Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சொந்த தொழிலில் அரசியல் வேண்டாமே

 

உணவகத்தில் “இங்கு அரசியல் பேசாதீர்கள்” என்ற அறிவிப்பு பலகை முன்னால் நாங்கள் கூட்டாக ஆரம்பிக்கும் தொழிலுக்கு எனக்கு பிடித்த எங்கள் ஏரியா கட்சித்தலைவரை அழைத்து ஆரம்பிக்க வைக்கலாம் என்று சொல்லப்போக நண்பன் ராஜேந்திரனுக்கு கோபம் வந்து விட்டது, அதெப்படி, நான் இருக்கற கட்சிதலைவர கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவோம்?நான் அதற்கு பதில் சொல்ல, அவன் அதற்கு பதில் சொல்ல விவாதம் பெரிதாகி எல்லோர் பார்வையும் எங்கள் மீது பதிய, எனக்கும்,நண்பனுக்கும் நாங்கள் ஆதா¢க்கும் கட்சிகளைப்பற்றி பெரும் விவாதம் கிளம்பி விட்டது.சத்தம் பெரிதாக ஆரம்பிக்கும் போது கடை முதலாளி எங்கள் அருகில் வந்து “சார் சாப்பிட வந்திருக்கீங்க, சாப்பிட்டாச்சுன்னா தயவு செய்து கிளம்புங்க, இங்க எல்லாரும் வர்ற இடம்,தயவு செய்து அரசியல் பேசி கூட்டத்தை கூட்டாதீங்க என்று என் முன்னால் சொல்லும்போதுதான் நான் என்னை உண்ர்ந்தேன். மன்னிச்சுங்குங்க என்று நண்பனை பேசாமல் இருக்கும்படி சைகை செய்து, சாப்பிட்டதற்கு பணம் கொடுத்து வெளியே வந்தோம்.

நண்பன் இன்னும் அரசியல் பேசியதின் பாதிப்பில் இருந்து மீளாமல் இருந்தான்.

அவனை மெல்ல உலுக்கி அமைதி, அமைதி, ஒண்ணு செய்யலாம், நம்ம குடோனை இரண்டு கட்சிக்காரங்களையும் வச்சு திறக்க சொல்லலாம் என்று யோசனை சொன்னேன், அதெப்படி இரண்டு பேரும் ஒண்ணா வருவாங்க, என்று சந்தேகம் எழுப்பினான். கடைய ஒருத்தர் திறக்கறதாகவும், இன்னொருத்தர் கொண்டு வந்த பொருட்களை வாங்கறதாகவும் ஏற்பாடு பண்ணிடலாம் என்ன சொல்றே? சரி என்று தலையசைத்தான் ராஜேந்திரன். இப்ப தயவு செய்து நாம் அதுக்கு முன்ன என்ன பேசிகிட்டிருந்தோமே அந்த விசயத்துக்கு வருவோம். சொன்னவுடன், மெல்ல புன்முறுவல் காட்டினான்.

நாங்கள் இருவரும் வேலையில்லா பட்டதாரிகள். இரு வருடங்களாக வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன் தான் பேசாமல் இருவரும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்தால் என்ன என்று விவாதிக்க ஆரம்பித்தோம்.ஒரு வழியாக வீடு வீடாக பழைய பேப்பர்களை சேகா¢த்து அதை மொத்த விலைக்கு போடுவது என முடிவு செய்து அதற்காக நகா¢ன் முக்கியமான இடத்தில் குடோன் ஒன்றையும் வாடகைக்கு பிடித்து விட்டோம்.இனி வீடு வீடாக பேப்பர்களை சேகா¢க்க ஆட்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வது, அல்லது அவர்களை கமிசன் அடிப்படையில் வைத்துக்கொள்வது, என்று பேச ஆரம்பித்து திறப்பு விழாவுக்கு என்னுடைய கட்சித்தலைவரை கூப்பிடலாம் என்று ஆரம்பித்து, என் நண்பனோ “அவனுடைய கட்சித்தலைவரை வரவழைக்கலாம் என்று சொல்ல, நான் மறுப்பு சொல்ல. அவன் அதற்கு மறுப்பு சொல்ல நான் பதிலுக்கு சொல்ல இப்பொழுது விவாதம் வேறு விதமாக போய் கடைக்காரர் எங்களை விரட்டும் அளவுக்கு வந்துவிட்டது.

எப்படியோ ஒரு வழியாக இரு அரசியல் வாதிகளையும் அழைத்து திறப்பு விழாவையும், பொருட்கள் வாங்கி குடோனில் சேமிப்பது போலவும் விழாவை நடத்தி முடித்து விட்டோம் நான்கைந்து வாடிக்கையாளர்கள் எங்களுக்கு கிடைத்தார்கள், பேப்பர், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகா¢ப்பதற்கு ஆட்களும் கிடைத்தார்கள். கமிசன் வகையில் ஆட்கள் வைத்துக்கொண்டதால் நேரம் காலம் பார்க்காமல் பொருட்கள் வந்தன்.

முதலீட்டு பணத்தை இருவரும் சமமாக போட்டுக்கொண்டோம்.இருந்தாலும் தேங்கிய பொருட்களை விற்பதில் எங்களுக்கு அனுபவம் குறைவு என்பதால் கொஞ்சம் தடுமாற்றம் வந்தது.நாங்கள் இருவருமே வேலை செய்து தரம் வாரியாக பிரித்து வைத்து விற்பனைக்கு காத்திருந்தோம்.

ஒரு நாள் ராஜேந்திரனுடன் அன்று திறப்பு விழாவை நடத்திக்கொடுத்த அரசியல் தலைவர் குடோனுக்கு வந்திருந்தார். வந்தவர் நாங்கள் சேர்த்து வைத்திருந்த பொருட்களை பார்த்துவிட்டு, கவலைப்படாதீங்க எனக்கு தெரிஞ்ச பார்ட்டி ஒண்ணு இருக்கு,வரச்சொல்றேன். சொன்னவுடன், ராஜேந்திரன் நெக்குருகி போனான். எனக்கு கூட நம்பிக்கை கீற்று வந்தது போல் இருந்தது. அதற்கப்புறம் அவர் கட்சியைப்பற்றி ஆஹா ஓஹோ வென பேசிவிட்டு விடை பெற்று சென்றார். எங்களுக்கு ஒரே சந்தோசமாக போய் விட்டது. எப்படியோ ஒரு இருபத்தி ஐந்தாயிரத்துக்கு போனாலும் ஐந்து ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆரம்பித்த ஒரு மாதத்திற்கு இந்த வருமானம் வந்தாலும் போதும் என்று நினைத்து பேசிக்கொண்டோம்.

மணி ஏழு இருக்கும், வீட்டில் இருந்த என்னை நான் சார்ந்த கட்சித்தலைவர் கூப்பிடுவதாக ஒருவர் வந்து சொன்னார். எனக்கு ஆச்சர்யம், நான் இந்த கட்சியை சார்ந்தவன் என்று மட்டும் அவருக்கு தெரியும், அப்படிப்பட்டவர், என்னோடு தொடர்பு வைத்து கொள்ளும் அளவுக்கு அப்படி ஒன்றும் பழக்கமில்லை, இருந்தாலும் என்னை வரச்சொல்ல என்ன காரணம்? யோசித்துக்கொண்டே சென்றேன்.

தம்பி வாங்க என்று என்னை கட்டி பிடித்துக்கொண்டவர்,எப்படி போகுது உங்க பிசினஸ்? இந்நேரத்துக்கு பிச்சிகிட்டு போயிருக்கணும்ல! என்று அன்பொழுக விசாரித்தார். நான் மெல்ல இன்னும் வியாபாரம் ஆகாம நிக்குது,மொத்தமா வாங்கற பார்ட்டி தேடிகிட்டிருக்கோம் என்று சொன்னேன். தம்பிக்கு ஒரு ஜூஸ் கொடுங்க என்று ஆர்டர் கொடுத்தார்.

ஐயோ அதெல்லாம் வேண்டாங்க என்று கூச்சத்துடன் மறுக்க சும்மா குடிங்க தம்பி என்று வற்புறுத்தினார். அப்புறம் தம்பி உங்க ”குடோன்ல” இருக்கற சாமான் எல்லாம் எனக்கு தெரிஞ்ச பார்ட்டி ஒண்ணு இருக்கு, அவங்களுக்கு கொடுக்கறீங்களா? நல்ல பார்ட்டி, உங்களுக்கு எவ்வளவு வேணும்னாலும் கேளுங்க நான் ஏற்பாடு பண்ணி வாங்கித்தாரேன்.

எனக்கு ஆச்சர்யமாகி விட்டது. நேற்று வரை எப்படி விற்பது என விழி பிதுங்கி கொண்டிருந்தோம், மாலையில் ராஜேந்திரனுடன் வந்த கட்சிக்காரர் நல்ல பார்ட்டியை அறிமுகப்படுத்துகிறேன் என்கிறார், இப்பொழுது இவரும் நல்ல பார்ட்டியை அறிமுகப்படுத்துகிறேன் என்கிறார்.

ஐயா மன்னிச்சுங்குங்க, என் கூட இருக்கிற ராஜேந்திரனோட நண்பர் ஒருத்தர் பார்ட்டி ஏற்பாடு பண்றேன்னு சொல்லியிருக்கிறாரு, இழுத்தேன், யாரு அந்த கட்சிக்காரனா, பார்த்து தம்பி, ஏமாத்திடப்போறாங்க, எதுக்கும் விசாரிச்சுட்டு கொடுங்க, சரிங்க, என்று தலையசைக்க,நம்ம கிட்ட பார்ட்டி ரெடி, நீங்க எப்ப வர சொன்னாலும் வந்துடுவாங்க,இதை மறந்திடாதீங்க,சரிங்க என்று சொல்லி தலையசைத்து வெளியே வந்தேன்.

ராஜேந்திரனிடம் இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை, மன வருத்தப்படுவான், மாலையில் ராஜேந்திரனின் நண்பன் அனுப்பிய ஆள் வந்திருந்தார். வந்தவர் எங்கள்
பொருட்களை சுற்றிப்பார்த்து விட்டு உதட்டை பிதுக்கி இதுவெல்லாம் இப்ப மார்க்கெட்டுக்கு போகாது என்று சொல்லவும் நாங்கள் முகமெல்லம் சோகமாகி அவரை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தோம். இறுதியாக பத்தாயிரம் தர்றேன் என்ன சொல்றீங்க? என்று கேட்கவும், இருவருமே மறுத்து விட்டோம். இது வரைக்கும் பதினைஞ்சாயிரம் கொடுத்திருக்கோம் நீங்க வெறும் பத்தாயிரம் சொன்னா எப்படி? ராஜேந்திரன் கேட்க, நீங்க தொழிலுக்கு புதுசு ஏமாந்திட்டீங்க, இந்த பேப்பருக்கெல்லாம் இவ்வளவு கொடுத்திருக்க வேண்டியதில்லை, என்று சொல்லிவிட்டு சரி உங்களை பார்த்தா பாவமா இருக்கு. கூட இரண்டாயிரம் போட்டு தாரேன், என்ன சொல்றீங்க?

நாங்க பேசிட்டு உங்களுக்கு சொல்லி அனுப்பறோம், அவரை அனுப்பிவிட்டு நான் எனது ஏரியா அரசியல்வாதி சொன்னதை இவனிடம் சொல்ல. எப்படியாவது போட்ட பணம் வந்தால் போதும் என்ற மன நிலையில் இருந்தவன் வரச்சொல் பார்க்கலாம், அவர் என்ன ரேட் சொல்றாருன்னு,! நான் எனது ஏரியா அரசியல்வாதியிடம் சொல்லி அனுப்ப, மற்றொரு ஆள் மறு நாள் குடோனுக்கு வந்திருந்தார். அவரும் முன்னவர் போலவே சுற்றிப்பார்த்து விட்டு அவர் சொன்னதைப்போலவே சொன்னர்ர். நாங்களிருவரும் வெறுத்துப்போய் இருந்தோம்.இறுதியாக பதிமூணாயிரம் கொடுக்கலாம் என்ன சொல்றீங்க என்று கேட்ட்டார்.நாங்க அப்புறம் சொல்றோம் என்று அவரையும் அனுப்பி விட்டோம்.

அன்று மாலை வரை என்ன செய்வது என்று மண்டையை உடைத்து கொண்டிருந்தோம்.மாலை நான் குடியிருக்கும் ஏரியா அரசியல்வாதி வந்தார். என்ன தம்பி என்னாச்சு என்று கேட்டார்.நான் வருத்தத்துடன் வந்த இருவரும் கேட்ட தொகையை சொன்னேன். அவர் யோசனையாய் முகத்தை வைத்துக்கொண்டு, நீங்க எவ்வளவு எதிர்பார்க்கறீங்க என்று கேட்டார், நான் ராஜேந்திரனின் முகத்தை பார்த்தேன்.அவன் இருபத்தி ஐந்து சொல் என்று கிசு கிசுத்தான். எனக்கு பயம் மெல்ல நாங்க ஒரு இருபத்தி ஐந்து எதிர்பார்க்கறோம் என்று சொல்ல, அவர் மறுபடி எவ்வளவு சொல்லுங்க என்று கேட்க, வாய் குழற இருபத்தி ஐந்து கொடுத்தா நல்லா இருக்கும் என்று இழுத்தேன்.

கட கட வென சிரித்தவர் தம்பி இந்த பொருட்களுக்கு பத்து பதினஞ்சு கொடுக்கறதே அதிகம் சரி நீங்க நம்ம பார்ட்டியா போயிட்டிங்க,சரி நான் ஒண்ணு சொல்றேன், உங்களுக்கு இந்த பிசினஸ் ஒத்து வராது, ஏமாந்து போயிடுவீங்க, அதனால இங்கிருக்கற அத்தனை பொருளுக்கும் நான் முப்பதாயிரமா தர்றேன், நீங்க இந்த குடோனுக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்திருக்கீங்களோ அதையும் உங்களுக்கு கொடுத்திடறேன், ஏன்னா இந்த பொருள் எல்லாம் நான் விக்கிற வரையில் இங்கிருக்கட்டும். என்ன சொல்றீங்க.

நாங்கள் வாயடைத்து போயிருந்தோம், இந்த பிசினசை விட்டுவிடுவது எங்களுக்கு மன வருத்தம் வந்தாலும் ராஜேந்திரன் என்னிடம் சைகை காட்டினான் சரின்னு சொல்லு. எப்படியோ பத்து ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது, தொழில் போனால் என்ன? அடுத்தது ஏதாவது ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று முடிவுடன் சரி என்று சொன்னேன்.

அன்று இரவே பண பட்டு வாடா முடிந்து நாங்கள் இருவரும் வெளியே வந்து விட்டோம். முதல் வியாபாரம் சரியான லாபம், ஆனால் தொழில் முடிந்துவிட்டதே! மனவ்ருத்தத்துடன் வீடு சென்றோம்.

மறு நாள் நாங்கள் வைத்திருந்த குடோன் வழியாக சென்ற போது அந்த இடத்தில் “விரைவில் ஓட்டல் திறக்கப்படும்” என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்த்து. அதன் கீழே “பங்குதாரர்கள்” என்னுடைய கட்சித்த்லைவர் பெயரும்,ராஜேந்திரன் கட்சித்தலைவர் பெயரும் போட்டிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர். ராமுவும், ...
மேலும் கதையை படிக்க...
அது மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்த ஊர், எல்லா ஜாதி, மதங்களை கொண்ட ஊர். அமைதியான ஊர், அதே சமயம் தேர்தல் திருவிழா காலங்களில் ஊர் இரண்டு படும். பகைகள், வன்முறைகள் வெளி வரும். எல்லாம் முடிந்த பின் ஒருவரை ஒருவர் பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
காலையில் ஐந்து மணியில் இருந்து காத்திருக்கிறான் ராகவன், இன்னும் பால் பூத் திறக்கப்படவில்லை, தூக்கமும் கெட்டு, சும்மாவே காத்திருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது,கோபமாக வந்தது ராகவனுக்கு, அதற்குள் பூத்காரர் அவசர அவசரமாக வந்து கடையை திறந்து சாரி சார் லேட்டாயிடுச்சு என்றவர் ...
மேலும் கதையை படிக்க...
உனக்கென்ன ராசப்பா, போன முறை வெள்ளாமை அமோகமா இருந்திருக்கும் போல!, அக்கா கழுத்துல இரண்டு செயின் புதுசா போட்டிருந்ததா வீட்டுக்காரி சொன்னா! சொன்ன மாரியப்பனுக்கு பதிலேதும் சொல்லாமல் பெருமூச்சு விட்டான். எத்தனை போ¢டம் சொல்லி சொல்லி இவனுக்கு அலுத்துவிட்டது. இத்தனை வருடங்கள் ...
மேலும் கதையை படிக்க...
புலியார் அன்று மகா கோபமாக இருந்தார். காலையில் அவர் கேட்ட செய்தி அவரை அவ்வளவு கோபப்பட வைத்து விட்டது. அதற்கு காரணம் நரியார் சொன்ன செய்திதான். விடிந்த பின் எழுந்த சூரியன் அப்பொழுதுதான் மேலேறிக்கொண்டிருந்தான். புலியார் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணை மூடி குட்டி ...
மேலும் கதையை படிக்க...
புத்திசாலி சகோதரர்கள்
வன்முறையில்லாத வளர்ச்சி
தினம் தினம் அணியும் முகமூடி
சின்ன மிரட்டல்
புலிக்கு புலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)