

காவல் நிலையத்தாரின் கைவரிசைகளுக்குப் பின் -

கையில் காப்பநிந்தவனாய் சிறைக்கைதியாகி, மூன்று மாதங்கள் கழித்துக் கையில் ஏதுமில்லாமல் வீடு நோக்கி விரைந்து வந்து -

அந்தப் புளியமரத்தடி நிழாளில் காஹ்ட்டிப்பாநிகளையும் மூட்டை முடிச்சுகளையும் சுவர்கலாக்கிக் ‘கட்டி’இருந்த வகிடு அங்கு இல்லாததால் -

காவல் நிலையத்திற்கு ஓடி வருகிறான். அந்த பத்துப் பதினைந்து பேர் இப்போது துரத்திக் கொண்டு வரவில்லை! காரணம் அவன் கையில் ஏதுமில்லை!

காவல் நிலையத்தை அடைந்ததும் கத்துகிறான்:

‘யா, என் வீட்டிலே திருடு போய்விட்டது!’

‘என்ன திருடு போச்சு?’ காவல் அதிகாரி கிண்டலாகக் கேட்கிறார். ‘ என் பெண்ஜாதியும் குழந்தையும்!… நீங்க திருடனைப் பிடிக்கலியா?’ ‘ஒரு பிடி சோறு அந்தப் பயங்கரத் திருடனை விரட்டிப் பிடித்திடுந்தால், அந்த இரண்டு உயிர்கள் களவு போயிருக்க முடியாது என்பது தெரியாத நிலையில்,

அந்த ஒற்றை மனிதன்,

திருடனைப் பிடித்து மனைவி மக்களை மீட்கும் நம்பிக்கையோடு,

ஓடுகிறான்…

அந்தப் பத்துப் பதினைந்துபேர் த்ரிஉடனைப் பிடிக்க இப்போது ஓடி வரவில்லை!

அவர்கள் -

இன்னொரு திசையில் ஓடிக் கொண்டிருந்தார்கள் சோற்றுக்காக!

- 1982 

தொடர்புடைய சிறுகதைகள்
கடற்கரைச் சாலையைக் கடப்பதற்குக் கையில் சூட்கேசுடன் காத்திருந்தான் கிளெமென்ட். சாலையில் இரு பக்கங்களிலும் வாகனங்கள் வந்த வண்ணமிருந்தன. சாலையில் சற்றே இடைவெளி கிடைத்த வேளையில் அவசரமாகச் சாலையைக் கடந்த கிளெமென்ட், மறுபுறம் சேர்ந்தவுடன் எதேச்சையாகப் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தான். திடுக்கென்று ...
மேலும் கதையை படிக்க...
ஏனோக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை அறிந்தபோது என் உள்ளம் துன்பத்தில் நிறைந்த அதே நேரம், வேதத்தில் உள்ள வசனம் என் நினைவுக்கு வந்தது. ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருகையில் காணப்ப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்'. (ஆதியாகமம் 5:24) எழுபது வயது ...
மேலும் கதையை படிக்க...
பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன், "யாரப்பா அது இந்த நேரத்தில் வந்து இப்படி கதவைத் தட்டுவது?" என்று கோபமாகக் கேட்டான். மலாக்கி ஒரு திராட்சைத் தோட்டக் காரன். ...
மேலும் கதையை படிக்க...
மாலை ஆறரை மணியிருக்கலாம் விடுதி அறையில் விளக்கினைப் போட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன். 'கொங்கு தேர் அஞ்சிறைத் தும்பியாக' அன்று பகல் பொழுதில் நூலகங்களில் குறிப்புகளைச் சேகரித்திருந்தேன். இப்போது அவற்றை வகை தொகை படுத்த ஆரம்பித்தேன். பிறகு குறிப்புகள் கோவையாக இருக்கின்றனவா ...
மேலும் கதையை படிக்க...
காணாமற்போன மணி பர்ஸ்
ஏனோக்கு
குணமாக்கும் அன்பு
இழப்பினும் பிற்பயக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)