கோடரி – ஒரு பக்க கதை

 

சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடரி செய்து வாங்கிட்டுப் போறான். வழக்கம் போல அவன் அசந்த நேரம் அவனை செல்போன்ல படம் எடுத்து வச்சிருக்கிறேன். என் பையன்கிட்டே குடுத்து எம்எம்எஸ்.சுல அவன் போட்டோவை அனுப்புறேன். ஆளை அமுக்கி விசாரிங்க’ என்றார் அந்தக் கொல்லுப்பட்டறை ஓனர் சிவலிங்கம்.

அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான். ‘ஏம்பா நமக்குத் தொழில் தர்ற ஆளை போலீஸ்ல மாட்டி விடுகிறீங்களே உங்களுக்கே இது நல்லா இருக்குதாப்பா? கேட்ட மகனுக்கு பதில் கூறினார் சிவலிங்கம்.

‘சங்கர் ஒரு கோடரி அடிச்சிட்டுப் போறவங்க வெறகு வெட்டிப் பொழைக்கிறவங்க. இப்படி பத்து, இருபது கோடரி அடிக்கிறவங்கள்ல நிறைய பேர் கூலிக்கு ஆளை வச்சு காட்டு மரங்களை வெட்டிக் கடத்துறவங்காளாத்தான் இருக்கறாங்க.

தன் சுயநலத்துக்காக இயற்கையை அழிக்கிறவங்களை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலை. அதனாலதான் இந்த மாதிரி ஆட்களை போலிஸூக்குக் காட்டிக் குடுக்கறேன். இது தப்பா?’’ என்று கேட்ட தந்தையை பெருமை பொங்கப் பார்த்த சங்கர் கூறினான். ‘’இது தேசத் தொண்டுப்பா’’ என்று.

- தூத்துக்குடி வி.சகிதா முருகன் (23-1-13) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஃப்ராங்க் பாவ்லாஃப் கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல கார்த்தியும் ரம்யாவும் மதிய உணவு இடைவெளியில் தனியாக போய் அமர்ந்து சாப்பிடும்போது, ரம்யா மெல்ல கிசுகிசு குரலில் பேச்சை ஆரம்பித்தாள். "கார்த்தி, நம்ம டீம் லீட் மோகன் ஒரு 70K (70,000) வாங்குவார் தானே" "ம்ம் 20K கூடவே இருக்கும், என்ன திடீர்னு ...
மேலும் கதையை படிக்க...
சுந்தரேஷன் 10,570 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு பொறுப்பான குடும்பஸ்தன். மனைவி லதாவிற்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு. காரணம் மாதமானால் முதல் தேதியன்று 10,570 ரூபாயை அப்படியே மனைவியிடம் கொடுத்துவிட்டு 70 ரூபாயை கடன் வாங்கிச் செல்வார். அதில் 50 ...
மேலும் கதையை படிக்க...
தலைவர் நரசிம்மனும், சின்னப்பா வாத்தியாரும் வழக்கத்துக்கு மாறாக கிருஷ்ணர் கோயிலின் பின் பக்கம் இருக்கும் குப்பை மேட்டை ஒட்டிய நிலத்தினை, பார்த்து கொண்டும் அளந்து கொண்டும் இருந்தது அங்கிருந்தவர்களுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. நேரம் போகப்போக ஒன்றிரண்டு பேராக சுற்றி பார்ப்பவர்களின் ...
மேலும் கதையை படிக்க...
சாமானிய மக்கள் வாழும் குடிசைகளின் பக்கமாகக் கேட்ட அந்தக் குரைப்புச் சத்தம் வித்தியாசமாக இருந்தது. இதற்குமுன் எப்போதும் கேட்டறியாதது போன்ற ஒரு வசீகரத் தன்மை கொண்டு மக்களை ஈர்த்தது. முதலில் அது வழக்கமாக எப்போதும் கேட்டதுதான் என்பது போல மக்கள் அதைப் ...
மேலும் கதையை படிக்க...
பழுப்புக் காலை
ரயில் பயணச்சீட்டு
ஆத்ம நண்பன்
கழிவறை
விசுவாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)