சங்கிலி – ஒரு பக்க கதை

 

‘‘ஒம்பது மணிக்கு பேங்க் திறக்குது. ஒம்பதே கால் ஆச்சு… ஒருத்தராவது சீட்ல உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்கறாங்களா…’’ என்று வெறுப்பை சத்தமாகவே வெளியிட்டான் பெருமாள்.

‘‘ஏங்க, எட்டரை மணியிலேர்ந்து உங்க ஆபீஸ்ல மின்சார கட்டண கவுன்ட்டருக்கு முன்னால நின்னு, நின்னு, உங்களை திட்டிக்கிட்டே பேங்குக்கு வந்தா… நீங்க இங்க க்யூவில நின்னுக்கிட்டிருக்கீங்க, அடச் சே!’’ என்று கோபக்குரலில் அலுத்துக்கொண்டான் டேவிட்.

‘‘மெட்ரோ வாட்டர் வரி கட்டப் போனேன். அங்கேயும் கவுன்ட்டர்ல யாரும் இல்லே… சே! அட, ஏம்ப்பா நீ இங்கயா நின்னுகிட்டிருக்கே?’’ என்று டேவிட்டை பார்த்து கத்தியே விட்டான் இப்ராஹிம். ‘‘அங்க மெட்ரோ வாட்டர் கவுன்ட்டர் முன்னால் நூறு பேர் நின்னுக்கிட்டிருக்காங்கப்பா!’’ என்றவன், ‘நான் வேல பார்க்கற ரேஷன் கடையில எத்தனை பேர் காத்துக்கிட்டிருக்காங்களோ’ என்று நினைத்துக் கொண்டான்.

‘‘இன்னிக்கு ஒரு வேலையும் ஆகலே. எலக்ட்ரிக் பில், மெட்ரோ வாட்டர் வரி கட்ட முடியலே. ரேஷனும் வாங்க முடியலே… ஒரு பயலாவது அவனவன் சீட்ல இருந்து வேலை செய்யறானுங்களா, வெட்டிப் பயலுக’’ என்று கத்திக்கொண்டே வந்த நாகேந்திரன், வங்கியில் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு, வாடிக்கையாளர்களிடம் சள்ளுபுள்ளென விழத் தொடங்கினான்!

- பிரபுசங்கர் (ஜனவரி 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
அழைப்பு மணி மீண்டும் ஒலித்ததும் என்னிடமிருந்து எரிச்சல் குரல் தானாகவே எழுந்தது. இதற்குள் இது நான்காவது தடவையாகும். இந் நிலையில் அமைதியாக வேலை செய்வது எப்படி? கார்த்திக் கடைக்குப் போவதாகக் கூறி வசதியாக நழுவி விட்டான். நான் எழுதுவதை நிறுத்த நேர்ந்தது. எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள் ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான் ஜெயராமன். தன்னை சுற்றி நோக்கியவன் வேட்டியை சரி செய்தவாரே டீ கடையில் நுழைந்து ஒரு டீ என்றான். டீக்கடைக்காரன் ...
மேலும் கதையை படிக்க...
இன்று ஒருவன் நகையைத் திருப்ப வந்தான். ஓ, மறந்தேன். இது இந்தப் பக்கத்துப் பாஷை–நகை மேல் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நகையைத் திரும்பப் பெற. நான் இங்கு வந்து நாளாகவில்லை. இன்னமும் இங்கு பழகிக்கொண்டிருக்கிறேன்–பாஷை, இடம், சூழ்நிலை, மனிதர்கள் உள்பட. ஆள் முகத்தின் சோகம் ...
மேலும் கதையை படிக்க...
பாரதி கலவன் பாடசாலை"என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறான் . "டேய் கெதியாய் போவோம்,பெல் அடிக்கப் போறதடா"என்று மதி துரிதப் படுத்தினான். 2‍..3.கிலோ மீற்றர் தூர சுற்று வட்டாரத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட ...
மேலும் கதையை படிக்க...
சமாதானம்!
காலையில், சூரியனோடு சேர்ந்து, செய்திகளும் தகித்துக் கொண்டிருந்தன. அதிலும், "ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேரலாம்...' என்று, அரசியல்வாதி ஒருவர் சொன்ன செய்தியைப் பார்த்து, அதிர்ந்து போனேன். அரசியல்வாதி என்று சொல்வது சரியில்லை; மத்திய நிதி அமைச்சர் அப்படி கூறியிருந்தார். ...
மேலும் கதையை படிக்க...
பசித்த மரம்
ஆண்டவன் அசட்டையா
வரிகள்
தோழர்
சமாதானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)