சிபி நாயர் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,265 
 

கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும்.

விஷயம் ஒன்றும் பிரமாதமானதில்லை. என் தம்பி ஒரு மலையாளத் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிான். நான் தாய்லாந்தில் வறுத்த மீன் விற்று அனுப்புகி பணத்தில் நடக்கி காரியம் அது. முண்டும் பிளவுஸ÷ம் தரித்த சுந்தரிகள், தழையத் தழைய வேட்டியும் மடித்துவிட்ட முழுக்கைச் சட்டையும் அணிந்து காயல் புங்களில் மெல்ல நடக்கும் கதாநாயகர்களை எண்ணி மார்பு விம்ம உருக வைக்கி வேலை. மலையாளப் படங்கள் அந்தக் காலகட்டத்தைக் கடந்து ஜிகினாவிலும் பளபளாவிலும் சங்கமமாகி விட்டாலும் அவன் விடாப்பிடியாக வருடத்துக்கு ஒரு படம் இந்த ரீதியில் எடுத்து விடுகிான். அவற்ûயும் பார்க்க ஆட்கள் இருக்கிார்கள் என்பதற்கு திருப்புணித்துரையிலிருந்தும், செருக்கோலப்புழாவிலிருந்தும் யாராவது எழுதுகி கடிதங்களும் அந்தப் படங்கள் அவ்வப்போது வாங்குகி விருதுகளும், கொஞ்சம் போல லாபம் வர, அவற்û சர்க்காருக்கு விற்றுப் பாதி ராத்திரியில் தொலைக்காட்சியில் அவை திரையிடப்படுவதும் அத்தாட்சி.

இப்போது எடுக்கி படத்தில் ஒரு கோவில் தேவஸ்தான ஊழியனின் பெண்களும் அவர்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளும் அலசப்பட்டு, சுமூகமாகத் தீர்க்கப்படுகின்ன. படத்தில் ஒரு காட்சியில் ரயிலில் டிக்கெட் பரிசோதகராகக் கடவுள் வருகிார். டிக்கட் பரிசோதகரைப் படத்தில் காட்டாவிட்டாலும், குரலைத் தர வேண்டியிருக்கிது. அதற்கு யார் குரல் பொருந்தும் என்று ஏகப்பட்ட விவாதம் நடத்தி, ஒன்றும் பிரயோஜனப்படாமல், மேலமங்கலத்திலிருந்து நம்பூத்திரியைக் கூட்டிக் கொண்டு வந்து பிரச்னம் வைத்துப் பார்த்தோம்.

காலையில் எல்லோரும் இட்டிலியும் வடகறியும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் கொஞ்சம் முன்னால் முடித்து விட்டுக் கை கழுவி வெற்றிலை போட வெளியே போன நம்பூத்திரி அவசரமாகத் திரும்பி வந்து, கையில் எடுத்த வெற்றிலையைக் காட்டினார். அதில் சுண்ணாம்புப் பூச்சுக்கு உள்ளே மசங்கலாக சிபி நாயர் உருவம் தெரிந்தது.

இவனைக் கொண்டு வந்தால் பிரச்சனை தீர்ந்து விடும் þநம்பூத்திரி இன்னொரு தடவை பார்ப்பதற்குள் வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக் கொண்டுவிட்டார்.

நான் போனபோது சிபி நாயர் மைதானத்தில் ஒரு ஓரமாக ஆடிக் கொண்டிருந்தான். கதகளி வேஷத்தில், அதுவும் ராட்சச ஒப்பனையில் இருந்தான். முன்னால் குட்டைப் பாவாடை அணிந்த நாலு இளம் பெண்களும் இறுக்கமான ஜீன்ஸில் மீசை மழித்த பையன்களும் குதிக்க, பின் வரிசையில் த்ரீ பீஸ் சூட் அணிந்த ஒரு நரைமீசைத் தாத்தா கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு மூச்சு வாங்க ஆடினார். அவர் கைத்தடி நாயரின் தலையை அவ்வப்போது பதம் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு பக்கத்திலும் யானைகளை நிறுத்திப் பாகர்கள் மேலே உட்கார்ந்து ஓட்டந்துள்ளல் போல இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன மொழி என்று புரிபடாமல் கீச்சுக் குரலில் ஏதோ பாட்டு சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒத்திகை முடிந்ததாகவும் அடுத்தது டேக்தான் என்றும் பெண்தன்மையோடு ஒரு நடு வயதுக்காரர் அறிவிக்க நாயர் யானைச் சாணத்தை மிதித்தபடி என் பக்கமாக வந்தான்.

வெளியே நிறுத்தியிருந்த கார் பக்கம் நடந்தோம். பொசுபொசுவென்று கதகளி பாவாடை பக்க வியர்த்து காரில் உட்கார்ந்து ஏசியைப் போடு என்ான். நான் காரைக் கிளப்பினேன். இல்லை, ஷøட்டிங் ஆரம்பிக்கப் போகிது. மறுபடி ஆடப் போக வேண்டும். சொன்னபடி காற்றுக்கு முதுகை வளைத்துக் கொடுத்தான்.

சாப்பிட ஏதாவது எடுத்து வந்திருக்கிாயா? இல்லை என்úன். காப்பி மட்டும் பிளாஸ்கில் உண்டு. காபி பிளாஸ்கை எடுத்தேன். வெளியே விசில் சத்தம்.

ஆடிவிட்டு வந்து காப்பி குடிக்கிúன்.

குழப்பமான சத்தத்தோடு பாட்டு திரும்ப ஒலிக்க, பின்னால் புகையைக் கிளப்பிக் கொண்டு நாலு பேர் தடதடவென்று ஓய, ஒரு நிமிடம் அந்தக் கூட்டம் ஆடி ஓய்ந்தது.

நாயர் கதகளி கோப்பு என் ஒப்பனைப் பெட்டியோடும் பிளாஸ்டிக் பையில் துணிகளோடும் காரில் வந்து உட்கார்ந்தான். சினிமாவா என்று கேட்டேன். ஆணுû விளம்பரப் படமாம். அவன் ஒரு கோப்பை பிளாஸ்கிலிருந்து சூடாகக் காப்பி குடித்தான். இந்த ஒப்பனையைக் கலைத்து விட்டு கால்சராயையும் சட்டையையும் அணிந்து கொள்ள வேண்டும் என்ான். அப்பும் பார்த்துக் கொள்ளலாம். இப்போது கடவுள் காத்திருக்கிார். காரைக் கிளப்பினேன்.

அம்பலத்தில் நிலவிளக்கு கொளுத்தி வைத்து ராத்திரிக்கு ஆடும் ஆட்டத்தை ஆணுûக்கு ஆடலாமா? நான் கேட்டபோது நாயர் சுருட்டுப் பற் வைத்தபடி சிரித்தான். ஜீவிக்க வேண்டும் என்ான். கார் ஏர்கண்டிஷனரை நிறுத்தி, நான் ஜன்னலைத் திந்தேன். கதகளி கோப்பிலிருந்து ஏதோ குரல் கேட்டது. என் குருநாதர் குஞ்சு குருப்பு என்ான் சிபி நாயர். அவர் இந்து போய் முப்பது வருடமாகிது. அவருடைய பெட்டிதான் இது. குருநாதர் குரல் வண்ணங்களோடும் தைலங்களோடும் கலந்து இங்கேயே இருக்கிது என்ான்.

மானக்கேடு என்ார் குரு. எனக்கும் கேட்டது. நாயர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தான். பெட்டியைச் செல்லமாக அணைத்து மடியில் வைத்துக் கொண்டான்.

இரண்டு பக்கமும் வாகனங்கள் விரையும் பெருஞ்சாலையில் நாங்கள் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, கொஞ்சம் வண்டியை நிறுத்த முடியுமா என்று அவன் அவசரமாகக் கேட்டான். இந்தக் கடையில் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு வந்து விடுகிúன். பசிக்கிது. விடிகாலையில் எழுந்து ஒப்பனை தரித்து முடித்தவுடன் ஆட்டோவில் கூட்டிவந்து ஆணுûக்காக ஆட வைத்துவிட்டார்கள். அவசரத்தில் காலை ஆகாரம் செய்யமுடியவில்லை. அவன் இங்கிக் கொண்டான்.

நிலக்கடலை விற்கி பெண், நெல்லிக்காய் விற்கிவன் மற்றும் புராணக் கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து தலையில் கிரீடத்தோடு யாசகம் கேட்கி இரண்டுபேர் காரைச் சூழ்ந்துவிட்டு அப்பும் போனார்கள். கையில் தோல்பையோடு வந்த ஒருவன் சினிமாப் படம் எடுக்கி தொழிலில் இருக்கிாயா என்று என்னைக் கேட்டான். அந்தத் தகவலால் உனக்கு என்ன பிரயோஜனம்? நான் கேட்டேன். என்னிடம் நியை உபயோகிக்கத் தயாரான காட்சிகள் உண்டு. அவன் பையைத் திந்தபடி சொன்னான். பவைகள் கூட்டமாகப் பப்பது, சாவு வீட்டில் ஊதுபத்திப் புகை, சூரிய உதயத்தில் காலைக் கடனாகக் கழிக்கக் குத்த வைக்கிவன், கல்யாண வீட்டில் ஓடி நடக்கும் பெண்களின் கொலுசு அணிந்த பாதங்கள். மண்ணெண்ணெய் வண்டியில் அழகுக்காகச் சுற்றிய பூமாலை. இவற்றில் சிலவற்றில் வாடையைக் கூடப் படத்தில் பிடித்து வைத்திருக்கிúன்.

இப்போது தேவையில்லை. அப்பும் பார்க்கலாம் என்று தட்டிக் கழித்தேன். அவன் சட்டைப் பையில் தேடி ஓரங்களில் எண்ணெய்க்கûயோடு ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்தான். நான் அதைப் பார்க்க முற்பட்டபோது நாயர் திரும்ப வந்தான். வண்டி போகட்டும் என்ான்.

கதகளிப் பெட்டியிலிருந்து மொணமொணவென்று சத்தம். குரு அழுவதாகச் சொன்னான் நாயர். அவர் ஒரு நல்ல கலைஞராக இருந்தாராம். நல்ல இலக்கிய ரசிகரும் கூட. நாட்டு, உலக நினைப்புக்களும், கலையும் இலக்கியமும் மலினப்பட்டுப் போகிதும் அவரை ரொம்பவும் பாதிக்கிது. தன் சோகத்தை ஓசையெழுப்பாமல் பகிர்ந்து கொள்கிார் என்ான்.

பொட்டிப் பொட்டிக் கரையுன்னு. வீங்ஙி வீங்ஙிக் கரையுன்னு. விம்மி விம்மிக் கரையுன்னு. அவன் உணர்ச்சியில்லாத குரலில் சொன்னான். கவிதை போல தெரிந்தது. எனக்கும் இப்போது குருவின் அழுகைச் சத்தம் தெளிவாகக் கேட்கிது என்úன். சாகித்தியத்தின் சக்தி இதுதான். விருது பெற் எழுத்தாளர் போல அவன் குரலில் தீர்மானம் தெறித்தது.

என்ன விஷயமாக வந்திருக்கிாய்? நாயர் கேட்டான். கடவுள் விஷயமாக. நான் சொன்னதை உணர்ச்சியில்லாமல் கேட்டுக் கொண்டான். ஆண் கடவுள்தானே? ஆமாம். வயது ஏதாவது குரலில் தெரிய வேண்டுமா? அதெல்லாம் அங்கே போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்úன்.

ஒன்ாம் தரம் வாழைப்பழம். உடனே வயிற்ûக் காலியாக்க வேண்டும். இரண்டு நாளாக நடக்காது போன காரியம். இப்போது கைகூட நேரம் வந்திருக்கிது. நாயர் குரலில் அவசரமும் சந்தோஷமும் தெரிந்தன. நான் கடவுள் பற்றிச் சொன்னேன். மலச்சிக்கலோடோ, இல்லை கழிவûக்குப் போயே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தோடோ கொடுக்கும்போது கடவுள் குரலில் நம்பகத்தன்மை இருக்காது என்ான்.

என் ஓட்டல் அûக்குத்தான் போயாக வேண்டும். வண்டியைத் திருப்பினேன்.

அûயில் போனதும் அங்கே சுத்தம் செய்து கொண்டிருந்தததால் இன்னும் பத்து நிமிடத்தில் வரலாம் என்று சொன்னார்கள். நீச்சல் குளத்தின் பக்கத்தில் பத்து நிமிடம் இருக்க முடியுமா? சிபி நாயரின் கதகளி வேடத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி, வரவேற்பு இருக்கைப் பெண் அழகான ஆங்கிலத்தில் கேட்டபோது முடியாது என்று சொல்ல மனம் வரவில்லை. இங்கே பொதுக் கழிவû ஏதும் இருக்கிதா கேள் என்று நாயரிடம் சொன்னேன். அது அழகான பெண்களிடம் பேசத் தகுந்த விஷயம் இல்லை என்ான் அவன்.

நீச்சல் குளத்தின் பக்கத்தில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருந்து ஒரு கோப்பை பியர் ஆர்டர் கொடுத்துவிட்டு, கூடவே கொறிக்க சுட்ட அப்பளமும் கொண்டு வரச் சொன்னேன். நாயர் எப்போது என் அûக்குப் போகலாம் என் எதிர்பார்ப்போடு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கதகளி கோப்பை இன்னொரு பிளாஸ்டிக் நாற்காலியில் வைத்தான் அவன். பிளாஸ்டிக் பையிலிருந்து ஒரு சுருட்டு எடுத்துப் பற் வைத்துக்கொண்டான். வயிற்û வருடியபடியும், புகைத்தபடியும் அங்குமிங்கும் நடந்தான். நான் கடியாரத்தைப் பார்த்தேன். இவனைத் தேடி வந்த வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால், சாயந்திரம் ஊருக்குப் கிளம்பிவிடுவேன். இங்கே ஒட்டல் வாடகை வெறுமனே வீணாகிக் கொண்டிருக்கிது.

கதகளி வேடமும் சுருட்டுமாக அவனைப் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரன் கேமிராவும் கையுமாக வந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டான். நாயர் கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளிடம் காட்டும் புன்சிரிப்பைப் பொழிந்துகொண்டு வயிற்றுக் கலக்கத்தை ஒரு வினாடி மந்து, சரி என்ான். வெள்ளைக்காரன் கோணம் பார்க்கும்போது குளித்துக் கரையேறிய துரைசானி ஈரமாக வந்து நாயர் தோளை அணைத்தபடி நின்ாள். நாற்காலியில் வைத்த கதகளி கோப்பிலிருந்து கேட்ட இருமல் ஆட்சேபணை சொல்வதுபோல் இருந்தது.

போகலாம். வந்த காரியத்தை முடித்து விட்டு வா. நேரமாகிது. நாயரிடம் சொன்னேன். தோள்பட்டையில் வெள்ளைக்காரி நனைத்த இடத்தில் ஈரத்தை ஆர்வமாகப் பார்த்தபடி, இப்படியே இந்த ஒப்பனையோடே வரச் சொல்கிாயா என்ான். வயிற்ûக் காலி செய்துவிட்டு, குளித்து, என் உடுப்பை அணிந்து அரை நிமிடத்தில் வந்து விடுகிúனே.

பகல் வரைதான் ஒலிப்பதிவு அரங்கத்தை வாடகைக்கு எடுத்திருக்கிúாம். இப்போது அங்கே கற்பழிப்பு காட்சிக்குக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிார்கள். நீ போனால் அடுத்ததாகக் கடவுள் குரலைக் கொடுத்து விடலாம். மிஞ்சிப் போனால் பத்து நிமிடம். கடவுள் குரலில் டிக்கட்டைக் காட்டச் சொல்லிப் பயணிகளை விசாரிக்கவேண்டும். எட்டாம் எண் இருக்கையை இந்த அம்மாவுக்குக் கொடுத்திருக்கிúன். நீங்கள் பதினைந்துக்கு மாறுங்கள் என்று சொல்லவேண்டும். சாப்பாடு கொண்டு வரச்சொல்லும் வசதி இந்த வண்டியில் கிடையாது என்று அறிவிக்கவேண்டும் இவ்வளவுதான்.

சிபி நாயர் ஒரு வினாடி யோசித்தான். அப்பும் ஏதோ நினைத்துக் கொண்டவனாக, கதகளி ஒப்பனைப் பெட்டியும் என் உடைகளும் உன் அûயிலேயே இருக்கட்டும். சாயந்திரம் வந்து எடுத்துக் கொள்கிúன் என்ான். இதை வைத்து விட்டுக் கழிப்பûக்குப் போய்விட்டு வந்து விடுகிúன். அவன் போனபோது சுருட்டை நீச்சல் குளத்தில் விட்டெறிந்திருக்க வேண்டாம்.

நான் பியரைக் குடித்து முடிப்பதற்குள் அவன் சிரித்துக் கொண்டே வந்தான். அந்தப் பெண் உன் அûயில் நீ வைத்திருந்த லத்தீன் அமெரிக்க நாவலைப் புரட்டிக்கொண்டிருந்தாள் என்று சொன்னான். எந்தப் பெண்? ஓட்டல் அகைளைச் சுத்தம் செய்கி நீலச் சீருடை அணிந்த பெண். இதில் சிரிக்க என்ன இருக்கிது என்று கேட்டேன்.

கதகளியில் ராட்சச வேஷத்தோடு இப்படி நுழைந்ததுமே அவள் பயந்துபோய் அல ஆரம்பித்தது, நான் வேண்டாம் என்று சைகை செய்தபடி கழிவûக்குள் நுழைந்து கதவைச் சார்த்திக் கொண்டபோது சிரிப்பாக மாறியிருந்தது. வெளியே வந்தபோதும் அவள் சிரிப்பு இன்னும் வலுவாகி, மின்சாரத் துடைப்பானை இயக்கியபடி என்னையே பார்த்தாள். நானும் சிரித்தபடியே இங்கே வந்தபோது, தேவாசுர யுத்தத்தின் இடையில் யாருக்காவது அற்ப சங்கைக்கு ஒதுங்க வேண்டி வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று நினைப்பு வந்தது. நாயர் சிரிப்பு அடங்காமலேயே வெறும் சுருட்டை வாயில் வைத்து மென்படி என் தோளில் தட்டினான். போகலாம் வா.

இப்படியே போய் இங்கினால் கடவுளுக்குக் கோமாளிக் குரல்தான் இன்ûக்கு.

ஒலிப்பதிவு அரங்கில் எனக்காகக் காத்திருந்தார்கள். நீங்கள் காரில் வருவதை இவர்களுக்குக் காட்டினேன். நம்பூத்திரி வெற்றிலைச் செல்லத்தைத் திந்தபடி சொன்னார். நாயர் வினயமாக அவரைச் சேவித்தான். நீ கழிவûக்குப் போனதைக் கூடப் பார்த்தேன். நம்பூத்திரி அவனை அனுக்ரஹித்தபோது சொன்னது இது. ஒவ்வொரு தடவை வெற்றிலை முறுக்கும்போதும் ஒவ்வொரு காட்சி. பக்கத்தில் காதில் மாட்டிய ஒலிவாங்கியோடு இருந்த ஒலிப்பதிவாளர் தோளைக் குலுக்கியபடி முனகினார். நம்பூத்திரி சகஜமாக சொன்னார்.

– நவம்பர் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *