சொதப்பல் – ஒரு பக்க கதை

 

‘’லோக்கல்லே நல்லா மார்க்கெட்டிங் பண்ணினீங்களேன்னுதான் உங்களை சவூதிக்கு அனுப்பி வச்சேன். ஆனா இப்படி சொதப்பட்டீங்களே தேவராஜ்?’’என்று உதவியாளரைத் திட்டினாள், மேனேஜர் பிரபா. முடி வளரச்சிக்கான ‘ஹேர் ஆயில்’ தயாரிக்கும் நிறுவனம் அது.

‘ஒரு பாட்டில் கூட விற்காம லட்சக்கணக்கிலே நஷ்டமாயிடுச்சே, ஏன்?’’

‘வார்த்தைகளை உபயோகிக்காம பத்திகைகள்லேயும் டி.வி.யிலேயும் வெறும் படங்களை வச்சே விளம்பரம் பண்ணினேன் மேடம். நாலஞ்சு இளைஞர்கள் மொட்டைத் தலையோட இருக்கறமாதிரி ஒரு படம். அவங்க நம்ம ஹேர்ஆயிலை யூஸ் பண்ணற மாதிரி இரண்டாவது படம். அவங்களுக்குத் அடர்த்தியாக தலைமுடி வளர்ந்திருக்கற மாதிரி கடைசிப்படம்.’’

‘’நல்ல டெக்னிக்தானே, அப்புறம் எப்படி ஃபெயிலாச்சு?’’

‘’ஒரு சின்னத் தப்பு நடந்து போச்சு மேடம். அரபி எழுத்தை வலது புறத்திலேயிருந்து இடது புறமாப் படிக்கிற பழக்கத்திலே இந்தப் படங்களையும் ரிவர்ஸிலே பார்த்துப் பயந்திட்டாங்களாம்..!’’

- கடையநல்லூர் ஷேக் (22-4-09) 

தொடர்புடைய சிறுகதைகள்
"புத்தாண்டுவாழ்த்துக்கள் ப்ரதீபா! நினைத்ததை சாதித்து இன்று நீ சட்டத்தை கையிலெடுத்து நகரின் பிரபல வழக்கறிஞர் என்ற பெயரோடு இருப்பதில் எனக்கு ரொம்பப் பெருமையாய் இருக்கிறது!" ஜனவரி 2006 காலையில் முதல் தொலைபேசி அழைப்பாக இப்படி ஒருகுரல் வந்தது ப்ரதீபாவிற்கு. மீனாதான். அவளுக்குத்தான் ப்ரதீபாவின் அசாத்திய திறமையில் ...
மேலும் கதையை படிக்க...
கி.பி. 2030 வியாஸின் இன்பமான பொழுதுகள், தன் ஏழு வயது மகள் சுஹாவிடம் மாலை நேரங்களில் விளையாடுவதுதான். ஒரு சிவில் எஞ்சினியரான வியாஸ் தன் அலுவலக டென்ஷன் முழுவதும் மறந்து அவளுடன் விளையடுவதும், கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், கிண்டல் செய்வதும், பார்ப்பவர்களை ...
மேலும் கதையை படிக்க...
குப்பையை அளைந்தபடியே மறுபடியும் தலைதிருப்பி பார்த்தபோது, அவன் இன்னும் அதே மரத்தடிதிண்டில், காவி-வெள்ளையடித்த சிமெண்டுச் சிறுதெய்வத்தினருகில் அவளை பார்த்தபடி குந்தியிருப்பது தெரிந்தது. அவள் பார்பதை உணர்ந்ததும், பார்வையை விலக்கி வானத்தை பார்த்தபடி தன் மந்தமான தாடியை சொரிந்து விட்டு கொண்டான். எதிர்பக்கம் ...
மேலும் கதையை படிக்க...
24 மணி நேரமும் சுறுசுறுப்புடன் இயங்கக் கூடிய அந்த அலுவலகம் இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தது. வேலை செய்வதற்கென்றே பிறந்தவன் போல கம்யூட்டரும் பிரதீப்பும் ஒரு வித கடினமான பிணைப்போடு போராடிக் கொண்டிருந்தார்கள். பிரதீப் 26 வயது இளைஞன். அனுபவிக்க வேண்டிய வயதில் ...
மேலும் கதையை படிக்க...
“பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி. “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் ...
மேலும் கதையை படிக்க...
நான் நன்றி சொல்வேன்
காலக்கோடு
வடு!
பதவி உயர்வு
பஞ்சரத்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)