சப்தங்கள்…நிசப்தம்

 

சாரி.. இந்த படத்துல உங்களை வேண்டாம்னுட்டாங்க. இப்ப “பீக்”ல இருக்கற பாடகர கூப்பிட்டிருக்காங்க.

ஏன் இவ்வளவு நாள் நான் அவங்களுக்கு பாடிகிட்டுத்தானே இருந்தேன். எல்லோரும் நல்லா இரசிச்சுகிட்டுதானே இருந்தாங்க, இப்ப என்ன திடீருன்னு.

அவரு பாடின பத்து பாட்டுமே இப்ப சூப்பர்டூப்பர் ஹிட்.. அதனாலே இந்த சந்தர்ப்பத்துல இந்த படத்துலயும் பாடவைக்கணும்னு ஆசைப்படறாங்க.

புதிசா வரவங்க தாராளமா வரட்டும், அதுக்காக புக் பண்ணி பாடப்போற நேரத்துல வேண்டாம்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்லே

எனக்கும் தெரியுது, அதனாலதான் கொடுத்த அட்வான்சை கூட வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

பணம் வேணும்னா இப்ப கூட தர்றேன்..அதைப்பத்தி எனக்கு பிரச்சினை இல்லை. ஆனா கலைஞனா எனக்கு மனசு கனக்குது.

என்ன பண்ணறது, என்னை மன்னிச்சுங்குங்க…நான் வர்றேன்..

அம்மா..நெஞ்சுவலிக்குதே….

தட்…தட்..தட்..ஏதோ டிராலி உருளுகிறது.

இறக்கு..இறக்கு.. மெல்ல

நிறைய பேர் நடந்துவரும் காலடியோசை…

யெஸ்….ஓகே..க்விக்…கொண்டு போங்க…. சத்தங்கள்.

தயவுசெய்து இங்க கூட்டம் போடாதீங்க..இனிமையான குரல். இந்த குரலுக்கு சொந்தக்கார பெண் அழகாகத்தான் இருக்க வேண்டும். மீண்டும் பேசமாட்டாளா? கடுமையாக பேசுவது போல் தோன்றினாலும் குரலில் இனிமை போகாமல் பேசுகிறாள்.

சே..குரலைபற்றி இப்பொழுது என்ன அக்கறை?

ஏன் ரசனை என்பது இருக்கககூடாதா? அழகு, அசிங்கம், இவைகள் எல்லாமே நம்மனதுக்குள் ஓடும் எண்ணங்கள் தான். ஒருவனுக்கு தோன்றும் அழகு மற்றவனுக்கு அசிங்கமாக தெரியலாம்.

ஹலோ..ஹ்லோ…ஹலோ…

இது யார் குரல் அபஸ்வரமாய்.. இதற்கு அந்த பெண்ணை கூப்பிட சொன்னால் கூட நன்றாய் இருக்கும்.

ஓ..ஓ..ஓ..ஊ..ஊ.ஊ..

இது என்ன அழுகை சத்தம், இந்த சத்தம் அடிக்கடி கேட்கும் சத்தம்தான் இப்பொழுது நாரசாரமாய் ஒலிக்கிறது.

எனி திங்க் இம்புரூவ்…? நத்திங்.. கசகசமுசவென பேச்சு…

கூ..கூ..கூ….கூ….

இது என்ன சத்தம், ஏதோ..இஞ்சீனிலிருந்து வருகிறது போலிருக்கிறது.

கிராபிக் எப்படி காட்டுது? அப் அண்டு டவுன்ல…இருக்குது.. ஓ சிவியர்தான்..

ஓ..ஓ..ஓ..ஊ…ஊ..ஊ…. அழுகை சத்தம்..

அடடா இந்த சத்தம் நம்மை விடாதா? வேண்டாம் அப்படி சொல்லக் கூடாது. இந்த அழுகையும் சிரிப்பும் எத்தனையோ வருடங்கள் கேட்டு அனுபவித்திருக்கிறோம்.

ஆ…ஹா….ஹா….ஹா….பாட்டு…சத்தம்

என்ன குரல்..என்ன குரல்..அப்படியே சொக்க வைக்கிறதே.. இது அந்த பையன் பாடுனதா..உண்மையிலேயே நல்லா இருக்கு. அப்படியே இதை கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு….நிசப்தம்.

சாரி ..எங்களால முடிஞ்ச வரைக்கும் போராடி பார்த்துட்டோம், அவருக்கு வந்த சிவியர் ஹார்ட் அட்டாக்குல கோமாவுக்கே போயிட்டாரு. முடிஞ்ச வரைக்கும் அவருக்கு நினைவு வர போராடுனோம். பட் ஒன் திங்க்…அவர் மூச்சு நிக்கற கடைசி நிமிசத்துல முகத்துல ஒரு புன்னகையை பாத்தோம். எங்களுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. என்னடான்னு யோசிச்சு பார்த்தப்ப பக்கத்துல இருந்த செல்லுல இருந்து ஒரு பாட்டு கேட்டுச்சு..அதை கேட்டப்புறம்தான் அந்த முகத்துல புன்னகை வந்திருக்கும்னு நினைக்கிறோம்.

டாக்டர் அவர் பெரிய பாடகராய் இருந்தாலும், மத்தவங்க பாடறதையும் இரசிப்பாரு டாக்டர். நான் பாட பாட என் உயிர் போனா ரொம்ப சந்தோசப்படுவேன்னு சொல்லிகிட்டே இருப்பாரு.

ஒரு மாதம் கழித்து அவரை பற்றி மேடையில் அவரோடு பாடியவர் சொல்லிக் கொண்டு இருந்தார்

“அவன் சப்தங்களிலே இனிமை கண்டவன் இன்று நிசப்தமாய் ஆகிவிட்டான்” 

தொடர்புடைய சிறுகதைகள்
கோவையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் தனது புறப்படு பயணத்தை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடமே இருந்தது. பாபு இரண்டாம் வகுப்பு அறையில் தனது ரிசர்வேசன் பகுதியை கண்டு பிடித்து, கொண்டு வந்த சூட்கேஸ், பை அனைத்தையும் வைத்துவிட்டு எதிர் இருக்கைக்கு வரவேண்டிய ...
மேலும் கதையை படிக்க...
அந்த இருளில் ஒரு பாட்டை பாடிக்கொண்டே வந்த சாமிநாதனை ஒரு கும்பல் கை காட்டி நிறுத்தினர். ஏனுங்க என்ன வேணும்? கேள்வியை கேட்டுவிட்டு, மேட்டில் ஒரு காலும், தரையில் ஒரு காலும் ஊன்றி நின்று கொண்டான்.இங்க இராத்திரிக்கு தங்க வசதி இருக்குமா? ...
மேலும் கதையை படிக்க...
எங்கே இன்னும் இந்த இரண்டு தங்கச்சிகளையும் காணோம் என்று குடிசையில் இருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வள்ளிக்கு "பாப்பா" எத்தனயாவது படிக்கற? கேட்டவனின் கண்களில் வழியும் காமத்தை பார்த்து முகம் சுழித்த அந்த சிறு பெண், அவனுக்கு பதில் சொல்லாமல் கதவு இல்லாத ...
மேலும் கதையை படிக்க...
வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள் வைத்ததும் வந்த செய்தியை கேட்டவுடன் ஐந்து நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் நின்றார். அவருடனே அலுவலகத்துக்கு வரும் மகன், அங்கு வந்தவன் ...
மேலும் கதையை படிக்க...
இந்த ஊர் சபையின் முன் நமது அரசு அறிவிப்பது என்னவென்றால் இந்த ஊரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வளவன் நியமிக்கபட்டுள்ளார். இது நமது அரசரின் ஆணை ! பறைஒலிக்கிறது. வளவன் தனது வாட்டசாட்டமான உடலை நிமிர்த்தி நின்று நரைத்து போன தனது மீசையை ...
மேலும் கதையை படிக்க...
பாலக்காட்டிலிருந்து ஒரு கார் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அட்டகட்டி என்னும் இடத்தில் வண்டி நின்றது, வண்டியில் இருந்து ஒரு அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தகுந்த ஒரு பெரியவர் இறங்கினார், நல்ல க்ருத்த உருவம், பார்த்த ...
மேலும் கதையை படிக்க...
அது மலைகள் சூழ்ந்த கிராமம்.ஏதோ பிளஸ் டூ படித்துவிட்டாலே பெரிய படிப்புதான் அந்த ஊருக்கு, அந்த படிப்பு முடித்தவர்கள் ரோட்டோரம் திண்ணையில் உட்கார்ந்திருப்பதை பார்த்தவுடன் தொ¢ந்து கொள்ளலாம் அவர்கள் எல்லாம் அந்த ஊரில் பொ¢ய படிப்பு படித்தவர்கள். இதில் ஒரு சில ...
மேலும் கதையை படிக்க...
அப்பா இந்த படத்தை பாரேன்? அகிலா கொஞ்சம் பேசாம போறியா, எனக்கு இங்க தலைக்கு மேல வேலையிருக்கு. மகள் முகம் சுருங்கி போப்பா நீ எப்பவுமே இப்படித்தான் ! சொல்லிக்கொண்டே நின்று கொண்டிருந்தாள் ஏங்க கொஞ்சம் அந்த குழந்தைகிட்ட பேசுனாத்தான் என்ன? பாருங்க ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது தீபாவளி பண்டிகை வர,முகுந்தன் குழம்பினான்.கம்பெனி இதுவரை ஒன்றும் பேசாமல் இருக்கிறது. கம்பெனி ஊழியர்கள் தங்களுக்குள் இரகசியமாய் பேசிக்கொண்டிருக்கின்றனர். போன வருசம் இந்நேரம் கம்பெனியில் வேலை செய்யும் எல்லோருக்கும் பணப்பட்டுவாடா முடிந்து விட்டது.விடுமுறை எத்தனை நாள் எனவும் ...
மேலும் கதையை படிக்க...
சட்டென கண்விழிப்பு வந்து விட்டது கோபுவுக்கு ! புரண்டு படுத்தான், தூக்கம் தொடர மறுத்தது. வலுக்கட்டாயமாக கண்களை மூடி தூங்க முயற்சி செய்தான், பலன் பூஜ்யம் தான். இதற்கு மேல் படுப்பதில் லாபமில்லை, மெல்ல எழுந்தவன் நடந்து சென்று விளக்கை எரிய ...
மேலும் கதையை படிக்க...
விளையாட்டாய் சொன்ன பொய்
எதிர் பாராதது
இப்படியும் ஒரு பெண்
சதுரங்க புத்திசாலிகள்
ஊர்க்காவல்
முனியனும் அவனுக்கு மனைவியான மலைசாதிப்பெண்ணும் சந்தித்த கதை
இளமைக்காலத்தில் வந்து மறைந்த சமுதாய சிந்தனைகள்
நன்றாய் இருக்கும்போது உறவுகள் தெரிவதில்லை
தோழமை
இடமாறு தோற்றப்பிழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)