கல்பனாவின் மேல் ஏன் இந்த வெறுப்பு?

 

எப்பொழுதுமே என்னை தலைக்கனம் பிடித்தவன், பிடிவாதக்காரன், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விவாதிப்பவன், இப்படியாக என்னென்னமோ என்கிறார்கள். சொல்லட்டுமே, விருதுகளை வெறுத்தவன், ஆரவாரமான வரவேற்புகளை நிராகரித்தவன், இது போதாதா என் தலைக்கனத்துக்கும், பிடிவாதத்திற்கும்.

இவன் எழுதும் இலக்கியம் புரியவில்லை, இப்படி கூப்பாடு போட்டு புலம்புவர்களும் உண்டு, அவர்கள் எல்லாம் என்னை போன்ற எழுத்தாளர்கள் தான். அவர்களுக்கு என் மீது கிலேசம், அதனால் அப்படி சொல்கிறார்கள், நான் அதற்கெல்லாம் கவலைப்பட்டு கொண்டிருப்பதில்லை.

பார்த்தீர்களா நான் எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக் கொண்டிருக் கிறேன். இப்படித்தான் சில விசயங்களில் என்னை பற்றி சொல்லி தற்பெருமை பிடித்தவன், அகம்பாவம் கொண்டவன், என்று மற்ற எழுத்தாளர்கள் சொல்லும்படி நடந்து கொள்கிறேன்.

அவர்கள் கிடக்கட்டும், கல்பனா, அவள் கூட இப்பொழுது என்னை பற்றி இப்படி நினைத்து கொண்டிருக்கலாம்.

அதை பற்றி எனக்கென்ன கவலை? அவள் என்னுடையவளாக எண்ணியது எவ்வளவு தவறு என்று எனக்கு இப்பொழுது புரிகிறது.

சதா காலமும் அவளை பற்றி நினைத்து நினைத்து என் குடும்பத்தில் ஒரு குழப்பத்தையே கொண்டு வந்து விட்டாள். அது அவள் தவறு இல்லை என்பது தெரிந்தாலும் அவளை அறிமுகப்படுத்தியதால் தானே இவ்வளவு சிரமம் என்று மனசுக்கு பட்டது.

எனக்கும் ஒரு சில எழுத்தாள நண்பர்கள் உண்டு, அவர்கள் கூட இப்பொழுது கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். என்னப்பா கல்பனாவை இப்படி ஓரம் கட்ட ஆரம்பிச்சுட்டே?

அவர்களிடம் என்ன சொல்வது? அவள் வரம்பு மீறி போகிறாள், உண்ணும் போது முதல் உறங்கும் வரை நினைவில் வந்து வாட்டுகிறாள் என்று சொல்ல முடியுமா?

மனைவியை அழைக்கும்போது கூட வாய் தவறி “கல்பனா” என்று அழைத்து பேசும் நிலைக்கு போய் விட்டேன்.

இனி இவளை மறந்து விட்டு, கழட்டி விட வேண்டியதுதான், முடிவு செய்தவன் அடுத்து நான் அவள் பெயரை முன்னிலைப்படுத்துவதை விட்டு விட்டேன்.

அந்தோணி, இவன் என்ன செய்தான் என்கிறீர்கள்? ராஸ்கல் நான் இவனை சமூகத்தில் மனிதனாக உலவ விட்டவன். இவனது வளர்ச்சிக்கு கல்பனாவின் உதவியைத்தான் நாடி இவனை மனிதனாக்கினேன், அது வேறு விஷயம். அவன் என்ன சொல்கிறான்?

கல்பனாவுடன் என்னை அடுத்த நிகழ்வுக்கு அழைத்தால்தான் நன்றாக இருக்கும் என்கிறான்.

இவன் என்ன எனக்கு சொல்வது?

ஆனால் மனதுக்குள் ஒரு உண்மை புரியத்தான் செய்கிறது. கல்பனா இல்லாமல் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதும், எனக்கும் முழுவதுமாக அவளை ஒதுக்கியதால் இவனுக்கு துணையாக யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாமல் தவிப்பதையும், வெளியில் சொல்ல முடியவில்லை.

எனக்கே புரியாத புதிராக இருக்கிறது, ஏன் கல்பனாவை ஒதுக்குகிறேன்?

சிந்தித்து சிந்தித்து சட்டென்று ஒரு நினைவு வந்தது. ஒரு வேளை அப்படியும் இருக்குமோ? இருக்கலாம், கண்டிப்பாய் இருக்கலாம், அன்று மேடையில் வைத்து பேசிய பேச்சுக்கள் இப்பொழுது ஞாபகமாய் வருகிறது.

எழுத்தாளர் மாதவன் மிகச்சிறந்த எழுத்தாளர்தான் ஒப்புக்கொள்கிறோம், ஆனால் அவரது எழுத்துக்களை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.

அவரது எல்லா கதாபாத்திரங்களிலும் கல்பனா என்னும் பெயர்தான் தாங்கி நிற்கிறது. கடமை உணர்ச்சி மிக்க பெண்ணாகவோ, அல்லது காவல்துறை சேர்ந்த பெண்ணாகவோ, துணிச்சல் மிகுந்த பெண்ணாகவோ எதை படைத்தாலும் அதற்கு கல்பனா என்னும் பெயரைத்தான் சூட்டுகிறார். அதே போல் எந்த ஆணின் செயலுக்கும் கல்பனாவைத்தான் பின்புலமாக நிறுத்தி கொண்டு போகிறார்.

அதனால் எங்களுக்கு வரும் சந்தேகம் என்னவென்றால் உங்களால் இனி மேல் கல்பனா இல்லாமல் எழுத முடியாதோ என்னும் எண்ணத்தை எங்களுக்கு தோற்றுவித்து விட்டது.

இதை தவறாக நினைக்க வேண்டாம், ஒரு எழுத்தாளனின் படைப்புக்களை விடாது வாசிக்கும் ஒரு வாசகனின் எண்ணமாக நீங்கள் எடுத்து கொள்ளவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஓ…அன்றிலிருந்துதான் இந்த கல்பனாவை எல்லா விதத்திலும் ஒதுக்கி வைக்க முயற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறேன். இப்பொழுது எனக்கு புரிந்தது போல் இருந்தது, கல்பானவின் மேல் இவ்வளவு வெறுப்பு வர. 

தொடர்புடைய சிறுகதைகள்
மாமா ஏதாவது உயில் எழுதிட்டு போயிருக்கிறாரா? கேள்வியிலேயே தமக்கை விமலாவின் பேராசை வெளீப்பட்டதாக தேவகிக்கு தென்பட்டது.இதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள் தேவகி. சிறிது நேரம் தேவகியின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த விமலா அவள் பதில் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
அந்த சிறைச்சாலை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெயர் சொல்லி அழைத்தான் அந்த காவலன். அனைவரும் வரிசையாய் வந்து நின்றனர். ம்..நடங்கள், அவர்கள் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை அவிழ்த்தவன் விரட்டினான். இன்று மன்னரின் தாய் நினைவு நாளாயிறே ! அரசுக்கு எதிராக பேசியவர்களை சுட்டு கொல்ல ...
மேலும் கதையை படிக்க...
“ஆ” இது என்ன சத்தம் ஆண் குரல் போலும் இல்லை, பெண் குரலும் போல் இல்லை, அதுவும் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ! அறைக்குள் படுத்திருந்தாலும் கதவு திறந்து வெளியே வர பயம். ஆனால் அந்த “ஆ” என்ற மயிர்க்கூச்செரியும் சத்தம், ...
மேலும் கதையை படிக்க...
கமலா மதியம் சாப்பாடு கொஞ்சம் தாராளமா வை ! கேள்விக்குரியாய் பார்த்த மனைவியிடம், ஸ்கூல்ல நல்லா படிக்கிற பையன் ஒருத்தன், பாவம் கஷ்டப்படறான், அவனை தினமும் மதியம் வர சொல்லி இருக்கிறேன். பாவம் கஞ்சிதான் தினமும் கொண்டுவர்றான். வேறு ஒன்றும் பேசாமல், மற்றொரு ...
மேலும் கதையை படிக்க...
காலை பனி மூட்டம் மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது நாராயணனுக்கு. கழுத்தில் இருந்த மப்ளரை எடுத்து தலையில் சுற்றிக்கொண்டார். காதில் குளிர் போவது நின்று போனதில் உடல் கொஞ்சம் சூடாய் இருப்பது போல் பட்டது. இருந்தாலும் மூச்சை இழுப்பதில் சிரமம் ஏற்படத்தான் செய்கிறது. இளமை ...
மேலும் கதையை படிக்க...
மும்பையில் உள்ள ஓரளவு புகழ் பெற்ற கட்டடம் கட்டும் கம்பெனியின் உரிமையாளரான பரசுராமன் ஏதோ யோசனையில் இருந்தார். உள்ளே வந்த மேலாளரின் க்கும்...என்ற கணைப்பை கேட்டு சற்று திருக்கிட்டு வாங்க நமசிவாயம், என்றவர் அன்றைய அலுவல்கள் என்னென்ன? என்று கேட்க, நமசிவாயம் அன்றைக்கு ...
மேலும் கதையை படிக்க...
கால்ஷீட் எல்லாம் பேசி முடித்து, சம்பளத்தொகையும் பேசி முடிக்கப்பட்டபின் அந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்காக தயாராக டேபிளின் மேல் வைத்திருந்த ஒயின் கிளாசை தூக்கி பிடித்து காட்டினான் ஷியாம். எதிரில் இருந்த தயாரிப்பாளர் தனபாண்டியன் தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு நான் வருகிறேன் ...
மேலும் கதையை படிக்க...
அன்று சேலத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தேன்.முக்கிய விருந்தாளியே நான் தான். கருத்தரங்கில் அவரவர்கள் தங்களுடைய கருத்துக்கக்களை மேடையில் விளக்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அழைப்பு செல்போனில் வந்தது. எரிச்சலுடன் எடுத்துப்பார்க்க மனைவி. இப்ப மீட்டிங் நடந்துட்டிருக்கு, பத்து நிமிசம் கழிச்சு நானே கூப்பிடுறேன். ...
மேலும் கதையை படிக்க...
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி. வீட்டு எண் 000, காணாமல் போன வீதி, முட்டு சந்து, சின்னூர் மேனேஜர் அவர்களுக்கு தாதா என்று அழைக்கப்படும் ராக்காயி எழுதுவது ! உம்முடைய கடையில் வாங்கிய பீரோ ஒன்று உம்மால் “இது உயர் தரமானது” எளிதில் உடையாது, வளைந்து கொடுக்காது, திறப்பதற்கும், மூடுவதற்கும் சுலபமாய் இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
அன்று கோர்ட்டில் அதிக வேலை இருந்தது, இரண்டு கேஸ் விசயமாக நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது திருமதி லலிதாமணி அவர்களுக்கு! ஆகவே அக்கடாவென தன் அலுவலகத்தில் உட்கார்ந்தவர் தலைசாய்ந்து மெல்லிய குறட்டையுடன் நித்திரையில் மூழ்கிவிட்டார்.அப்பொழுது மணி பகல் இரண்டு இருக்கும். உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
உபயோகமில்லாத தியாகம்
கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள்
“ஆ” வில் ஐந்து
என் தவறு
தன்னையே நினைத்து கொண்டு
தவறு செய்யாமல் குற்றவாளி ஆனவன்
சமரசம்
எனக்கு தெரியாமல்
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி
திருமதி லலிதாமணி M.A,B.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)