சரியான நேரம்! – ஒரு பக்க கதை

 

தமிழ் நடிகர்களிலேயே பத்து கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் மிக பிரபலமான நடிகர் அவர்!

அவருடைய ஈ.சி.ஆர். ரோடு,.பால வாக்கம் பண்னை வீடுகள், தி.நகர், வேளச்சேரியில் உள்ள பங்களாக்கள், சிட்டியில் உள்ள அவருடைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமானத்துறை அதிகாரிகளால் ரெய்டு!

சென்னை நகரமே அமளி துமளிப் பட்டது! தெருவெங்கும் அவருடைய ரசிகர் கூட்டம்! திரும்பிய பக்கமெல்லாம் இதே பேச்சு!

திடீர் ரெய்டு!. ஹீரோவால் எவ்வித முன்னேற்பாடும் செய்ய முடியாமல் போய் விட்டது!

கோடிக்கணக்கில் ரொக்கம், லாக்கரில் நிறைய தங்க கட்டிகள், மனை நிலம், பங்களாக்கள் வாங்கிய பத்திரங்கள் அனைத்தையும் வருமானத் துறை அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போனார்கள்!

தலைமை அதிகாரியைச் சுற்றிலும் பத்திரிகை, டி.வி. சேனல் நிருபர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்கள்.

“சார்!….ரெய்டு நடத்த இது தான் சரியான நேரம் என்று உங்களுக்கு எப்படித் தெரிந்தது?….உங்களுக்கு யார் தகவல் கொடுத்தாங்க?…”

“அவரே தான் சொன்னார்!…” என்று சொல்லி விட்டுச் சிரித்தார் அந்தக் குறும்புக்கார அதிகாரி!

“என்ன சார்…தமாஷ் பண்ணறீங்க?….” என்றார் ஒரு நிருபர் எரிச்சலோடு!

“உண்மையைத் தான் சொல்லறேன்! கறுப்பு பணம் அதிகம் சேர்ந்திட்டா நடிகர்களால் சும்மா இருக்க முடியாது! …..தங்களிடம் இருக்கும் கறுப்பு பணத்திற்கு ஏற்ப எம்.எல்.ஏ.,எம்.பி.,முதல்வர் ஆசை வந்து விடும்! அந்த ஆசைகளை அவர்களே தங்கள் வாயால் சொல்லும் நேரம் தான், ரெய்டு நடத்த சரியான நேரம்! வரும் பாராளும் மன்றத் தேர்தலில் அவரே போட்டி இடப் போவதாகவும், அதற்காக அவருடைய ரசிகர் மன்றங்களைக் கூட்டி அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி அறிவிப்பு செய்திருந்தார்!..கறுப்பு பணம் அதிகம் சேர்ந்து விட்டதென்பதைப் புரிந்து கொண்டு, நாங்க உடனே ரெய்டுக்கு ஏற்பாடு செய்தோம்!” என்றார் கூலாக!.

- 11-9-2013 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்னொவா கார் சுமங்கலி அபார்ட்மெண்ட் முன் நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் தோற்றம் கண்ணியமாக இருந்தது. அரசு அதிகாரிகள் என்று பார்த்தவுடனேயே அந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி புரிந்து கொண்டான். “ சார்!...நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?...” “ இன்கம் டேக்ஸ் ஆபிஸர் சத்திய நாராயணனை பார்க்க ...
மேலும் கதையை படிக்க...
முத்தமிழ் இலக்கிய வட்டம் இந்த ஆண்டு நாவலாசிரியர் புரட்சி வேந்தன் அவர்களின் ‘துணையா?...இணையா?..’ என்ற நாவலை பரிசுக்குரிய நாவலாகத் தேர்வு செய்துள்ளது!- என்ற செய்தியை பத்திரிகையில் கட்டம் கட்டி வெளியிட்டிருந்தார்கள்! அந்த செய்தித் தாளை எடுத்துக் கொண்டு தமிழ் செல்வி தன் கணவன் ...
மேலும் கதையை படிக்க...
படிப்பு, நேர்மையான உழைப்பு எதுவுமே இல்லாமல் ஒரு மனிதன் பணம், பதவி, அதிகாரத்தோடு, தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏற்ற ‘தொழில்’ அரசியல் தான்! அதற்கும் பொய்யை மற்றவர்கள் நம்பும்படி சொல்லும் ஒரு சாமார்த்தியம் வேண்டும்! அது ராமசாமிக்கு இல்லை. அதனால் தான் ...
மேலும் கதையை படிக்க...
மார்கழி மாதம் பிறந்தாலும் பிறந்தது. சாந்திக்கு அதே வேலையாகப் போய்விட்டது.!எல்லோரும் படுத்தவுடன், இரவு பனிரண்டு மணிக்கு வாசல் லைட்டைப் போட்டுக் கொண்டு கோலம் போட ஆரம்பித்தால் அவள் கோலம் போட்டு முடிக்க இரவு மணி மூன்றாகி விடும்.ரோடு முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
“ ஏய்!...சித்ரா!...உனக்கு எத்தனை தடவை சொல்லறது… ‘பாத் ரூம்’ லிருந்து குளிச்சிட்டு வரும் பொழுது ஹீட்டரை ஆப் செய்திட்டு வர வேண்டுமென்று?...”என்று சத்தம் போட்டாள் சித்ராவின் தாய் விமலா. “ அம்மா!..மறந்து போச்சு!..அதற்கு எதற்கு இப்படி கத்தறே?...” “ ஏண்டி ஹாலிருந்து எழுந்து வரும் ...
மேலும் கதையை படிக்க...
அறியாத வயசில் செய்த புரியாத தவறுகள்!
எழுத்தாளனின் மனைவி!
அரசியல்வாதி!
பட்டால் தான் தெரியுமா?
அந்தரங்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)