கேட்ச் – ஒரு பக்க கதை

 

மாரிமுத்துவின் மானசீக அணி ஃபீல்டிங. எதிர் அணி வெற்றி பெற ஒரே பந்து இரண்டு ரன்கள்.

பந்து ஆகாயத்தை நோக்கி அடிக்கப்பட்டது!

மாரிமுத்து டீ ஆத்துவதை கூட நிறுத்திவிட்டு, டீக்கடை டிவி- யில் மூச்சடைத்துப் பார்க்க

பந்து பவுண்டரிக்கு அருகில் இறங்கி, அங்கு நின்றிருந்த அவனது கிரிக்கெட் ‘ஹீரோ’வின் கைகளில் விழுந்தது

அனைவரும் உற்சாக கூச்சலிட பந்து கையிலிருந்து நழுவி கீழே விழ, அணி தோற்றது!

ஆத்திரம் தாங்காத மாரிமுத்து, உடலில் தீயை பற்ற வைக்க, மறுநாள் தினசரிகளின் ஒரு மூலையில் செய்தியாக எரிந்து
போனான்.

”ரெண்டு பொம்பள புள்ளங்களை, நான் எப்படி கரையேத்த!”

அழுது கொண்டே குழந்தைகளோடு போகும் இடம் தெரியாமல் போயக் கொண்டிருந்தாள் மாரிமுத்துவின் இளம் மனைவி

நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த சொகுசுக் கப்பலில் பாலிவுட்டின் ‘கனவுக்கன்னி’ கிரிக்கெட் ‘ஹீரோ’ மார்பில்
சாய்ந்து உளறிக் கொண்டிருந்தாள்

”டார்லிங் நீ அந்த கேட்சை மிஸ் பண்றவரைக்கும் நான் நினைக்கவே இல்லை. இப்படி ‘வேர்ல்டு டூர்’ வருவோம்னு! கிரேட் டீல்..!!

- ப.உமாமகேஸ்வரி (மே 2013) 

தொடர்புடைய சிறுகதைகள்
நல்லாசிரியை
என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே... அந்த காகிதம் போலவே, என் உள்ளமும் படபடத்தது. நிமிர்ந்து என் கணவரை பார்த்தேன். கண்களில் கண்ணீர் பெருகி, என் பார்வையை மறைத்தது. மனம் பின்னோக்கிச் ...
மேலும் கதையை படிக்க...
“ஃபேக்டரியை என்கிட்ட நீங்க ஒப்படைச்சு ஆறு மாசம் ஆயிடுச்சு. ஆனா, இந்த கால கட்டத்தில, உற்பத்தி குறைஞ்சுக்கிட்டு வருது. அதுக்கான காரணம் என்னன்னு புரியலை’ என்று எம்.பி.ஏ. படித்து முடித்த மகன் சித்தார்த், தந்தை சதுர்வேதியிடம் தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டான். “உற்பத்தியைப் பெருக்க ...
மேலும் கதையை படிக்க...
அண்ணே உங்களுக்கு போன்! நம்ம வேலா அண்ணன்...''என்னது வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்... ஏன்டா, உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்...?' என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு, 'இல்லண்ண... வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான் நான் சொல்ல வந்தேன்' ...
மேலும் கதையை படிக்க...
தங்கம் விலை குறைந்த சில தினங்களாகவே பரபரப்பாக காணப்பட்டாள் அக்ஷயா. அன்றும் அப்படித்தான். அதிகாலையில் குளித்து முடித்து தயாரானாள்.’இன்றும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது’ தொலைக் காட்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தங்கம் விலைக் குறைவு. அக்ஷயாவை இன்னுன் சுறுசுறுப்பாக இயங்க வைத்தது. ”அம்மா, .டிபன் ரெடியாயிடுச்சாம்மா, ...
மேலும் கதையை படிக்க...
வானில் வியந்து…நீரில் குளிர்ந்து…
வங்க சாப்டலாம்...'-வெள்ளையும் கறுப்புமான அரை அங்குலத் தாடியும் பளிச்சென்ற வெண்மை மாறாச் சிரிப்புமாக அழைத்தார் கேசவன். மனைவிக்குப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு கொடுத்துவிட்டு, தனக்காக சன்னாசிக் கடையில் இரண்டு மசால் வடையை பார்சல் கட்டிக்கொண்டு வரும்போதுதான் சபாபதிக்குக் கூவலான... அதே சமயம் மெல்லிசான அந்த ...
மேலும் கதையை படிக்க...
நல்லாசிரியை
பார்வையை மாற்று! – ஒரு பக்க கதை
எரிந்த பனைகள்..!
தங்கம் – ஒரு பக்க கதை
வானில் வியந்து…நீரில் குளிர்ந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)