செக்மேட்

 

சிறு வயது முதல் பரத்திற்கு சதுரங்கம்தான் எல்லாமே, அதற்கு காரணம் அவனது தந்தை. அந்த சதுரங்க அறுப்பதுநான்கு கட்டங்களுக்குள் தன் மொத்த வாழ்க்கையையும் கட்டமைத்தான் பரத். அதற்கேற்ப வெற்றிகள் அவனை கட்டிகொண்டன. பரத்தை ஒரு சதுரங்க வீரனாக மட்டுமே வளர்த்த அவன் தந்தையால், நாளடைவில் வாழ்வியல் எதார்த்தங்களை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் சதுரங்க திறமைகளை வாழ்வில் உட்படுத்திகொண்டாலே சிறக்க முடியும் என்பதே யதார்த்த உண்மை. வீரமாக முன்னேற, சமயத்தில் பதுங்க, தேவைகேற்ப பின்வாங்க, மேலும் ஒவ்வொரு நொடியும் பல்வேறுபட்ட சூழ்நிலை நிர்பந்தங்கள் கடக்க என மிக சிறந்த வாழ்வின் மினியேச்சர்தான் சதுரங்கம்.ஆனால் பரத்தால் குறிப்பாக பள்ளி கல்வியின் தேர்வுகளை கூட அவனால் எளிதாக கடக்க முடியவில்லை.

மறுபுறம் தன் வயதை மீறிய திறத்துடன், பள்ளி , ஒன்றியம் , வட்டம் , மாவட்டம் என சதுரங்க வேட்டையில் தலைதோங்கினான். முதல் தலைசிறந்த வீரனாக மாவட்டம் அறியப்பட்டான். சதுரங்க புகழால் எதோ பள்ளி படிப்பை பார்டரில் கடந்தான். அதுவரை தந்தையின் பயணத்தில் பங்கு பெற்றே வாழ்க்கையை கடந்தவனுக்கு, தற்போது தடுமாற்றம் ஏற்பட்டது.

கல்லூரியில் எதை தெரிவு செய்வதில் ஆரம்பித்து, மற்றவரோடு இயல்பாக உரையாடுவதில்கூட சந்தேகம் இருந்தது. சதுரங்கத்தில் ஹீரோ ஆனா அவன், அதை விடுத்த வாழ்வில் ஜீரோ வானது அவனை விட அவன் தந்தைக்கு பாதித்தது. பரத்திற்கு அம்மா அப்பாவை தவிர, ராஜா ராணி மந்திரி குதிரை யானை சிப்பாய்கள் தெரிந்த அளவுக்கு உறவுக்காரர்கள் யாரையும் தெரியவில்லை, தெரியபடுத்தவும் இல்லை.

பரத்தின் தனித்துவத்தை அறிந்த ஒரு பெண் ஒருவள் காதலை வெளிபடுத்த அதை எதிர்கொள்ள தெரியாமல் திணறியது அவள் காதலையே நொடி பொழுதில் மாற்றியது. இதுவரை ஒரு நண்பன்கூட இவனுக்கு இல்லை. ஆழ்ந்த சிந்தனை, அதீத புன்னகை, ஆள முடியா சோகம் என எதுமே பரதிற்கில்லை. நடைமுறை வாழ்க்கையில் நடக்க மட்டுமே தெரியும் பரத்திற்கு. ஆனால் இவ்வெதையும் பொருட்படுத்தாமல் பரத் மாநில சதுரங்க போட்டிக்கு தயாரானான்.

ஆரம்பத்தில் அதாவது குழந்தை பருவத்தில் பரத்தின் செயல்பாடுகளில் பூரித்து போன அவன் பெற்றோர், தற்போதும் அவன் மாறாதிருப்பது பயத்தை அளித்தது. அதற்கு பரத் மட்டுமே காரணம் இல்லையென்று, அவன் தந்தை நன்கு புரிந்திருந்தார். இது ஒரு பெரிய குறையில்லை என்றாலும், தன் மகனை அனைத்திலும் சிறந்தவனாக அறியத்தான் விரும்பும் பெற்றோர் உள்ளம்.

இந்நிலையில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் தொடங்கியது. தொடக்கம் முதலே வெற்றிகள் வழக்கம்போல் பரத்தை கட்டிகொண்டன. வழக்கத்திற்கு மாறாக மிக குறைந்த நொடிகளில் எதிராளியை தோற்கடித்தான் பரத். டோரண்மென்ட்டின் அடுத்தடுத்த சுற்றுகள் செல்ல தனது வெற்றிகள் வெகு சுலபமாகுவது பரத்திற்கு பிடித்திருந்தது. ஆனால் அவன் தந்தைக்கு, போட்டியில் இறுதி சுற்றை நோக்கிய பயணம் கடினத்தன்மை தலைகீழாக இருந்தது சந்தேகத்தை தூண்டியது.

பரத்திற்கு எதிராளியின் கைசைவிற்கு மட்டுமே பதில் கொடுக்கும் பழக்கம் இருந்தது. எதிராளியின் மூளையை பற்றி பரத்திற்கு அறிவியல் கிடையாது. ஆதலால் எந்தவித தடுமாற்றமும் இன்றி இறுதிபோட்டிக்கு வந்துவிட்டான் பரத்.

இன்று இறுதி போட்டி இருவரின் பயணமும் பரிசீலிக்கப்பட்டது, எதிராளி பரத்தை விட வெகுவாக பின் தங்கி இருந்தான். அவன் வெற்றிக்கு சமமான தோல்விகளை கடந்தே வந்திருந்தான். இன்று இருவருக்கும் நேருக்கு நேர் போட்டி ஆரம்பம். வழக்கம்போல் எளிதாக முன்னேறினான். எதிராளி கடுமையாக போராடினான், என்னவோ புதிதாக கையாண்டான் தடுமாறி ஆனால் பரத் சளைக்காமல் கைகளால் களமாடினான்.

எதிராளி சற்று வித்தியாசமான சூழ்நிலையை உருவாக்கினான், பரத் இதுவரை கடந்த வெற்றி இச்சூழ்நிலையை புதிரென்றது. தோல்விக்கு பழக்கப்பட்டவனுக்கு இருந்த சமயோசிதம், வெற்றிமகன் பரத்திற்கு இல்லை. இதுவரை எளிதாக கிடைத்த வெற்றியில் களித்து பரத் சதுரங்க சூழ்ச்சியில் பின்னோக்கி சென்றிருந்தான் என்பதை அவன் உணரவில்லை. ஆம் பரத்திற்கு இப்போது “செக்மேட்” ஆனது.

போட்டி முடிவிற்கு பிறகு பரத்திடம் நிறைய பேசணும்னு நினைத்த தந்தை, முதற்முறையாக பரத் தோற்றதிற்கு சந்தோஷப்பட்டார். தந்தைக்கு நன்கு தெரியும் தோல்வி தரும் அனுபவத்தின் ஆழம். சிறிது நேர பிளாஷ்பேக் பரிசீலினைக்கு பிறகு பரத்திற்கு எதோ தெளிவு கிடைத்துபோல் இருந்தது, இதுவரை நடந்த லீக் போட்டியில் தனது திறம் தொடர்ந்து, திட்டம்போட்டு குறைக்கப்பட்டு இருந்தது அப்போதுத்தான் புரிந்தது. பரத்தின் இறுதிபோட்டி தோல்வி, அவன் முதல் போட்டி வெற்றியின் தொடக்கம் என்பதை தானாகவே புரிந்தது அவனுக்கே வியப்பானது. மேலும் தான் ஒரு மூளையோடு எதிர்த்து போட்டிபோடவில்லை, ஒரு கூட்டமே நமக்காக எதிரணியில் வேலை பார்த்திருக்குனு புரிஞ்சப்ப கொஞ்சம் பெருமிதமாகதான் இருந்தது.

இந்த அனுபவம் புதிய சிந்தனைகளுக்கு கதவு திறந்தது. எதிராளியின் அந்த நிமிட கையசைவைவிட மொத்த திட்டத்தின் மூளையசைவை புரிந்துகொள்ள, பலதரப்பட்ட மனிதர்களோடு பழக வேண்டுமென புரிந்தது. அதற்கு பிறகு பரத்தின் நடவடிக்கைகள் எல்லாம் ஆச்சர்யங்களையும் ஆனந்தத்தையும் அள்ளி தந்தது பெற்றோருக்கு. மேலும் தன் சதுரங்க யுக்திகளை வாழ்க்கையிலும் பயன்படுத்தி பல வெற்றிகள் கண்டான். பலதரப்பட்ட திறமைகளை வளர்த்து கொண்டான். யதார்த்த நாயகன், காதல் நாயகனும் ஆனான்.

“போட்டியோ வாழ்க்கையோ வெற்றி, தோல்வியை விட அனுபவமே சிறந்தது”
-தேவா. 

தொடர்புடைய சிறுகதைகள்
அடிப்படை தேவைகளுக்கே அன்றாடம் அல்லல்படும் குடும்ப பின்னணியில் மூன்று அக்காக்களுக்கு கடைக்குட்டியாக, சர்வான்மா, முதற்முறையாக ஒரு நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள தயாராகிறான். வீட்டிலிருந்து நிறுவனம்வரும்வரை ஒலித்து கொண்டே இருந்தது அம்மா மற்றும் அக்காகளின் அறிவுரைகள் மற்றும் பொருளாதார குறைகள். அந்த MNC கம்பெனியில்நேர்முகத்தேர்வுக்கு காத்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு ஒரு ஆசடா ” –குமரன். “சொல்லுடா நெரவேத்திருவோம்”- தேவ். குமரன், “நான், ரெண்டு தடவ சாகனும் ”. வழக்கமான அதிர்ச்சியுடன் தேவ், “ஏன்டா நல்லாதானே பேசிகிட்டிருந்தோம் ஏன் தீடிர்னு இப்டி? சரி, ஓகே.. நீ ரைட்டர்-ங்கிறதால அப்டி கேட்டியா? ...
மேலும் கதையை படிக்க...
(தலைப்பை மறுமுறை வாசியுங்கள் நகைப்பு அடங்கி விடும்) ஊரெங்கும் மணநாள் வாழ்த்து சுவரொட்டிகள், அந்த சுவர்களுக்கே மனதில் ஜோடி பொருத்தம் ஒட்டவில்லை பிறகு எனக்கு எப்படி பிடிக்கும், மணவீட்டின் தெருவெங்கும் ப்ளெக்ஸ் நிற்க மனமில்லாமல் நிற்கிறது, அதில் சிரிப்பவர்களையும் சிரிப்பதாய் நடிப்பவர்களையும் பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
கோபுரகோவில்மணி ஓசையில், கடவுளை வழிபாட்டுக்கு தயார் செய்துவிட்ட மனிதனின் கைஅசைவு அடிநாதமிட்டது. அந்த பணக்கார கடவுளின் பாதுகாப்பிற்கு, கோவிலை சுற்றிலும் அத்தனை காவலர்கள் பிச்சைகாரர்களாக. ஆனாலென்ன கோயில்வாசலிலே, பெரிய மனதுடன் அனைத்து திருடர்களிடமும் பாரபட்சம் பார்க்காமல் லஞ்சம் பெற்று அனைவரையும் உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு ஒரு விசித்திர நோய் இருக்கு. அது என்னன்னா ரொம்ப பரிச்சயமற்ற ஆனால் எங்கோ பார்த்த நினைவு இருக்குற சில மனிதர்களை சந்திக்கும்போது அவர்கள் ஏற்கனவே இறந்தவர்களாக தோன்றுவது. அது ஏனோ சமீபத்தில் அந்த எண்ணம் அதிகமாகி கொண்டே போகிறது. இதை ...
மேலும் கதையை படிக்க...
இந்த காதலர்களும், கல்லூரியில் பட்டம் வாங்கினார்களோ இல்லையோ, காதலில் தேர்ந்துவிட்டனர். ஆனால் இரு குடும்பத்திற்கும் எந்த பொருத்தமும் இல்ல, நெறைய வேறுபாடுகள் கிராமம் நகரம், சாதி, ஜாதகம், பொருளாதாரமென ராக்கெட் விட்டாலும் எட்டாது, பொருந்தாது. ஆனால் வேறு யாருக்கும், எந்த காதலர்களுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
பேய் அப்படின்னாலே எல்லாருக்குமே பயம் ஆனா அது எனக்கு பிசினஸ். ஆமா நான் பேயா வச்சுதான் பணம் சம்பதிக்கிறேன் . அதுக்காக நான் பேயை புதுசா உருவாக்கி பயமுறுத்தி அப்டிஎல்லாம் இல்ல அதெல்லாம் பழைய ஸ்டைல். நான் சம்பாதிக்க தேவையான பயத்தை ...
மேலும் கதையை படிக்க...
நான் ஓடிகிட்டு இருக்கேன்?, யார் இவங்கல்லாம்? ஏன் என்னை துரத்துறாங்க? சும்மா துரத்துனா கூட பரவால்ல ஏழெட்டு பேர் கையிலும் பட்டா கத்தி, வீச்சு அருவா? நான் சினிமாலதான் இதல்லாம் பாத்துருக்கேன், அந்தளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்? நீங்க நினைக்கிற ...
மேலும் கதையை படிக்க...
“கல்யாணம்” என்ற வார்த்தையை கேட்டவுடன் விசித்ராவுக்கு, தனது அக்கா காதலித்து ஓடி போக இருந்ததை கண்டறிந்து, வலுகட்டாயமாக அவளை தங்கள் தாய்மாமனுக்கு கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்து, மேலும் திருமணத்தன்று அவள் காதலுருடன் ஓடிப்போக மணமேடையில் தேவையில்லாமல் நிற்கதியாக நின்ற தன் ...
மேலும் கதையை படிக்க...
அதிகாலையில் திண்ணையில் சிறுவன் ஆனந்த் நன்கு தூங்கிகொண்டிருந்தான். தன் அக்காவின் கொலுசு சத்தம், அவள் இடும் கோலபுள்ளிகளுக்கும் கோடுகளுக்கும் ஏற்றவாறு இசைந்து சங்கமித்தது, ஆனந்துக்கு தொந்தரவாகி விழித்து கொண்டான். இருப்பினும் எழாமல் படுத்தபடியே கோலத்தை ரசித்தவன், அக்காவுக்கு காலை வணக்கத்தை கையசைவில் ...
மேலும் கதையை படிக்க...
நேர்முகத் தேர்வு
நட்பாசை
விடிஞ்சா கல்யாணம், முடிஞ்சா காதலி!
பாத்திரம்
கொரானா நெகடிவ்
குற்றபரம்பரை
கண்டேன் பேயை
ஓடு
காதலுக்காக
ஒத்த கொலுசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)