Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கியான்

 

கியான் செத்துப் போனாளாம்.

விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணத்தைப் பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர் ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக் கொண்டிருந்தான். தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை.

கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் ‘பைத்தியம்’.

கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும் எங்கேயாவது நடந்து கொண்டே இருப்பாள். அவள் எங்கிருந்து வருகிறாளென்று எவருக்கும் தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளென்றும், வரதட்சணைக் கொடுமையால் நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதால் இப்படி ஆனதாகவும், திருமணமானவளென்றும், யாரோ வைத்த சூனியத்தால் இப்படி ஆனதென்றும் பலவாறு கதைகள் உண்டு கியானைப் பற்றி. இவற்றில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. கியான் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியாது. ஆனால், கியான் என்று அழைக்கையில் அவள் திரும்பிப் பார்ப்பாள்.

கியான் எங்களூரில் பிரபலமானதே ஒரு சுவாரசியமான கதை. அது ஒரு நல்ல மழைக்காலம். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய் பெரிதாய்ப் பெய்த மழை, அன்று மெலிதாய் தூறிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கியான் வழக்கமான பேருந்து நிறுத்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். பஸ் நிறுத்தத்திற்கு எதிரே டீக்கடை ஒன்று உண்டு. டீக்கடை நாயரின் இரண்டு வயதுக் குழந்தையும் தெருவோரம் மழையில் விளையாடிக் கொண்டிருந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த லாரியொன்று அந்த இடத்தை நெருங்குகையில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சாலையின் குறுக்காக ஓடி வர ஆரம்பித்தது. எந்தவித விபரீதமும் நிகழாமல், கியான் வேகமாய் ஓடிப் போய் குழந்தையை அணைத்தபடி காப்பாற்றி, மறுபுறம் கொண்டு வந்த அந்த தினத்திலிருந்துதான் கியான் எங்களூரில் நல்ல பிரபலம்.

…எடுப்பாய் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முன் பற்கள் இரண்டும் அந்த முகத்திற்கு சற்று விகாரமான தோற்றத்தைத் தந்தாலும் இதுவரை எந்தக் குழந்தையும் அவளைப் பார்த்துப் பயந்ததாய் எந்தக் கதையும் இல்லை. ஆனால், கியானின் அட்டகாசமென்று சொல்லவேண்டுமென்றால், அதைப்பேருந்துகள் வந்து நிற்கும் நேரத்தில் காணலாம். அதுவரை அமைதியாய் தன் (!) இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள், ஏதாவது பேருந்து வரும் சமயம், வேகமாய் ஓடி வந்து பேருந்தின் பக்கவாட்டில் தடதடவென்று தட்டுவாள். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, அது பெண்களாய் இருந்தாலும், “மாமா மாமா” என்று சத்தமிடுவாள். ஆனால் இதுவரை அவள் பேருந்துக்குள் ஏறவோ, கல்லால் அடிப்பது போன்ற செயல்களிலோ ஈடுபட்டதில்லை. ஒரு சில வேளைகளில், யாரையாவது சுட்டிக் காட்டி, “இந்த மாமாவைக் கட்டிக்கிறியா?” என்றால், அதற்கு “இக்கும், போ மாமா” என்றே பதில் சொல்வாள். அப்படிச் சொல்கையில் அவள் லேசாக வெட்கப்படுவதைப் போல் கூடத் தோன்றும்.

கியானுக்குக் கோபம் வரவழைக்கும் விஷயம் ஒன்று உண்டு. “டமுக்கு டப்பான்” என்ற வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறதோ தெரியாது. சிறுவர்கள் யாராவது விளையாட்டுக்காக அந்த வார்த்தையைச் சொன்னாலும், கண்களில் அக்னி ஜ்வாலை தெறிக்க, தெருவில் கிடைக்கும் கற்களை எடுத்து வீசத் தொடங்கி விடுவாள். கூடவே “அய்ய.. இக்கும்.. போ” என்று கத்திக்கொண்டே சிறுவர்களைத் துரத்திக்கொண்டு ஓடுவாள். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம், பழைய கியானாய் பேருந்து நிறுத்த பெஞ்சில் அவளைக் காணலாம். வந்து அமர்ந்த சிறிது நேரம் வரை, அவள் முகத்தில் சிறிய கோபம் ஒன்று இருக்கும். அதுபோன்ற நேரங்களில், வழக்கமான “மாமா மாமா” போன்ற கூச்சலோ, பேருந்துகளைத் தட்டுவது போன்ற செயல்களிலோ அவள் ஈடுபடுவதில்லை. ஆனால் எல்லாம் சிறிது நேரம்தான். பிறகு தன் வழக்கமான வேளைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள்.

அந்தக் கியான் செத்துப் போனாளாம்.

அது அங்கு யாரையும் பாதித்ததாய் தெரியவில்லை. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாவரும் தன் வேலையைப் பார்த்தபடி போய்க்கொண்டிருந்தன(ர்).

இரண்டு நாட்கள் போனது. பேருந்து நிறுத்தமே தன களையை இழந்தது போல் இருந்தது எங்களுக்கு. திடீரென்று “இக்கும்.. போ” என்ற குரல் கேட்க ஆரம்பித்தது. தலையில் ஒரு கட்டுடன் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள் கியான். தலைக் காயம் பற்றிக் கேட்டவருக்கெல்லாம் “இக்கும்.. போ” என்றே பதில் சொன்னாள். ஒருவேளை அவள் யாராவது குழந்தையைக் காப்பாற்றப் போய் அடிபட்டிருக்கும் என்று யாவரும் நினைத்துக்கொண்டோம். அந்த “இக்கும் போ” என்ற சத்தமும், “மாமா மாமா” என்ற அழைப்பும் மறுபடி ஒலிக்க ஆரம்பித்ததில், இழந்த தன் களையை மறுபடி பெற்றிருந்தது எங்களூர் பேருந்து நிலையம்.

(உயிரோசை 05-04-2010 மின்னிதழில் வெளியானது, கல்கியில் 11-03-2012 வெளியானது)  

தொடர்புடைய சிறுகதைகள்
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
ஒரு காதல் கதை!!
பேசி முடித்து தொலைபேசியை அதன் இடத்தில் வைத்த சந்திராவைப் பார்த்து ‘‘என்னடி ஆபீஸ் கிளம்பணுமா?’’ என்றாள் அவள் அம்மா. அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். விடுமுறையில் கூட வேலைக்குப் போகணுமா என்பதுதான் அம்மா கேட்க வந்தது. ஆனால், அம்மா எப்போதும் இப்படித்தான் ...
மேலும் கதையை படிக்க...
சிரிப்பு
கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு மாதம் எங்களுடன் பணி புரிந்தவர். எங்கள் என்பதில் நானும் குமாரும் சேர்த்தி. பல்லடம் பக்கத்தில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
முடிவு
சம தளத்திலும் சற்றே இறக்கமான பகுதிகளிலும் அவ்வளவாகத் தெரியவில்லை. சற்று மேடான சாலைப் பகுதிகளில் மட்டும் மிதிப்பதற்கு நிறைய சிரமமாக இருந்தது. ""வேண்டாண்டா உன்னால முடியாது''ன்னு சொன்ன பாபு கிட்ட, ""முடியும்டா''ன்னு சொல்லி சைக்கிளை வாங்கினது நான்தான். இப்ப முடியலைன்னு குடுத்தா ப்ரெண்ட்ஸ் ...
மேலும் கதையை படிக்க...
வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் ...
மேலும் கதையை படிக்க...
மேடையின் வலது மூலையில் அமர்ந்திருந்த அமலா, மேடைக்கு இடது மூலையில் நண்பன் ஒருவனோடு உட்கார்ந்து இருந்த ரகுவை அவ்வப்போது ஒரு கண் பார்ப்பதும் அவன் பார்வை தன்னிலேயே நிலைத்திருப்பதைக் கண்டதும் உடனே வேறு பக்கம் திரும்பி யாரையோ பார்த்து பொதுவாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
உள்ளும் புறமும்
“ஹலோ சார்...” “சூரஜ்?” “எஸ் சார்...” “உட்காருங்க...” “‘இங்க’ல்லாம் வேண்டாம் சார்…” “சரி… டேக் யுவர் சீட்… யூ லைக் திஸ் ஆபீஸ்?’’ “ரொம்ப சார்…” “எஞ்சினீரிங் முடிச்சது இந்தியாலதானே?” “ஆமா சார்...” “வேலைலாம் எப்படிப் போகுது?’’ “டைட்டா போகுது சார்...” “அது ஓகே… பிடிச்சிருக்கா..?” “ரொம்ப…” “படிச்சது மெக்கானிக்கல் இல்ல?” “ஆமா சார்...” “செய்யற வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கற ...
மேலும் கதையை படிக்க...
சின்ன முள் பெரிய முள்
காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால், மாமலையும் கடுகு என்பதெல்லாம் கூட சரி, ஆனால் ஐஏஎஸ் படிப்பதென்பது அத்தனை லேசுப்பட்டதா என்ன? கல்யாணி அப்படிச் சொன்னபோது ‘‘அப்படியே மூக்கு மேல குத்திடுவேன்… ஓடிப் போயிடு!’’ என்றான் ரகு. “ஏன்... ஏன் நீங்க படிக்கக்கூடாது?” “உனக்குத்தான் வேற வழியில்லை, ...
மேலும் கதையை படிக்க...
சொல்லாத சொல்லுக்கு
சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம், ""என்னதிது குமார்?'' என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ""என்ன பண்ண அவரை?'' என்றேன். அந்த நபர், நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
தியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில் வைத்து பார்ப்பேன் என்று நிச்சயமாய் நினைக்கவில்லை. ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் ...
மேலும் கதையை படிக்க...
காக்கைச் சிறகினிலே
ஒரு காதல் கதை!!
சிரிப்பு
முடிவு
அம்மா மாதிரி
கண்ணெதிரே தோன்றினாள்
உள்ளும் புறமும்
சின்ன முள் பெரிய முள்
சொல்லாத சொல்லுக்கு
கடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)