சங்ககாலப் பெண் புலவர்கள்

 

(இதற்கு முந்தைய ‘ஈடிணையற்ற பெண்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

சங்க காலத்தில் பல சிறந்த பெண் புலவர்கள் இருந்தனர்.

உதாரணமாக குறமகள் குறி எயினி; காமக்கணி பசலையார்; ஒவ்வையார்; நல்வெள்ளியார்; நக்கண்ணையார்; மதுரை ஓலைக் கடையத்தார்; நப்பசலையார்; வெள்ளி வீதியார்; வெறிபாடிய காமக்கண்ணியார்; நன்முல்லையார்; ஆதிமந்தியார்; ஊண்பித்தை; ஒக்கூர் மாசாத்தியார்; நன்னாகையார்; நச்செள்ளையார்; பூங்கண் உத்திரையார்; பூதப் பாண்டியன் தேவி; குறமகள் இளவெயினி; ஏணிச்சேரி முடமோசியார்; முடத்தாமக் கண்ணியார்; அங்கவை, சங்கவை (பாரி மகளிர்); தாயங்கண்ணியார்; பெருங்கோப்பெண்டு; பேய்மகள் இளவெயினி; காவற்பெண்டு; பொன்முடியார்; போந்தைப் பசலையார்; அன்சியந்தை மகள் நாகையார்; அணிலாடு முன்றிலார்; அஞ்சில் அஞ்சியார்; ஓரிர் பிச்சையார்; வருமுலையாரித்தி.

இவர்களில் சிலர் ஒரே பெண்மணிதான் என்றும் வேறு வேறு அடை மொழிகளுடன் வெவ்வேறு பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் சில பெயர்கள் ஆண்களா, பெண்களா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. ஆகையால் குறிப்பாக இத்தனை பேர்தான் என்று சொல்லவும் முடியாது.

மேலும் 2381 சங்கப் பாடல்களில் 154 மட்டுமே பெண்களுடையது என்பதைப் பார்க்கையில் அவர்களுடைய தாக்கம் அதிகமில்லை என்பதும் தெளிவாகிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வையார் பாடிய பாடல்கள்தான் அதிகம். அவர் பாடிய பாடல்கள் அறுபது. அவரைத் தவிர பத்து பாடல்களுக்கும் மேலாகப் பாடியோர் மூன்றே பேர்தான்.

450 க்கும் மேலான புலவர்களில் முப்பதுக்கும் குறைவானவர்களே பெண் புலவர்கள். ஆயினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இதைத் தவிர அதிகம் பெண் புலவர்கள் இருந்தது ரிக் வேதத்தில் மட்டும்தான். அது சங்க காலத்திற்கு 1500 ஆண்டுகளுக்கும் முந்தையது. இவ்வாறு 3500 ஆண்டுகளுக்கு பெண்களும் புலமை பெற்ற ஒரே நாடு இந்தியாதான். இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதும் சிறப்புடையது.

உலகிலேயே நாம் அறிந்த முதல் தத்துவ ஞானி கார்க்கி வாசக்னவி என்ற பெண்மணிதான். 2850 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.

இப்பெண்களின் பெயர்களில் பெரும்பாலானவற்றில் ‘கண்’ பற்றியும் ‘முடி’ பற்றியும் வருவது நோக்கத்தக்கது. அது மட்டுமல்ல. ‘நல்’ என்ற அடைமொழி சமஸ்கிருத மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது. ‘சு’ என்ற சமஸ்கிருதச் சொல் தமிழில் ‘நல்’ எனப்படும். நக்கீரன் என்ற பெயரிலும் இதைக் காணலாம்.

ஆயினும் பெண்களின் பெயர்களில்தான் இதை நாம் அதிகம் காண்கிறோம். சுமதி, சுகந்தி, சுகீர்த்தி, சுநீதா, சுலோச்சனா, சுசீலா, சுகன்யா என்று ஏராளமான பெயர்கள் இருக்கின்றன.

இந்தப் பெயர்களில் ‘முல்லை’ என்பது சமஸ்கிருதத்தில் ‘மல்லிகா’ என இருக்கிறது. ‘காமக்கண்ணி’ என்பது காமாட்சி அம்மனின் பெயர். இதைத் தமிழ்த் தாத்தா உவேசா; காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் (1894 – 1994) ஆகியோரும் குறிப்பிட்டுள்ளனர்.

‘நற்கண்ணை’ என்பது ‘சுலோச்சனா’ என்கிற சமஸ்கிருதப் பெயரே. இதில் வியப்பொன்றும் இல்லை. ஆண்கள் பெயர்களிலும் விஷ்ணுதாசன் என்பதை புறநானூறு விண்ணந்தாயன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணன்தாயன் என்றும் எழுதி இருக்கிறது.

தமிழ்ப் புலவர்களின் சமஸ்கிருதப் பெயர்களை பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் கொடுத்துள்ளார். மேலும் காக்கைப் பாடினியார். (காகம் என்பது தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே காணப்படும் சொல். மேல் நாடுகளில் இது க்ரோ க்ரோ என்று கத்தும்; இந்தியாவில் இது கா கா என்று கத்துமாம்) போன்ற பெயர்கள் காரணப் பெயர்கள்.

இது போல காரணம் அல்லது அவர்கள் பாடிய வரிகளைக்கொண்டு பெயர் இடுவது ரிக்வேத முறையாகும். இப்படி அவர்கள் பாடிய வரிகளைக் கொண்டு புலவர் பெயர் பெறுகிறார். அவர்களுடைய உண்மைப் பெயர் தெரியாததால் அல்லது இதுவே அவர்களுக்குப் பெயர் ஈட்டித் தந்தது என்பதால் இருக்கலாம்.

ஓரில் பிச்சையார் பிராமணப் புலவர். குறுந்தொகையில் ஒரு பாடல் பாடிய புலவர் பிராமண ஆண்பாற்ப் புலவராக இருக்க வேண்டும். பிச்சை என்பது ஆண்களின் சமஸ்கிருதப் பெயர். (சுந்தர் பிச்சை என்பவர் தற்போது google தலைவர்). இதை புத்தமதத்தினர் இந்து நூல்களில் இருந்து எடுத்து பிட்ஷூ என்று (பெக்கர்) என்று பிரபலப் படுத்தினர். தவிர, பெண்கள் பிச்சை போடலாமேயன்றி பிச்சை எடுப்பதில்லை. வீட்டில் மட்டும் பிச்சை எடுக்க வேண்டும் என்பது மனு தர்ம விதி.

ஓரில் என்கிற பெயர் பெண்பாற் புலவர் பெயர் அல்ல. ஓரில் பிச்சை என்பது பாட்டில் வரும் வரி. அவர் பிராமண அக்ரஹாரத்தில் பிச்சை (உஞ்சுவர்த்தி) எடுப்பது பற்றிப் பாடிய பாடல் இது என்பது தமிழ்த் தாத்தா உவேசா உரையில் உள்ளது. நாய்கள் வரக்கூடாத அக்ரஹாரத்தில் ஒரே வீட்டில் மட்டும் நெய் கலந்த சாதத்தை வாங்கும் துறவி என்பது பாடலில் வரும் செய்தி. அந்தத் துறவியும் பார்ப்பனர் என்பதில் ஐயமில்லை.

உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு இந்தோனேஷியாதான். அங்கு எல்லாப் பெயர்களும் இராமாயண, மஹாபாரதப் பெயர்களாக இருக்கும். சுகர்ணோ என்பவர்தான் அந்த நாட்டின் முதல் தலைவர். விடுதலை பெற்றுத் தந்தவர். அவருடைய தந்தைக்கு மஹாபாரத கர்ணனை மிகவும் பிடிக்கும். ஆயினும் கெட்டவர்க்கு நன்றிக்கடன் பட்டு உயிர் துறந்தார் கர்ணன். ஆகையால் அவரது தந்தை தனது மகனுக்கு ‘சு’ கர்ணன் என்று பெயர் வைத்தார். அதுவே சுகர்ணோ…

அவளது மகளின் பெயர் மேகவதி சுகர்ணோ புத்ரி. இந்த ‘சு’, ‘நல்’ என்ற முன்னொட்டாக (prefix) சங்ககாலப் பெயர்களில் உள்ளது. இது சம்ஸ்கிருத மொழியின் தாக்கம். தாமோதரன், வால்மீகி, பிரம்மா, கேசவன் என்ற பெயர்களும் பிராமண கோத்திரப் பெயர்களும் சங்கப் புலவர்களின் பெயர்களில் இருப்பதும் சமஸ்கிருத மொழியின் தாக்கத்தைக் காட்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜாதி வாரியாகப் பட்டியல் போட்டால் பிராமணப் புலவர்களே அதிகம் பாடியதும் தெரிகிறது. கபிலர், பரணர் என்ற பிராமணப் புலவர்களின் பாடல்களே இதற்குச் சான்று. 

தொடர்புடைய சிறுகதைகள்
(இதற்கு முந்தைய ‘பெண் தேடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) சபரிநாதனின் இந்தப் புதிய பாராமுகம் காந்திமதிக்கு பயங்கர எரிச்சலை மூட்டியது. “சபரிநாதனுக்கு கல்யாணக் கோட்டி பிடிச்சிருக்கு” என்று என்றைக்கோ கோமதி ஆச்சி சொல்லிவிட்டுப் போனதுதான். அதற்குப் பிறகு அதைப்பற்றி காந்திமதி ...
மேலும் கதையை படிக்க...
சோழ நாட்டுக் கோநகராகிய உறையூர் அழகும் வளமும் மிக்க காவிரியாற்றின் கரை. மேடும் பள்ளமுமாகத் தென்படுகிற வெண் மணற் பரப்பின் நடுவே பலர் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவுபேர் முகங்களிலும் சோகம் குடி கொண்டிருந்தது. அது எத்தகைய சோகம் தெரியுமா? பிரிய முடியாததை ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘இறுதி நாட்கள்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ஒருசில உறவினர்கள் மச்சக்காளையை ஒருமுறை சென்னை அடையாறில் இருக்கும் புற்றுநோய் ஹாஸ்பிடலுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டிவிட்டு வரலாமே என்று யோசனை சொன்னார்கள். புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா பற்றி மிகவும் ...
மேலும் கதையை படிக்க...
அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள். திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என்று பெயரிட்டனர். அந்தக் குழந்தை சிறுவயது முதலே பக்தியுடன் நிறைய ஸ்தோத்திரங்களையும், பக்திப்பாடல்களையும் கற்றுக்கொண்டாள். பதினைந்து வயதுமுதல், குழந்தைக்கு ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘வாரிசு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) நாலே எட்டில் இசக்கி கடைக்கு வந்து சேர்ந்துவிட்டார். மனசுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. எப்படியோ ஒரு குருட்டுத் தைரியத்தில் கிணற்றைத் தோண்டி விட்டார்! அதுக்காக ...
மேலும் கதையை படிக்க...
அது சென்னையில் ஒரு ஐடி கம்பெனி. காலை மீட்டிங் முடிந்து தன்னுடைய இருக்கைக்கு வந்து லேப்டாப்பைத் திறந்தான் ஸ்ரீவத்சன். மனைவி ரோகிணியிடமிருந்து தமிழில் ஒரு நீண்ட ஈ மெயில் வந்திருந்தது. அவசரமாகப் படித்தான். அன்புள்ள ஸ்ரீவத்சன், நான் என்னுடைய பிறந்த வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ...
மேலும் கதையை படிக்க...
அது 1960 ம் வருடம் என்று நினைவு... கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார். அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய ...
மேலும் கதையை படிக்க...
சென்னை-மும்பை தாதர் விரைவு ரயில். மரகதம் அதில் மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தாள். சமீபத்தில் திருமணமான அவளுடைய ஒரே மகன் ஸ்ரீராம், மருமகள் அனன்யா இருவரும் மும்பையில் தனிக் குடித்தனம் நடத்துகிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு இப்போதுதான் முதல் தடவையாக மரகதம் அவர்களுடன் மும்பையில் ஒரு ஆறு ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு வயது இருபத்தியேழு. தனிமை என்னை வாட்டுகிறது. ஒரு பெண்ணின் அருகாமைக்காக என் மனசும் உடம்பும் ஏங்குகிறது. பதின்மூன்று வயதினிலேயே இந்த எதிர்பார்ப்பு எனக்கு ஆரம்பமானது. பின்பு அதுவே ஏக்கமானது. இன்னமும் குறைந்த பட்சம், பன்னிரண்டு வருடங்கள் - ஒரு மாமாங்கம் - இந்த ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அர்த்தநாரீஸ்வரர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கணவன், மனைவி உறவு பல பிறப்புகளிலும் தொடர்ந்து வரும் என்று நம்பினர். இந்தக் கருத்தை வேறு எங்கும் காணமுடியாது. சங்ககாலத் தமிழர்கள் சொல்லிலும், செயலிலும் இந்துக்களாக வாழ்ந்தனர். காளிதாசன் என்ற மாபெரும் ...
மேலும் கதையை படிக்க...
மாமியார் வீட்டிற்கு விஜயம்
அகநட்பு
இறுதி உரை
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
மச்சான்களின் எச்சரிக்கை
பிரிவு
பிரமிப்புகள்
விளக்கு
தொடுதல்
ஈருடல் ஓருயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)