சூரியன், காற்று, மழை

 

இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன்.

இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை.

இவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ஏது? பெருமையுடன் தன்னை பார்த்துக்கொண்டது காற்று.

சூரியன் அன்று மழையை யதேச்சையாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை,

எங்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறாய்?

மழை அசுவாரசியமாய் சூரியனை பார்த்து, போகும்போது அபசகுனமாய் எங்கே போகிறாய் என்று கேட்கிறாய்?

காரியமாகத்தான் கேட்கிறேன் முகம் சுழிக்காமல் சொல்.

தமிழ்நாட்டில் என்னை வேண்டி நிறைய யாகம் எல்லாம் செய்கிறார்கள், என்னை எதிர்பார்த்து அங்குள்ள நிலங்கள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது, அங்கு செல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை, இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது போய்க்கொண்டிருக்கிறேன்.

முதலில் அதற்கு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டாயா?

இது என்ன அக்கிரமம்? நான் நினைத்தால் எங்கு வேண்டு மானாலும் செல்லலாம், உன்னிடம் அதற்கு அனுமதி கேட்க அவசியமில்லை.

பொறு உணர்ச்சி வசப்படாதே, அங்கு ஆறு மாதங்களாக நான் இருந்து கொண்டிருக்கிறேன்,நீ திடீரென்று உள்ளே வருகிறேன் என்றால் நான் அங்கிருந்து விலக வேண்டி வரும், அதனால் மரியாதைக்காவது, நீ என்னிடம் அனுமதி கேட்பதுதான் முறை.

நீ அப்படி எத்தனை முறை என்னிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறாய்? நான் ஒரு இடத்தில் நான்கு நாட்கள் இருக்கும் போது நீ உள்ளே வந்து என்னை அனுப்பி வைத்தாயே அது உனக்கு நினைவில இருக்கிறதா?

பொறு, எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு அழுவதே உன் வேலையாகி விட்டது.அன்று காற்று தான் உன்னை வெளியே தள்ளிக்கொண்டு போனது. நான் நீங்கள் இருவரும் சென்று விட்டீர்களே என்றுதான் உள்ளே வந்தேன். நீ காற்றிடம்தான் சண்டைக்கு சென்றிருக்க வேண்டும்.

அதைப்பற்றி இப்பொழுது எனக்கு கவலை இல்லை, நீ கேட்டதால் இந்த பதிலை சொன்னேன். இப்பொழுது நான் தமிழ்நாட்டுக்குள் செல்கிறேன்.

சரி நான் போய் விடுகிறேன், உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருப்பதாக சொன்னாயே,

உன்னை வரவேற்பார்களா இப்பொழுது?.

இதிலென்ன சந்தேகம்? என்னை வருந்தி வருந்தி கூப்பிடும்போது செல்வதுதான் மரியாதை.

அதே ஊரில் ஒரு பழமொழி உண்டு உனக்கு தெரியுமா?

என்ன பழமொழி?

“விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்”

அது மனிதர்களுக்காக பேசிக்கொள்வது.

நீ அந்த மக்களை அப்படி எடை போடாதே, அவர்கள் இந்த உலகத்தையே எடை போடக்கூடியவர்கள், ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் உலகத்தையே எடை போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டே அடிதான், ஏழு வார்த்தைக்குள்தான் வரும்.

உடனே மழை சிரித்தது, அவர்கள் எழுதி வைத்தபடி நடப்பார்களா என்று கேட்டு பார். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.

நில் நான் அந்த இடத்தை விட்டு போவதென்றால், “காற்றை” கூப்பிடு, அவன் மட்டுமே உன்னை அங்கு கூட்டி செல்வான்.

அவன் எதற்கு எனக்கு வழித்துணைக்கு?

முட்டாள்தனமாக பேசாதே, உன்னை அங்கு விரைவில் கொண்டு செல்ல அங்கு உதவுவான்.

சரி கூப்பிட்டு தொலைக்கிறேன். அவனால்தான் நான் இருப்பதாக நினைத்துக்கொள்வான்.

அந்த நினைப்பை மட்டும் மாற்றிக்கச் சொல்.

தமிழ் நாட்டின் ஏதோ ஒரு இடத்தில்..

அப்பபா, இந்த வெயில் இப்படி கொளுத்துது. என்ன கொடுமை, எப்பத்தான் மழை வருமோ?

ஆஹா இதென்ன திடீருன்னு காத்து இப்படி வீசுது ! மழை வருமா? ஆமா வானத்துல மேகம் கருக்கற மாதிரி இருக்குது, அப்ப கண்டிப்பா மழை வரும்.

மழை “கொட்டு கொட்டு” என்று கொட்டுகிறது.

வானிலை அறிக்கை !

இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மழை தொடரும்.

இன்னும் மூணு நாளைக்கி இருக்காம், தண்ணி பஞ்சம் தீர்ந்தா போதும், விவசாயத்துக்கும் இந்த மழை வேணும்.

மழை சூரியனை தேடுகிறது, எங்கிருக்கிறாய்? நான் உள்ளே வந்ததும் ஓடி விட்டாயா?

உண்மைதான், நீயும், காற்றும் விருந்தாளியாய் வரும்போது எனக்கென்ன வேலை இங்கே?

பார்த்தாயா மக்கள் ஆர்ப்பரித்து என்னை வரவேற்பதை.

உண்மைதான், இருந்தாலும் இந்த மக்களின் பழமொழியை ஞாபகப்படுத்திக்கொள்.

என்ன சொல்கிறான் சூரியன்? கேட்டுக்கொண்டே காற்று அங்கு வந்தது.

அவனுக்கென்ன நாம் இருவரும் உள்ளே வந்ததும் அவன் ஒடி விட்டான்.

சரி இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பாய்? காற்று கேட்டது,

ஏன் வந்து ஒரு நாளிலே இந்த கேள்வியை கேட்கிறாய்?

இல்லை நான் அடுத்த இடம் போக வேண்டும்.

தாராளமாக போ, உன்னை யார் எதிர் பார்த்தார்கள்.

இதுதான் உன் புத்தி, நான் இல்லாமல் எப்படி இருக்கிறாய் என்று பார்க்கிறேன். காற்று கோபித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.

மழை சிரித்தது.

தமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில்.

காத்து கூட இல்லை, மழை நல்லா பெய்யுது, காத்து இல்லாம பேஞ்சா நல்லா பெய்யும்.

மக்களின் பேச்சை கேட்டு மழை வாய் விட்டு சிரித்தது.மக்கள் என்னை விரும்பும் வரை எனக்கென்ன கவலை.

வானிலை அறிக்கை… “இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்”.

இன்னும் மூணு நாளா? மழை விடாம கொட்டிகிட்டு இருக்கு. மக்கள் மெளனமாய் முணு முணுத்துக்கொண்டனர்.அதனால் மழைக்கு கேட்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில். அங்கங்கு மக்கள் பேசிக்கொண்டது அதன் காதுகளில் நன்றாக விழுந்தது.

சனியன் பிடிச்ச மழை ! எப்பத்தான் விடுமோ?

இதென்ன இந்த மக்கள், இப்படி பேசுகிறார்களே, வேதனையில் சுருங்கியது மழை, நான் உடனே போகிறேன் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தது.

மக்கள் அங்கங்கு பேசிக்கொண்டனர்.. அப்பா இன்னைக்குத்தான் வானம் வெறிச்சிருக்கு, சூரியன் வந்தா நல்லா இருக்கும்.

வழியில் அழுது கொண்டே செல்லும் மழையை பார்த்த சூரியன் எதற்கு அழுகிறாய்.

அந்த மக்கள் இப்பொழுது உன்னை கூப்பிடுகிறார்கள், உனக்கு சந்தோசம்தானே, அழுகையுடனே சொன்னது.சூரியன் சிரித்துக்கொண்டே என்னை மட்டும் நிரந்தரமாக கூப்பிடுகிறார்கள் என்று நினைக்காதே. நாளையே மறுபடியும் உன்னை கூப்பிடுவார்கள்.

ஆமாம் இப்படியே எத்தனை காலமாக இதை செய்து கொண்டிருக்கிறோம்

“இந்த உலகம் தோன்றிய காலம் முதல் நம் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம்”

எப்பொழுதும் மனிதர்கள் இப்படித்தான் நினைப்பார்களா?

“மனிதன் தோன்றிய காலம்” முதல் தனக்கு தேவை எதுவோ அதை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்து பழகி இருக்கிறான்.

இயற்கையாகவே இருந்து வரும் நாம் நம்முடைய கடமையாக இதை செய்து கொண்டிருப்போம். நீர், நெருப்பு,ஆகாயம், இவைகளும் கூட இப்படித்தான் இருக்கின்றன. 

தொடர்புடைய சிறுகதைகள்
வரிசையாய் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றை உற்று நோக்கி கொண்டிருந்தேன் வீட்டுக்குள் போகலாமா? நம்மால் போக முடியுமா? இங்கிருந்து பார்க்கும்பொழுது முன்னறையில் இருந்த நாற்காலியில் அப்பா பேப்பர் படிப்பது கண்களுக்கு தெரிந்தது. கண்ணாடியை கழட்டி கழட்டி துடைத்து படிக்கிறார். பாவம் சாளேஸ்வரம், இந்த வயதுக்கு ...
மேலும் கதையை படிக்க...
ராசாராமன் என்னும் வியாபாரி கிளியூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தான். கிளியூர் சிறு ஊர், அங்குள்ள மக்கள் அப்பாவிகள். ஆனால் ராசாராமன் வியாபாரம் செய்வதில் படு புத்திசாலி. எப்பேர்பட்ட சரக்கையும் விற்று பணமாக்கி விடுவான். அந்த ஊரில் அவன் கடை மட்டுமே இருப்பதால் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் மாணவர்களின் கூட்டம் அதிகம் இருந்தது, நானும் என் மனைவி, பையன் மூவரும் மாறி மாறி மாணவர்கள் கேட்டதை எடுத்துக்-கொடுத்து களைத்து போய்விட்டோம். மணி ஒன்பது ஆகும்போது பள்ளி மணி அடித்து விடும், அதற்குள் நோட்டு புத்தகம், பேனா போன்ற பல ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம், கதவு தட தடவென தட்டப்பட்டது.வெளி அறையில் படுத்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்தவன் வேகமாக வந்து கதவை திறந்தேன். அதற்குள் உள் அறையில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியும் குழந்தைகளும் விழித்து என் பின்னால் நின்று கொண்டிருந்த்தை உணர்ந்தேன். கதவை ...
மேலும் கதையை படிக்க...
வணக்கம் சார்! குனிந்து எழுதிக்கொண்டிருநதவன் நிமிர்ந்து பார்தேன்.இளைஞன் ஒருவன் பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தான். நல்ல களையான முகம் என்ன வேணும்? புருவத்தை உயர்த்தி வினா தொடுத்தேன். உங்க படத்துல நல்ல கதை கதைவசனகர்த்தா தேடிக்கிட்டு இருக்கறதா கேள்விப்பட்டேன், உங்க நண்பர் பாரிதான் ...
மேலும் கதையை படிக்க...
அப்பா கொஞ்ச நாட்களாக சாப்பாடே சாப்பிடுவதில்லை, மனைவி ஆரம்பத்தில் சொல்லும்போது அசட்டையாக இருந்து விட்டேன். பின்னர் நானும் தொடர்ந்து கவனித்தேன். தொடர்ந்து ஒரு வாரமாக அரிசி சாப்பாட்டை அப்படியே ஒதுக்கி வைத்து விடுகிறார். ஏன் சாப்பிட மாட்டேனெங்கிறீர்கள் என்று கேட்டால் ப்ச்..ப்ச். ...
மேலும் கதையை படிக்க...
“ராஜேஷ்” எங்கஅம்மாவுக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுல எந்த ஆட்சேபணையும் இல்லை, அப்பா மட்டும்தான் இப்ப நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறாரு. வருத்தத்துடன் சொன்னா மாலா அடுத்த வாரம் யாரோ ஒரு பையன் என்னை பொண்ணு பாக்க வர்றானாம். உங்கப்பாதான் அவர் வசதிக்கு தகுந்த ...
மேலும் கதையை படிக்க...
ஹலோ…ஹலோ இது மதுமிதா ஹாஸ்பிடல்தானே? ஆமா நீங்க யாரு? நான் டாக்டர் சரவணன் கிட்ட பேசணும். எந்த சரவணன்? ஆர்தோ டாகடரா? இல்லை நெப்ராலஜி டாக்டரா? இந்த கிட்னி இதெல்லாம் பாப்ப்பாங்க இல்லை ! ஓ.. நெப்ராலஜி டாக்டரா ! ஆமா அவர்தான் கொஞ்சம் அவசரமா அவர்கூட ...
மேலும் கதையை படிக்க...
ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர். ராமுவும், ...
மேலும் கதையை படிக்க...
அந்த கடையின் கணக்குப்பிள்ளை ஏகாமபரம் அண்ணாச்சிக்கு இன்னைக்கு கோபமின்னா கோபம் இலேசுப்பட்ட கோபமில்ல, ஒரு பய அவருகிட்ட வாய கொடுக்க வரலை, அப்படி இருந்துச்சு அவர் முகம். யாரு போய் பேசறதுன்னு, பம்மிகிட்டு அந்தா இந்தான்னு மிரளுறானுங்க. என்னாச்சு இந்த அண்ணாச்சிக்கு? விசயம் ...
மேலும் கதையை படிக்க...
பெற்றோரிடம் அனுமதி கேட்கவேண்டும்
கலப்படம்
வேலைக்கு போக விரும்பிய மனைவி
தொடர்ந்த கதை
கதைவேண்டும்
அப்பாவின் வயல்
அந்த கால சினிமா காதல் கதை
எல்லாம் முடிந்த பின்
புத்திசாலி சகோதரர்கள்
தனக்கு மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)