கேளிக்கை…

 

இருவரும் நடைபாதை ஓரத்தில் பொடிநடையாக ஏதோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உடையும் இன்ன பிற அணிகலன்கலுமே, அவர்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் என்றும் சொல்லியது. மேலும் அவர்கள் சுமக்கும் குடும்ப பாரங்களை அவர்களது முகம் அப்பட்டமாக காட்டிக்கொடுத்தது.

இருவரையும் ஒரு காவல் அதிகாரி தடுத்து நிறுத்தினார்.

“வா வா ஐயா கூப்டறாங்க” என்று இருவரையும் ஜீப்பின் அருகில் நிற்கும் உயர் அதிகாரியிடம் அழைத்துச் சென்றார்.

அவர் “என்ன தண்ணி அடிச்சிருக்கிங்களா” என்றார்.

“இல்லைங்கய்யா”

“எங்க ஊது” என்று சொல்லி அதில் அப்பாவி போல் இருப்பவனை மட்டும் நிற்க வைத்து மற்றவரை “நீ கிளம்பலாம்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அவர் மனதிற்குள் திட்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். “என் வயசு என்ன அவன் வயசு என்ன, போலீஸ்னா மரியாதையை கொடுத்து பேச கூடாதுன்னு இருக்கா என்ன” என்று எண்ணிக்கொண்டே தெரு முடிவில் சென்று நின்றார்.

அந்த காவல் அதிகாரி சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

“லைசென்ஸ் எடு, நடந்து வரதுக்கும் லைசென்ஸ் வேணும் தெரியாதா” இது போன்று சில்லறைத் தனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் வாயிலிருந்து வரும் ஒரு வார்த்தையில் கூட மரியாதை இல்லை.

அவரை பதில் பேசவும் விடவில்லை, இருவரும் மாறி மாறி “கலாய்த்துக்” கொண்டிருந்தார்கள்.

அவர் அழுகிற நிலைமைக்கு சென்றுவிட்டார்.

அதைப் பார்த்தவுடன் அந்த இரு அதிகாரிகளும், “சார் டென்ஷன் ஆகாதிங்க, அங்க பாருங்க கேமரா, டிவி ஷோ சார்”

அவர் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

“வட போச்சே சொல்லுங்க, சார் டென்ஷன் ஆகாதிங்க வட போச்சே சொல்லுங்க”

பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து விரைந்தார். அவமானம் கழுத்தைப் பிடித்து இறுக்கியது.

சில நாட்கள் கழிந்தன.

அந்த நிகழ்ச்சி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. நல்ல வேலை அன்று அவர் மனைவியும் மகளும் வீட்டில் இல்லை. ஐந்து வினாடிக்கு ஒருமுறை, பத்து இருபது பேர் மொத்தமாக சிரிப்பது போலும் நக்கலான ஓசையுடனும் ஒளிபரப்பானது. அவரது நிலைமையைப் பார்த்து ஊரே கை கொட்டி சிரிப்பது போல தோன்றியது. கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்களெல்லாம் இவரைப் பார்த்து நிச்சயம் கேலி செய்யத்தான் செய்வார்கள்.

அது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே வரிசையாக இவரது அலைபேசிக்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது.

கண்களிலிருந்து நீர் கசிந்தது. இதயத்திலிருந்து இரத்தம் கசிந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

அவமானம்!

“தற்கொலை செய்துகொள்” என்றது மனம்.

(இது போன்ற நிகழ்ச்சிகளை ஆதரிக்க வேண்டாம், முடிந்தால் நம்முடைய எதிர்ப்பையும் தெரிவிப்போம்) 

தொடர்புடைய சிறுகதைகள்
இன்று இரவு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மீண்டும் இரயிலில் பயணம் செய்யப்போவதை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டிருந்தார் செல்வம். இதற்கு இவரது முந்தைய கசப்பான அனுபவம் தான் காரணம். சாதாரணமாக நாம் அனைவரும் தொலை தூரப் பயணம் என்றாலே, பேருந்தை விட இரயில் பயணத்தையே தேர்வு ...
மேலும் கதையை படிக்க...
என் போன்றவர்களுக்கெல்லாம் காதலிக்க அறுகதை கிடையாது. அதுவும் என்னை விட பத்து வயது சிறியவனைக் காதலிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது எனக்கு. ஆண்கள் தன்னை விட பத்து வயது சிறியவளைக் காதலிக்கலாம், மணந்து கொள்ளலாம். ஆனால் பெண்ணாகப் பிறந்தால்? பெண்கள் அவ்வாறு ...
மேலும் கதையை படிக்க...
ப்ரோடீன்ஸ் பிராய்லர் கடை... அவரது மகன் வைத்த பெயர் அது. கோழிகளும், கோழிகளின் தோல் உறிக்கும் இயந்திரமும் இருக்கும் ஒரு சிறிய அறையின் முன்னால் பனை ஓலையால் கூரை வேயப்பட்டிருக்கும். அந்த கூரையில் தோல் உரிக்கப்பட்ட கோழிகள் தொங்கியவாறு இருக்கும். கோழியை வெட்டுவதற்கு ...
மேலும் கதையை படிக்க...
இன்று மாலை நான்கு மணிக்கு மாப்பிள்ளைப் பார்க்க வருவதாக பெண் வீட்டில் சொல்லியிருந்ததால், மாப்பிள்ளை வீட்டில் 'தட புட' லாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்கள். இந்த வரன் நிச்சயம் முடிந்துவிடும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஜாதகமெல்லாம் பார்த்தாகிவிட்டது, எட்டு பொருத்தம். இது இரண்டாவது வரன், ...
மேலும் கதையை படிக்க...
இரயில் பயணம்
புன்னகைகள் புரிவதில்லை…
பக்… பக்… பக்…
ஸ்மைல் ப்ளீஸ்…! சிரிப்பிற்கு கியாரண்டி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)