சிலை – ஒரு பக்க கதை

 

ஒரு சனிக்கிழமை அதிகாலை. தந்தையும், மகனும் சாலையோரம் நடந்துசென்று கொண்டிருந்தனர். சிறுவன் கேள்விகளாய் கேட்டு கொண்டே நடந்தான்.

“அப்பா.. ஏம்ப்பா காந்தி தாத்தா சிலைய நடுரோட்டுல வச்சிருக்காங்க”

“அவரு நம்ம இந்தியாவுக்கு வெள்ளைக்காரங்களோட போராடி சுதந்திரம் வாங்கி தந்தாரில்ல…நாட்டுக்கு நல்லது செஞ்சவர். அதனால அவருக்கு மரியாத செய்ய, மக்கள் மறக்காம இருக்கவும் சிலை வச்சிருக்காங்க”

“இல்லப்பா… எனக்கு பிடிக்கல”

“ஏண்டா கண்ணு?”

“பாவம்பா…அவரு சட்டை கூட போடல. ஆனா வெயில்ல நிக்கணும், மழையிலையும் நிக்கணும். பல நேரம் காக்கா குருவியெல்லாம் அவர் தலையில உட்கார்ந்து டூ பாத்ரூம் போயிடுது. நாட்டுக்கு நல்லது செஞ்சார்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்குப்பா இந்த தண்டனை!”

தந்தையிடம் பதில் இல்லை. 

தொடர்புடைய சிறுகதைகள்
சேலம் ஜில்லாவில் சங்ககிரி துர்க்கம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. அங்கே பிறந்தவர் எம் பெருமான் கவிராயர் என்பவர். அவர் ஆயர் குலத்தில் உதித்தவர். இளமைக் காலத்தில் அவர் தமிழ் நாடு முழுவதும் பிரயாணம் செய்து பாண்டி நாட்டில் சில காலம் ...
மேலும் கதையை படிக்க...
விநாயகர் படத்தருகில் இருந்த வெளிவாசல் லைட்டுக்குரிய சுவிட்சை ‘ஆன்’ செய்து விட்டு, சுவாமிநாதன் , வீட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அப்போது அங்கிருந்த நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. என்ன இந்த நேரத்திலே நாய் கொரைக்குதுன்னு ...
மேலும் கதையை படிக்க...
வணிகவரி அலுவலகத்தில் இருந்து அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி ரெண்டு லட்சம் சொச்சம் வரிபாக்கி கட்ட வேண்டியிருக்குது,” என்று சொன்னான். அலட்சியமாக சொன்னவன், பவுச்சை உடைச்சுப் "பாக்குத்தூளை” இடது கைப் பாதத்தில் போட்டு, வலது பெருவிரலை வைத்து நன்றாக நசியம் பண்ணி, தட்டி ...
மேலும் கதையை படிக்க...
ஆற்றங்கரையில் அன்று அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் சகோதரர்கள் பயிர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கான நிலத்தில் உழைத்து களைத்து களித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அவர்கள் வழிபடுவதெற்கென எந்த தெய்வத்தையும் அவர்களின் முன்னோர்கள் கை காட்டிச் செல்லவில்லை. இப்படியாக இருந்த காலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
தனசேகர் ராணுவத்தில் 20 ஆண்டு சேவையை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வசதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் தன் மனைவியுடன் ஷாப்பிங் சென்றவன், காரை ஷாப்பிங் மாலுக்குள் நிறுத்தாமல், கடைக்கு வெளியே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வந்தான். இன்னொரு முறை ...
மேலும் கதையை படிக்க...
பூங்கோதை
மகராசனாய் இரு !
ஒட்டுண்ணிகள்
பக்ஷிகளின் தேசம்
மரியாதை – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)