காதலி – ஒரு பக்க கதை

 

‘’டேய் வசந்த் உனக்கு லவ் பண்ண வேற யாரும் கிடைக்கலையா? போயும் போயும் அந்த திமிர் பிடிச்சவளை செலக்ட பணணியிருக்க?’’

‘’டேய்.. குமார் ஆபீஸ்ல எல்லாருமே ஏன் அவளை தப்பாவே பார்க்கறீங்க?

‘’வசந்த்.. அந்த சுமி நடக்கவே காசு கொடுக்கணும். அவ்வளவு சோம்பேறி ஒரு முறை லிப்ட் வேலை செய்யலைன்னதும்… யாரால ஐஞ்சு மாடி ஏற முடியும்னு… கம்பெனிக்கு லீடு போட்டுட்டு போனவள் ! இவ்வளவு பணத் திமிர் பிடிச்ச அவள் சரிப்பட்டு வருவாளான்னு யோசிச்சு முடிவு எடு?’’ என்ற குமாரின் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் தனது காதலை சுமியிடம் கூறினான் வசந்த்.

‘’மிஸ்டர்… வசந்த் என்னை மன்னிடுச்சிடுங்க. நான் உங்களுக்கு தகுதியானவள் இல்லை. ஒரு விபத்துல என்னோட வலது கால் முறிஞ்சு போய்.. இப்ப மரக்கால் தான் வச்சிருக்கு. தயவு செய்து இதை யார்கிட்டேயும் சொல்லிடாதீங். ஏன்னா அடுத்தவங்க பரிதாபமா பார்க்கிறது எனக்கு பிடிக்காது. நானும் ஒரு சராசரி மனுஷியா ஜெயிக்கணும்!’’. என கூறிவிட்டு சுமி மெதுவாய் நடந்து செல்ல..

வசந்தின் மனதிற்குள் மட்டும் இன்னும் வேகமாய் வந்து கொண்டிருந்தாள் சுமி.

- கோவை நா.கி.பிரசாத் (13-10-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
தீபாவளிச் சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவீட்டார் எதிர்ப்புடன் காதல் திருமணம் செய்துகொண்ட லதா, மகேந்திரன் தம்பதிகளுக்கு இதுதான் தலை தீபாவளி. “அந்தச் செருப்ப வாங்காமலே வந்துட்டீங்களே, ஏன்?” கேட்டாள் லதா. “அது தரமான ரகமா ...
மேலும் கதையை படிக்க...
பத்மாவதிக்கு இந்த பதினைந்து நாட்கள் பள்ளியை விட்டுப் பிரிந்த அனுபவம் மிகவும் கடுமையாகத்தான் இருந்தது. ஒரு வாரம் லீவு விட்டால் இரண்டு நாள் விளையாடிவிட்டு மூன்றாம் நாள் அடப்பள்ளிக்கே போயிருக்கலாமோனு சிலருக்குத் தோணும் அவர்களில் ஒருவர்தான் இந்த பத்மாம்மா. ஆனால் இன்று வேறு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: மு.வரதராசனார்.     ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாகீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான். அவன் வயது பன்னிரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும் இல்லை. சட்டென உருண்டு போய் ...
மேலும் கதையை படிக்க...
2015.பிப்ரவரி.04 நியூயார்க் நகரம் தனது மாலைநேரத்தைக் கடந்து,மெதுவாக மயங்கிக் கொண்டிருந்த இரவு எட்டு மணி. நகரின் மத்தியில், செயின்ட் ஜேம்ஸ் தேவாலயத்தின் பராமரிப்பிலிருந்த பூங்காவின் இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்த சாரா,தனது காதலன் இராபர்ட்டை கடுமையாகக் கோபித்துக் கொண்டு,கடந்த ...
மேலும் கதையை படிக்க...
புகை – ஒரு பக்க கதை
தாயுமானவள்…
கட்டாயம் வேண்டும்
நினைவிலாடும் சுடர்
எங்கேயும் எப்போதும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)