குரு வீட்டில் சனி!

 

‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ்.

“ என்னம்மா!…. மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா நீங்க பணம் கட்டலே!….உடனே போய் கேஷ் கவுண்டரில் பணத்தைக் கட்டிட்டு வாங்க!..”

என்று நர்ஸ் சொன்னவுடன் மகன் முருகேசனைப் பார்த்தாள் பார்வதி.

“ அம்மா!…நேற்று நீ கொடுத்த நகைகளை பாங்கில் அடமானம் வைத்து ஐம்பதாயிரம் வாங்கினேன்….அந்தப் பணத்தை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இங்கு தான் வந்தேன்!…இங்கு வந்து பார்த்தா ரசீது தான் இருக்கு!….நோட்டுக் கட்டைக் காணோம்!..வழியில் எங்கயோ தவறி விழுந்து விட்டது!…”

“ ஐயோ!…ஐயோ!…” என்று பார்வதி தலையில் அடித்துக் கொண்டு கதறினாள். முருகேசன் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தான்.

அன்று வந்த மாலைப் பதிப்பு செய்தி தாள் பிரிக்காமல் அப்படியே கீழே கிடப்பதைப் பார்த்தாள் நர்ஸ். “ தம்பி!.. அந்தப் பேப்பரில் முதல் பக்கத்தில் 50 ஆயிரம் என்று என்னவோ போட்டிருக்கு!.. என்னவென்று எடுத்துப் பார்!….” என்றாள்.

நர்ஸ் சொன்னவுடன் அவசர அவசரமாக செய்தி தாளை எடுத்தான். அதில் முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் போட்டிருந்தது!

இன்று காலையில் ஒரு ஆட்டோ டிரைவர் வீதியில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் கட்டை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாராம்! அந்த உத்தமரின் நேர்மையைப் பாராட்டி முதல் பக்கத்தில் பெரியதாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள்! உரியவர் தக்க ஆதாரத்தைக் காட்டினால் பணத்தை திருப்பித் தரப்படும் என்று செய்தியில் தெளிவாகப் போட்டிருந்தது!

முருகேசனுக்கு அந்த செய்தியைப் பார்த்தவுடன் உயிர் வந்தது! காவல் நிலையத்திற்குப் போய் எந்த இடத்தில் தவற விட்டேன் என்ற விபரம் சொல்லி சான்றுகளைக் காட்டி பணத்தைக் கேட்டான்.

“ அதெல்லாம் சரியாத்தான் இருக்கு!..இங்கே பத்தாயிரம் வெட்டினா உனக்கு உடனே பணம் கிடைக்கும்!…இல்லா விட்டா கோர்ட்டு, வக்கீல் என்று நீ அலைய வேண்டியிருக்கும்!..”

சோதிடத்தில் தான் ராகு கேது இடம் மாறி உட்கார்ந்திருப்பதாகச் சொல்வார்கள்! நம்ம ஊரிலே உத்தமனும், வில்லனும் கூட இடம் மாறி உட்கார்ந்து விடுவார்கள் போலிருக்கிறது! முருகேசன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்!

பாக்யா டிசம்பர் 2-8 2016 

தொடர்புடைய சிறுகதைகள்
“ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?....எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே உங்களுக்குப் பொழப்பாப் போச்சு!.....ராத்திரியானா என் உசிரை எடுக்கிறீங்க!....உங்களுக்கு இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் உத்தியோகம் வேண்டாம்!....வேற ஏதாவது வேலை தேடிக் கொள்ளுங்க!…காத்தாலே ...
மேலும் கதையை படிக்க...
படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார். “என்னாச்சு?...எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன். “சார்!...என் கார்டை ...
மேலும் கதையை படிக்க...
புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி மானேஜர் ராம் பிரசாத்தும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்திக் கொன்டிருந்தார். ‘ஹெல்த் பிளான்’ பவுடரை ‘பாக்கெட்’டில் அடைத்து , மெடிகல் ஷாப்கள் ...
மேலும் கதையை படிக்க...
“கல்யாண வீட்டில் முதல் பத்தியில் உட்கார்ந்து சாப்பிடற மாதிரி…சாப்பாடு ஆனதும் இவ முதலிலேயே உட்கார்ந்து ஒரு பிடி பிடிச்சிடறா….முட்டையைக் கூட விட்டு வைக்கிறதில்லே!....எனக்குப் பார்க்க அசிங்கமா இருக்குதடி!......” அந்தப் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் பெண்கள், சத்துணவைக் கவனிக்கும் தன் தோழி மாலதியைப் ...
மேலும் கதையை படிக்க...
பிரபல வாரப் பத்திரிகையின் நிருபர், காவல் துறை தேடிக் கொண்டிருந்த மோசடிக் கம்பெனி விளம்பரங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பல டி.வி. விளம்பரங்களில் நடித்த அந்த நடிகையிடம் பேட்டி எடுத்தார். “ மேடம்!...கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாயை பொது மக்களிடம் ஏமாற்றி மோசடி ...
மேலும் கதையை படிக்க...
மகளுக்கு கடமை இல்லையா?
நியாயம்!
வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!
முதல் பந்தி – ஒரு பக்க கதை
நடிகையின் கோபம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)