சோதனை – ஒரு பக்க கதை

 

பிரபல தொழிலதிபரான ரகு, தன் மகளின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். பிரபல சமையல் மாஸ்டரான காசியிடமிருந்து அவருக்கு அடிக்கடி போன் வந்தது.

‘‘மாஸ்டர், நான் பிஸியா இருக்கேன்… இன்னைக்கு வேணாம். நாளைக்கு போன் பண்ணிட்டு வாங்க’’ என்று அழைப்பைத் துண்டித்தார் ரகு.

அருகில் இருந்த ரகுவின் நண்பர் கேட்டார், ‘‘ஏம்பா நாலு நாளா தினமும் சமையல் மாஸ்டர்கிட்ட இதையே சொல்றியே… அவரு பிஸியான நல்ல மாஸ்டருப்பா!’’

‘‘அவர் அருமையான சமையல்காரர்தான்… ஆனா, பொறுமையானவரான்னு தெரியாது. நான் தரப்போறது பெரிய ஆர்டர். நாலாயிரம் பேரை எதிர்பார்க்கறேன்… ஐயாயிரம் பேர்கூட வரலாம். அந்த சமயத்துல கோபப்படாம பொறுமையா நிலைமையை சமாளிப்பாரான்னு தெரிஞ்சிக்கத்தான் இந்த டெஸ்ட்’’ என்றார் ரகு.

உடனடியாக காசி மாஸ்டரிடமிருந்து மீண்டும் போன்கால்.

‘‘மாஸ்டர் இப்பதானே சொன்னேன்… நாளைக்கு பார்க்கலாம்!’’ என்றார் ரகு அவசரமாக.

‘‘சார், எனக்கு உங்க ஆர்டர் வேணாம். ஆர்டர் தரவே இப்படி இழுத்தடிக்கிறீங்க… நாளைக்கு வேலை முடிஞ்சதும் பேமென்ட் தர இழுத்தடிக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? சமையல்ல ரிஸ்க் எடுப்பேன். சம்பளத்துல எடுக்கறதில்லை சார்!’’ எனப் பொறுமையாக சொல்லிவிட்டு கட் ஆனார் காசி.

- வீ.விஷ்ணுகுமார் (ஏப்ரல் 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
என் பேரு கங்காங்க. ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கத இருக்கும். என்கிட்டயும் ஒரு கத இருக்கு. கதய சொல்லலாம்னா காது கொடுத்துக் கேட்க ஆளில்ல. கேட்டவங்களும் பெரிசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. என்னால சொல்லாமலும் இருக்க முடியல. அதனால ஒரு முடிவு பண்ணிட்டேன். ...
மேலும் கதையை படிக்க...
யாமிருக்க பயமேன்
வாழ்வின் சந்தர்ப்பங்களில் நிகழும் பல அனுபவங்கள் சிறுகதைகளின் சாயலோடுதான் இருக்கின்றன. பார்க்கிற விஷயங்கள் மனதில் இருக்கும் கருத்துகளோடு இணைகையில் கதை தோன்றுகிறது. சில சமயங்களில் நிகழும் விஷயங்கள் கிட்டத்தட்ட கச்சிதமான சிறுகதை போலிருப்பது எனக்கு வியப்பளிக்கிற விஷயம். தற்போது சொல்லப் போகிற ...
மேலும் கதையை படிக்க...
பலிகளம்
''வேணாம்ணே... காசு குடுண்ணே...'' - கண்களைத் திறந்தால் 'சரக்கைக்’ காண்பித்துச் சிந்தனையை மாற்றிவிடுவாரோ என்ற பயத்தில் இமையைப் பூட்டியபடியே கேட்டான் நாகராசு. ''மில்ட்ரி சரக்குடி... சும்மா கும்முனு இருக்கும்''- சமையல் மாஸ்டர் ஆனந்தனுக்கு, நாகராசுக்கு ஒரு மடக்கு ஊத்திவிட்டால் - தனக்கு 30 ...
மேலும் கதையை படிக்க...
‘வசதியான வீடு. இன்டர்நெட்ன்னு எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கு. ஆனா தொலை பேசி மட்டும் எதிரி எண் தெரியற அளவுக்கு வசதி கெடையாது. இவ்வளவிற்கும் அது பெரிய காசும் கெடையாது. ஏன் இப்படி ?......‘ - வீட்டிற்குள் உட்கார்ந்து நண்பனோடு பேசிக் ...
மேலும் கதையை படிக்க...
மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. 'தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!' சாவியை எடுத்துக்கொண்டு ரூமை நோக்கி நடந்தேன். இவன் இப்படித்தான்... ஏதாவது கம்பெனி சிக்கினால் சிக்கனும் குவாட்டருமாகக் கொண்டாடிவிட்டு, அகால நேரத்தில் வருவான். ரூமைத் திறந்து ...
மேலும் கதையை படிக்க...
இது கதை அல்ல
யாமிருக்க பயமேன்
பலிகளம்
ஏன்…?
எங்கடா போயிட்ட?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)