Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

சுஜீத்தா

 

இரவு மணி பதினொன்று.

சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தார்.

இந்த நேரத்தில் இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் என்றான்.

அப்பெண் அதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை அமைதியாக இருந்தாள்.

இரவு நேரத்தில் நீங்கள் தனியாக இங்கே நிற்பது பாதுகாப்பனதல்ல என்பதை உணர்ந்து தான் எங்கே நீ நிற்கின்றீர்களா? என்றான். அதற்கும் அவளின் செவிகள் கேட்பதாகயில்லை.

அவன் சற்று நேரத்திலையே புரிந்துக் கொண்டு சற்று கோபமாக இதுயெல்லாம் தவறுயில்லையா??. வாழ எவ்வளவோ வழியிருக்கே அதையெல்லாம் விட்டு விட்டு, ஏன் இவ்வேலை செய்ய உங்களுக்கெல்லாம் எப்படி மனம் வருகிறதோ என்று எனக்கு தெரியவில்லை. அவன் சொல்லியதை கேட்டு,

அவள் சிரித்துக் கொண்டே, நான் என் வேலையை செய்கிறேன் இதில் என்ன இருக்கு.!

நீங்கள் அனைவரும் உங்களுக்காகத் தான் வேலை செய்கிறிர்களா…… என்ன..? இல்லைதானே…!

நான் எந்த மாதிரியான வேலையில் இருந்தால் உனக்கென்னவாயிற்று?. எல்லாம் பசினு வந்து விட்டால் போதும் பிச்சையெடுக்கக் கூட தயங்கமாட்டோம் இல்லையா. அதுபோன்றது தான் இதுவும்.

அவளின் நறுக்கென்ற பேச்சால் அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.. ஆனாலும் தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சரி நீங்கள் சொல்லுவது சரியாகவே இருந்தாலும் பரிவாயில்லை. நான் சொல்வதை சற்று யோசித்து பாருங்களேன் என்றான்.

அப்பெண் சிரித்துக் கொண்டே சொன்னாள், நான் என் உடலை விபச்சாரம் செய்கிறேன் அதில் என்ன தவறை கண்டீர்கள் நீங்கள்….?

இரவில் வேட்டையாட வரும் மிருகங்களுக்கு உணவாக நான் இருக்கிறேன் இதில் எந்த தவறும் தெரியவில்லையே..? .

நீங்கள் இப்போது நினைப்பதல்லாம் நான் இதைக் கொண்டுதான் என் வாழ்க்கையை வாழ்கிறேன் என்று..

நீங்கள் அப்படி நினைத்தாலும் அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது. அதுவே உண்மை தானென்றும் வைத்துக்கொள்ளுங்கள், இப்போது இங்கியிருந்து கேளப்புங்கள் அதுவே போதும் என்றாள்.

அவள் சொன்ன வார்த்தைகளால் அவனுக்கு மேலும் கோபத்தையையே வரவைத்தது..

உங்களிடம் இவ்வளவு நேரம் பேசியதே வீண்பேச்சு…!

நீ மனம் மாறி திருந்தினால் என்னால் இயன்ற உதவிகளை உனக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன்… ஆனால் அதை நீங்கள் ஏற்க தயாராக இல்லையே. இப்படி பணத்திற்கு அடிமையாக உடலை தருவது மிக கேவலம்..

குடும்பநிலை என்று எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை பொறுத்துக் கொண்டு போராட வேண்டுமே தவிற இந்த மாதிரியான வழிக்கு போகக்கூடாது. இப்போதும் ஒன்றுமில்லை நீ இதை கைவிடு உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றான்.

அப்பெண்ணின் முகம் வாடியது…

சிறிது மெளனத்திற்கு பின் சற்று நில்லுங்கள் நான் விபச்சாரிதான். ஆனால் நான் விபச்சாரியாக என் உடலை மட்டுமே விலைக்கோ தருகிறனே தவிற என் உணர்வையும் மனதையும் அல்ல.

என்னை பயன்படுத்துவரின் மனமும் அவர்களது உணர்வையும் சற்றேன்று புரிந்துக் கொள்வேன்..

ஆனாலும் எங்களை அவர்கள் ஒர் கருவியாக பயன்படுத்துகிறார்ளே தவிற உணர்ப்புரமாக அல்ல. காலை கடன்களை கழிப்பதை போன்றே, அவர்களின் காம உணர்வுகளை என் மீது தீணித்துவிட்டு செல்கிறார்கள். அதற்கு சன்மானம் பணம்.

பணத்தால் பெண்ணின் உடலை மட்டுமே விலைக்கு வாங்க முடியும். ஆனால் அவளின் பெண்மையின் உணர்வையும், அவளில் ஆழ்மனதையும் விலைக்கு வாங்க முடியாதே?

பெண் என்றாலே அவள் ஆண் சமுகத்திற்கு அடிமை அதிலும் அந்தரங்க விசயத்தில் பெண்ணின் விருப்பத்தை கேட்பதே கிடையாது காமத்தை அவள்மேல் கொட்டிவிட வேண்டும் தானே நினைக்கிறது.

அவள் செல்வதை அவன் கேட்டுக் அவனால் பதில் சொல்ல முடியாமல் யோசித்தான்..

அவளின் மனத்தில் இருப்பதை வெளிப்படையாக இப்போது தான் பேச தொடாங்கியுள்ளால் என்று நினைதுக்கொண்டே பேச்சை தொடருங்கள் என்றான்.

அவளும் மீண்டும் தனது பேச்சை தொடங்கினால் நான் அவ்வேலையின்போது வேட்டப்பட்ட ஓர் மரத்தின் துண்டுகளைப் போல்தான் இருப்னே தவிற எனது உணர்வுகளுடன் தழுதல்கள் இருந்ததில்லை….

மர கரியை மீண்டும் நெருப்பாக்கி அதில் குளிர்காய்யவே நினைப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள் நான் அதில் சாம்பலாக மாறும் வரையிலும் என்னை விடாது இந்த சமுகம்.

மனம் வெறுத்து ஏன்தான் இந்த உயிர் நம் உடலில் உள்ளதோ என்ற மனக்கவலையில் சவம் போல் கிடப்பேன்

யார் எவ்வளவு விலை கொடுத்தாலும் ஒரு பெண்ணின் மனதையும் அவளின் உணர்வையும் விலைக்கு வாங்க முடியாது. என்பதை எப்போது தான் இந்த சமுதாயம் புரிந்துக்கொள்ளுமோ அது எப்போது நடக்குமோ….!

ஒரு பெண்ணை ஆண் புரிந்துக் கொண்டால் மட்டும் போதாது. அவளின் ஆசைகள் என்ன அவளின் இலட்சியம் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு அவளுக்கான மனத்தில் அவளை சுதந்திரமாக வாழ விட வேண்டும்.

அப்போது தான் பெண்களின் திறமை தெரியும்..

நீங்கள் சொல்லலாம் உங்களை உங்களின் சுதந்திரத்தில் விட்டால் ஆண்களை மதிக்கமமாட்டீர்கள் என்று..

ஆனால் பெண் என்பவள் அப்படி அல்ல. மனைவி தாய் தங்கை என்று எல்லா சுழல்களையும் சந்திக்கிறால் அவளை நன்றாக புரிந்துக்கொண்டு சுதந்திரமான முடிவை அவளை எடுக்கவிட்டு பாருங்கள். அவளுக்கேன்ற ஒர் எல்லையை தீர்மானித்துக்கொண்டு.. அதில் தன்னை நம்பியவர்களுக்கு தூரோகம் எந்த சுழ்நிலையிலும் நாம் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்திளே வாழ்வாள்.

ஏதேனும் அவள் தவறு செய்தால் தன்னை மாய்த்துக்கொள்வாளே தவிற தன்னை புரிந்துக்கொண்ட ஆண்ணை எக்காரணத்தைக்கொண்டும் எதிர்த்து நடக்கமாட்டால்.

அவளின் இந்த பேச்சைக்கேட்டதும் செய்வதறியாது வாய்யடித்து நின்றான்.

பிறகு அவள் சொன்னாள் ஒரு மனிதனின் குணத்தை மற்றொரு மனிதன் எப்பொழுதும் புரிந்துக்கொள்ளவே முடியாது.

நமது கோபம் அழுகை வெறுப்பு பகை ஆகியற்றை காலம் நம் மனதை மாற்றுவதால் தான் ஒருவரை புரிந்துக்கொண்டதாக நமது மூலை நம் மனதை நம்ப வைத்து அதில் சுகம் துக்கம் ஆசை போன்ற வழிகளின் பின்னே மனிதர்களை பயணிக்க வைக்கிறது இதை தான் நாமும் ஒருவரை மற்றவர் புரிந்துக்கொள்கிறோம் என்கிறோம்.

அதில் இருக்கும் வேறுபாடுகளை யாரும் உணர்வதில்லையே என்றதும்.

அவனது முகம் இன்னும் வாடியது அவளின் திறமையான பேச்சை பார்த்து அவனது கண்கள் கலங்கிபோனது.

பின் அவன் சொன்னான் நீங்கள் மட்டும் நான் மனம் மாறுகிறேன் என்று சொல்லுங்கள் என் நிறுவனத்திலே உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன் நீங்கள் எந்த வேதனையுமின்றி நன்றாக வாழலாம் உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று வாக்குறுதியை அப்பெண்ணிடம் கொடுத்தான்.

அவளும் உங்கள் உதவிக்கு நன்றி.. ஆனால் இந்த உதவி எனக்கு வேண்டாம் என்றாள்.

சட்டென்று, ஏன்…? எதற்கு…? என் உதவி வேண்டாம் என்கிறாய் என்று கேட்டான்.

அவளோ இந்த உதவி எனக்கானதல்ல வேற்றொரு பெண்ணுக்கான உதவி…

அவனுக்கு இவள் சொல்வது புரியாமல் நின்றான்.

என்னை மன்னியுங்கள்

நீங்கள் நினைக்கும் விபச்சாரி பெண் நான் அல்ல… இதோ இங்கு நிற்கிறோமே இந்த சாலையின் ஒரத்தில் அதோ தெரிகிறதே ஒரு மரம். அந்த மரத்தடியில் தான் நான் எனது கணவன் குழந்தையும் தங்குகிறோம்.

பிழைப்பிற்க்காக சொந்த ஊரை விட்டு இங்கு அனாதையாக இந்தச் சாலையில் எங்களின் வாழ்க்கையை தள்ளுகிறோம்.

பகலில் கூலித் தொழிலாலியாக கிடைத்த வேலையை இருவரும் ஒன்றாக செய்துவிட்டு வருவோம். இன்று என் கணவர் ஒரு பக்கமும் என்னை ஒரு பக்கமும் வேலைக்கு போகவேண்டியதாய்யுற்று. அதனால் தான் நான் இங்கே வந்து நின்று பார்த்தேன் என் கணவர் வருகிறரா இல்லையா என்று.

இங்கே இரண்டு மாதங்களாகவே ஒரு பெண் இரவில் காரில் வருவாள் போவாள் நானும் பெரிய பணக்காரிபோலும் என்று நினைத்தேன்…

ஆனால் நேற்று அவள் நடந்தே வந்தால் அப்போது நான் கேட்டேன் ஏன்மா நடந்து வறிங்க கார்யில்லையா…. என்றேன் அப்போது அவள் இல்லை அக்கா…

ம்ம்ம்ம்… ஆமாம் உங்களுக்கு எப்படி என்னை தெரியும் நான் காரில் தான் போவேன் என்று என்னை கேட்டாள்.

அதற்கு நான் சொன்னேன் அதோ ஒரு மரம் இருக்கிறதில்லையா அந்த மரத்தடியில் தான் நாங்கள் தங்குகிறோம்.

நீ தினமும் இரவில் காரில் போவதும் வருவதுமாக இருப்பாய் அதை நாங்கள் அப்போது பார்த்திருக்கிறோம். ஆனால் நாங்கள் இருப்பதை நீ பார்க்கமாட்டாய் நீ சோர்வா எந்த பக்கமும் பார்க்காமல் சென்றுவிடுவாய் …. என்றதும் சற்று யோசித்துவிட்டு…

அவளின் கண்கள் கலங்கி அழுதுவிட்டால் நான் விபச்சாரி அக்கா என்று கதறிவிட்டாள்.

அவள் சொன்னதும் நான் அதிர்ச்சியற்றேன்.

அவளிடம் கேட்டேன் ஏன்மா என்னாச்சி எதற்கு நீ இப்படி அழுகிறாய் கொஞ்சம் பொறுமையாக இரு அழதே என்று மனத்திற்கு ஆருதல்களை சொன்னேன். பின் கண்கள் கலங்கியபடியே என்னிடம் அவளின் மனதில் உள்ளதை என்னோடு பகிர்ந்து கொண்டாள்.

அவள் நம்பிய ஒருவனால் ஏமாற்றப்பட்டு அவனது நண்பர்கள் என்று பலரை அறிமுகப் படுத்தி அவளை பற்றி முழு விவரங்களையும் பகிர்ந்து கட்டாயமாக அவள் மீது காமத்தை திணித்துயுள்ளார்கள்.

அப்போது இருந்த உயிர் பயம் அவள் குடும்பத்தின் நிலை என்று அவளின் மனம் இப்படி பட்ட நிலைக்கு தள்ளிவிட்டது போலும். அதிலும் அவள் முழுமையாக நம்பியவனே வெறும் காமத்திற்காக தன்னோடு பழகியதை நினைத்தும் மனம் வெறுத்து பேசினால்.

அவள் என்னிடம் சொன்னதைதான் இப்பொழுது நான் உங்களின் சொன்னேன் தம்பி.

அவள் அதிலிருந்து விடுபடவே நினைக்கிறாள். ஆனால் இந்த சமுகம் அவளை விடுவதாக இல்லை. ஆனால் இப்போது அவளுக்கான மாற்றம் உங்கள் முலமாக மாறபோகிறது என்ற நம்பிக்கை நீ பேசும் வார்த்தையில் நான் தெரிந்துக்கொண்டேன் என்றால் அவள்.

இனி அவளின் மனம்போல் வாழ்க்கை கிடைத்தாலே போதும்

அவன் சற்றும் எதிர்பார்க்காத அவளின் இந்த வார்த்தைகளால் அப்படியே அதிர்வுற்றான்.

அந்த பெண்ணின் முகவரியை தருகிறேன் நீங்கள் அவளை சந்தித்து பேசுங்கள் என்றாள். ஆனால் அவன் இல்லை இல்லை வேண்டாம்..

அவர்களை நீங்களே அழைத்து வாருங்கள் அப்பெண்ணின் வாழ்க்கைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இனி நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

அதற்கு அப்பெண்ணும் சரி என்று சொன்னால்.

பின் நாம் பேசிக்கொண்டே இருந்துவிட்டோம் உங்கள் பெயர் என்ன தம்பி..

என் பெயர் ராஜேஷ் ஒர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.. அக்கா உங்களின் பெயர்..

என் பெயர் மீனா தம்பி…

சரி நீங்கள் சொன்ன பெண்ணின் பெயரை சொல்லவே இல்லையே அக்கா.

ம்ம்ம்.ம்ம்ம்…. அவள் பெயரா…

“சுஜீத்தா”

சரி தம்பி என் குழந்தை தனிகா இருப்பான் என் கணவரும் வந்துவிடுவார் நான் போகிறேன். இரல் ஒரு பெண்ணை தனியாக பார்த்ததும் அவளை பற்றி எதுவும் தெரியாமல் நீங்களாகவே ஒர் முடிவை எடுத்துவிடாதீர்கள். நீங்கள் எனக்கு சற்று நேரத்தில் கொடுத்த விபச்சாரி பட்டத்தை போன்று தான் இந்த சமுகமும் பெண்களை புரிந்துக் கொள்ளாமல் அடிமையாக வைத்துக்கொள்ள வழி செய்துவிடுகிறது என்றால் அவள்.

பின் ராஜேஷ் நினனத்தான் நம் எண்ணங்களையும் பெண்ணின் மீதான பார்வையுமே மாற்ற வேண்டுமே தவிற பெண் அல்ல என்பதை உணர்ந்தான்.

இனி நாம் மற்றவர்களை பற்றி தெரியாமல் நாமகவே ஒர் முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதை மனதில் தீர்மானித்தான் ராஜேஷ். 

தொடர்புடைய சிறுகதைகள்
குரங்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜா குரங்கு தீடிறென்று இறந்துப் போனதால். அந்த கூட்டத்தை வழி நடத்த சரியான தலைமை இல்லாமல் திண்டாடி போனது எல்லா குரங்குகளும் தனக்கேனே ஒரு குழுக்களை அமைத்துக் கொண்டும் மற்ற குரங்களுடன் பிரிவுகளை ஏற்படுத்தியது. இதை கவனித்த ...
மேலும் கதையை படிக்க...
1960ஆம் ஆண்டு செவ்வழகியாள் மறக்கமுடியாத வருடம். செழுமையான பசுமை வளம் கொண்ட நிலத்தில் நெல் மணி அரும்பை போன்று செவ்வழகி எட்டு மாத கருவை சுமக்கிறாள்.. அவளது வயிற்றில் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் உணர்ந்து தானும் சிறுவயதில் என் அன்னையின் வயிற்றில் இப்படி ...
மேலும் கதையை படிக்க...
கணேஷ் தாத்தா பெரிய முறுக்கு மீசையும், கம்பீரம் குறையாத குரலோடு, பார்ப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் திசைத்திருப்பம் உடற்கட்டமைப்பு கொண்டிருந்தார். ஊரில் கணேஷ் தாத்தாவை மில்ட்ரி மீசை என்றே எல்லோரும் அழைப்பார்கள். அவரின் இளம் வயதில் இருக்கும் போதுக்கூட மீசையை பெரியதாகவே வைத்திருந்தாராம். ...
மேலும் கதையை படிக்க...
ஏய்.... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி....வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி எனும் சினிமா பாடல் ஒடிக் கொண்டிருந்தது அந்த பாடலை வாயசைத்தபடியே கார்ரை ஒட்டி வந்தான் மகேஷ் கொஞ்சம் இந்த பாட்டோட ...
மேலும் கதையை படிக்க...
ஒருவர் மலைகளை பார்வையிட சுற்றுல்லா வந்தார். அவர் மலைகள் மீது வெண்புகை மேகங்கள் மலையை முட்டி மோதுகின்ற அழகான காட்சிகளை பார்த்துக் கொண்டே சென்றார் அப்பொழது எதிர்ப் பாராதவிதமாக அவர் கால்கள் நழுவின மலை மேலிருந்து தவறி கீழே விழத் தொடங்கினான். இதை ...
மேலும் கதையை படிக்க...
என்னொட முதல் மாச சம்பளம் வந்தவுன் அம்மாக்கிட்ட கொடுத்தேன் அந்த பணத்த அம்மா வாங்கி அதுல இருந்து 1000ரூவாய் எடுத்து இது உன்னோட முதல் சம்பாதியம் நல்ல வழியில தான் முதல்ல செலவு பண்ணணும் அதனால நீ சாமிக்கு பூஜை பண்ணிவிடலாம் ...
மேலும் கதையை படிக்க...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலையார் கோயில் இராஜாகோபுரம் எதிர் தெருவே பூ கடைகளிலும் தேங்காய் கடைகளிலும் கூட்டம் எப்பொழுதுமே இருக்கும். அண்ணாமலையாருக்கு பூஜை செய்ய தேவையானவற்றை வாங்க வேண்டுமல்லவா. அதில் சுரேஷ் தினமும் அண்ணாமலையாரை காலையில் தரிசனம் செய்வதை தனது ...
மேலும் கதையை படிக்க...
சிறுதும் சுருக்காத விழிகள் ஏக்கம் நிறைந்த மனசுடன் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் தனது 20வருட வெளிநாட்டு வாழ்க்கையை முடிந்துக் கொண்டு சொந்த கிராமத்தை பார்க்கும் மகிழ்ச்சியில் நவீன் வருகிறான். இதுவரையிலும் செல்போன் விடியோ காலில் மட்டுமே பார்த்த அம்மா அப்பா தம்பி பெரியப்பா ...
மேலும் கதையை படிக்க...
அம்மா நீ எப்போதும் என்னுடனே இருக்க வேண்டும் என்பதனை சொல்லாமல் அதை உணர்வு புர்வமாக கட்டியனைத்து காட்டுவாள் திவ்யா... மேரி கணவனை இழந்த நிலையிலும் தன்னபிக்கையுடன் அவளின் குழந்தை திவ்யாவை நன்றாக வளர்க்க விரும்பினால் அதைப் போன்றே திவ்யாவை வளர்த்தும் வந்தால்.. திவ்யா பள்ளிக்கும் ...
மேலும் கதையை படிக்க...
குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாகம் ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணதில் இருந்தான். கல்லூரியில் நன்றாக எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவன் ...
மேலும் கதையை படிக்க...
ஏன் காட்டிற்கு சிங்கம் மட்டுமே தான் ராஜா
மனைவி
மீசை தாத்தா
எது காதல்?
உணர்வே கடவுள்
கல்வெட்டு
அற்புதம்மாள்
எது வளர்ச்சி?
அகழி
இரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)