சயின்ஸ் டீச்சர்! – ஒரு பக்க கதை

 

“சார் என்னைத் தெரியுதா?’ தன்னுடைய ஆரம்பக்கல்வி ஆசிரியர் முத்துராமனிடம் வினவினான் பொற்செழியன்.

“தெரியலையேப்பா!’

“நான்தான் சார் பொற்செழியன், எட்டுல இருந்து பத்துவரை நீங்கதான் சார் எனக்கு சயின்ஸ் டீச்சர். எப்பவும் நீ மாடு மேய்க்கத் தாண்டா லாயக்குன்னு என்னைத் திட்டிட்டே இருப்பீங்களே, ஞாபகம் இருக்குதா சார்?’

“ஓ நீயாப்பா! இப்ப ஞாபகம் வருது, நான் அப்படித் திட்டுனது நீ நல்லா படிக்கணுமுன்னு தாம்பா, மனசுல எதுவும் வச்சுக்கிட்டு இல்லை, இப்ப என்ன பண்ணிட்டு இருக்கிற?’ தன் முன்னாள் மாணவனை வினவினார்.

“நீங்க சொன்ன மாதிரி மாடுதான் மேய்க்கிறேன் சார்!’

“என்னப்பா சொல்லுற?’ அதிர்ச்சியாய் வினவினார்.

“மாடுதான் சார் மேய்க்கிறேன்! ஆனா கொஞ்சம் பிரமாண்டமா, வேளாண் துறையில் முதுநிலை படிப்பு முடிச்சிட்டு பெரிய “டயரிஃபார்ம்’ ஒண்ணு வச்சிருக்கிறேன். அதுல ஆயிரம் கால்நடைகள் இருக்குது சார்’ என்றவனை பெருமையாய் பார்த்தார் ஆசிரியர் முத்துராமன்.

- வி. சகிதா முருகன் (8-8-12) 

தொடர்புடைய சிறுகதைகள்
``மிஸ்டர் குப்புசாமி, நீங்க செய்றது உங்களுக்கே நல்லாயிருக்கா? நினைச்ச நேரத்துக்கு வர்றதுக்கு இது ஒண்ணும் சத்திரம் இல்லை, ஆபீஸ். தெரிஞ்சுதா?'' காலையில் அலுவலகத்துக்குத் தாமதமாக வந்தவனை ஹெட்கிளார்க் முறைத்துப் பார்த்தார். அவன், பொங்கும் வியர்வையோடு, உடம்பைக் குறுக்கிக் கொண்டு பயபக்தியோடு நின்றான். தன் கஷ்டங்களைச் ...
மேலும் கதையை படிக்க...
நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) ...
மேலும் கதையை படிக்க...
இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை. அமைச்சர் ஒருவரின் தலை திடீரென மொட்டையாகி விட்டதுதான். நேற்றுவரை அவருடையத் தலையில் நீண்ட சுருள் முடி அடர்ந்து இருந்தது. ஆனால் இரவோடு ...
மேலும் கதையை படிக்க...
"ஹெலோ வா.. வா." டி.வியை அணைத்துவிட்டு என்பக்கம் திரும்பினார் வாத்தியார். வாத்தியாருக்கு 40 வயதிருக்கும். நாகர்கோவில் காலேஜ் ப்ரொஃபெசர். ஊர்ல எவனுக்குமே ப்ரொபசர்னு சொல்லத் தெரியல. எடுத்துச் சொன்னா "அவரு பாடந்தானே எடுக்காரு?"ண்ணு சண்டைக்கு வருவாங்க. 'விரிவுரையாளர்' பரவலாக இன்னும் பல காலம் ...
மேலும் கதையை படிக்க...
‘’பக்கத்து வீட்டு சுதா டீச்சர்கிட்டே நீ அதிகம் வச்சுக்கிறதில்லை மாதிரி இருக்கே… ஏன்?’’ ரம்யா கேட்க… ‘’அவ சாதாரண எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர், நான் ஹையர் செகண்டரி ஸ்கூல்ல பி.ஜி.அஸிஸ்டென்ட். அப்படியிருகிறப்ப அவகிட்டே போய் நான் ஏன் வச்சிக்கிறேன்’’ என்றாள் ஆர்த்தி கர்வத்துடன். ஒரு ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வித்தியாசமான சிரிப்பு!
தேடல்
மொட்டை
மட்டுறுத்தல்
காரணம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)